Shuru
Apke Nagar Ki App…
தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
Selva
தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.2
- கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.1
- சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் அபராதம்! கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையாளர்... சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகனங்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் பிரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான கண்காணிப்பு அதை திறப்பு விழா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து தானியங்கி கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.1
- முசிறியில் பள்ள வாய்க்கால் பாசனப்பகுதி விவசாயிகள் பாதை கோரி சப் கலெக்டரிடம் மனு. முசிறியில் பள்ள வாய்க்கால் பாசன பகுதி விவசாயிகள் பாதை கோரி சப் கலெக்டரிடம் மனு. முசிறி, ஆக. 25- முசிறி கிழக்கு கிராம பள்ள வாய்க்கால் பெரிய களம் பாதையானது வடக்கு நோக்கி சென்று, பின்னர் மேற்கு நோக்கி செல்லும் வழியாக உள்ளது. மேற்படிப்பாதையில் விவசாயிகள், தங்களது விவசாய நிலத்திற்கு தேவையான இடுபொருட்களை சுமந்தபடி நடந்து சென்று, பணிகளை மேற்கொள்ளவும். மேலும் அறுவடை காலங்களில் அந்த வழியாகவே தானியங்களை தலையில் சுமந்து பணிகளை மேற்கொள்வதால் பள்ள வாய்க்காலின் கிழக்குக்கரை மற்றும் வடக்கு கரை பாதைகளை சர்வே செய்து, வண்டி வாகன உதவியுடன் விவசாய இடுபொருள்களை கொண்டு செல்வதற்கும், விவசாய தானியங்களை வண்டி வாகனத்தில் எடுத்து வருவதற்கும், பாதைகள் அமைத்து, விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டி சப் கலெக்டர் சுசூரி ஸ்வாங்கி குந்தியாவிடம் பள்ள வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.1
- வெள்ளியணை தேவேந்திர நகரில் ஸ்ரீ விநாயகர், மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது மிக சிறப்பாக நடந்து முடிந்தது போல் நியூஸ் வாசிப்பு வாசகம் இதோ: --- *வணக்கம்! இன்றைய ஆன்மீக செய்தி* கரூர் மாவட்டம், வெள்ளியணை வடபாகம், தேவேந்திர நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களான ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாசி பெரியசாமி, ஸ்ரீ பெரியக்காள், ஸ்ரீ மலையாளி திருக்கோயிலின் *மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.* கடந்த ஆவணி 5-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், 216 ஹோம திரவிய ஹோமங்கள், காயத்ரி மந்திர ஜெப ஹோமங்கள், துர்கா பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம் ஆகியவை மிக பக்தி பூர்வமாக நடைபெற்றன. முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் *ஆவணி 7-ஆம் தேதி (24.08.2026) திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்* மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்தூபிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்ட போது, திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தில் மெய்மறந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவை இறையருள் இறைபணியாளர் *பா.கணேஷ் சிவாச்சாரியார்* அவர்களும், *புலிக்குட்டி (எ) குருசரண் பட்டர்* அவர்களும் சிறப்பாக நடத்தி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் வடிவமைப்பாளர் *R.நல்லதம்பி சிற்பி* அவர்கள் மற்றும் விழா குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பெரும் ஆதரவுடன் கும்பாபிஷேக விழா இனிதே நிறைவு பெற்றது.1
- குடிநீர், சாலை வசதி கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு மழைக்காலத்தில் சகதியான சாலையால் அவதி – வீடுகள் மீது சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் அச்சம் குடிநீர் வசதியும், முறையான சாலை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி, காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மொன்னையன் கொட்டாய் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக முறையான குடிநீர் வசதியும், சாலை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுவதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுள்ளது வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும், சாலையின் நடுவே சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது அதேபோல், 10 அடி ஆழத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையிலும், மற்றொரு மின்கம்பம் வீட்டு மீது சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது எனவே, அபாயகரமாக உள்ள மின்கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான மின்கம்பங்களை அமைக்க வேண்டும். மேலும், மழைக்காலத்திலும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் முறையான சாலை வசதியும், தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, மொன்னையன் கொட்டாய் கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் தங்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- சேலத்தில் சிஐடியூ போக்குவரத்து பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பிரிவின் சார்பில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மெய்யனூர் பணிமனை முன்பு, சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம், வாரிசு வேலை, காலிப் பணியிடம் நிரப்புதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.1