Shuru
Apke Nagar Ki App…
பெண்கள் ஆர்த்து எடுத்து புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தனர் பெண்கள் ஆர்த்து எடுத்து புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அதிமுக சார்பாக அருண்மொழிதேவன் எம் எல் ஏ மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். புவனகிரி தொகுதி முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பாக பொதுமக்கள் இடத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். புவனகிரி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் வாக்கு சேகரிக்க வரும்பொழுது அந்த ஒரு கிராம பெண்கள் வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு ஆர்த்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர். பின்பு அதிமுக தேர்தல் வாக்கு உறுதி குறித்து பொதுமக்களிடத்தில் பேசி வாக்கு சேகரித்தார்.
Vembarasi. A
பெண்கள் ஆர்த்து எடுத்து புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தனர் பெண்கள் ஆர்த்து எடுத்து புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அதிமுக சார்பாக அருண்மொழிதேவன் எம் எல் ஏ மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். புவனகிரி தொகுதி முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பாக பொதுமக்கள் இடத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். புவனகிரி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் வாக்கு சேகரிக்க வரும்பொழுது அந்த ஒரு கிராம பெண்கள் வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு ஆர்த்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர். பின்பு அதிமுக தேர்தல் வாக்கு உறுதி குறித்து பொதுமக்களிடத்தில் பேசி வாக்கு சேகரித்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக, பிரபல நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து நடிகர் பெஞ்சமின் கூறும் போது அமைச்சர் ஈடுபட்ட தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.1
- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, பழைய கோட்டை கிராமம் புறத்தாகுடியை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் ஜாஸ்மின் அந்தோணி பிரியா (40). இவர் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை அந்தோணி கடந்த 2000 ஆம் ஆண்டும், தாயார் ஆரோக்கியமேரி கடந்த 2016 ஆம் ஆண்டும் இறந்துவிட்ட நிலையில், அவரின் பெரியப்பா மகனான ஜான்பால்ராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று 20.04.2026 மதியம் சுமார் 15:30 மணியளவில் தனது வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்லும் போது, சுமார் 2½ அடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார். இதை அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- தயாராக இருங்கள் #admk #KPK #kp1
- மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியோ அல்லது பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவித்ததாகவோ கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வித்யா ராணியை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.1
- மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா. ராகேஷ், மலைப்பகுதி கிராமங்களில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது பொதுமக்களை சந்தித்து பேசிய ராகேஷ், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வன உரிமைச் சான்று தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தச் சான்றுகளை வழங்கும் பெயரில், ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை பணம் வசூலிக்கப்பட்டதாக மக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வழங்கப்பட்டுள்ள வன உரிமைச் சான்றுகள் முறையான பட்டாவாக இல்லாமல், மக்களை ஏமாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதனால் மலைப்பகுதி மக்கள் உரிய நில உரிமையை பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னை மக்கள் தேர்வு செய்து வெற்றி பெறச் செய்தால், தற்போதைய வன உரிமைச் சான்றுகளை சரிபார்த்து, வருவாய்த் துறை மூலம் சட்டப்படி நில பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மக்களின் நில உரிமை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த பிரச்சாரம் மலைப்பகுதி மக்களிடையே கவனம் ஈர்த்ததுடன், தேர்தல் களத்தில் புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.1
- சேலம் கோரிமேட்டில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு பாமக தலைவர் அன்புமணி, சேலம் வடக்கு தொகுதியில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரன் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளார், கொள்ளையடிப்பவர்களுடன் கூட்டி வைத்துக் கொண்டு கமிஷன் வாங்கி அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டுக் கொண்டு உள்ளார். இந்தத் தொகுதி முன்னேற்றத்திற்காக இதுவரை எந்த நன்மையும் செய்யாத அவர், மறுபடியும் தேர்தலில் நிற்பதற்கு உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் அவரை துரத்தி அடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு #news #press1