Shuru
Apke Nagar Ki App…
சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு #news #press
Arasu Malar Editor V.Balamurugan
சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு #news #press
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Personal Fitness kuwait jabriya6
- தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாமக ராமதாஸ் அணி வாணியம்பாடி வேட்பாளர் அன்பரசு இன்று (ஏப்ரல் 20) வாக்கு சேகரிக்கும் பணிகள் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் பூக்கள் தூவி பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் பூவிருந்தநல்லூர் பகுதியில் சேர்ந்த விவசாயியான ஆள வந்தார் அவர்கள் கேமிரா சின்னத்திற்கு வாக்கு கேட்டு முக்கிய கடைவீதிகளில் தனது ஆதரவாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக காட்டெருமைகள் கிராமப்புற விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் நெல்,சோளம்,மரவள்ளிக்கிழங்கு,தக்காளி,பீன்ஸ்,மிளக,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்களில் நுழைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அழித்து வருகின்றன. குறிப்பாக கரியாலூர் ஊராட்சிக்குட்பட்ட புளுவப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளிக்கிழங்கு, நெற்பயிர் மற்றும் மிளகு செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் நாசமாகி, பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “ஒரு வருட உழைப்பும் ஒரு இரவில் அழிகிறது” என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதேபோன்ற சம்பவம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவடிப்பட்டு பகுதியில் ஏற்பட்டதாகவும், அப்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். “அப்போது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது மீண்டும் மீண்டும் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கும்” எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவு நேரங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் இருந்தால், கல்வராயன் மலைப்பகுதி விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.1
- ஊத்தங்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமிக்கு, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.குப்புசாமி அவர்களை ஆதரித்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களுக்கு மத்தியில் முதலமைச்சர் திமுக ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் அவரைப் போல கர்நாடகாவிலும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் குப்புசாமிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் அதனால் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் தே.மதியழகன் ஒய் பிரகாஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரகு, திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்ந்த ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.1
- கிருஷ்ணகிரிபுதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் செல்லக்குமாருக்கு ஆதரவு கேட்டு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கேசிவக்குமார் அவர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் இந்தபிரச்சாரத்தின் போதுகிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பருகூர் வேட்பாளர் மதியழகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ,கூட்டணிக் கட்சிபலர் கலந்து கொண்டனர்1
- Post by Arasu Malar Editor V.Balamurugan1
- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கேத்தாண்டப்பட்டி புத்துக்கோவில் தேக்கப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.1
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பாண்டியன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சிதம்பரம் கஞ்சி தொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வார்த்தை சேகரிப்பில் ஈடுபட்டார்1