logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் பணிகள் மிகத் தீவிரமடைந்துள்ளன. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்களை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, அனைத்துப் பறக்கும் படை வாகனங்களிலும் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

7 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
7 hrs ago

மணப்பாறையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் பணிகள் மிகத் தீவிரமடைந்துள்ளன. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்களை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, அனைத்துப் பறக்கும் படை வாகனங்களிலும் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் வாகன சோதனை சாவடியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா என்று சோதனை செய்த குளித்தலை போலீசார்
    1
    தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் வாகன சோதனை சாவடியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா என்று சோதனை செய்த குளித்தலை போலீசார்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    16 hrs ago
  • ஐயா எங்கு ஊரில் சிந்தாமணிப்பட்டி அருகில் சிந்தாமணிப்பட்டி டு பாளையம் நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி
    3
    ஐயா 
எங்கு ஊரில்
சிந்தாமணிப்பட்டி அருகில் 
சிந்தாமணிப்பட்டி டு பாளையம்
நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் 
கேட்டுக்கொள்கிறோம் 
நன்றி நன்றி நன்றி
    user_ம ஜ க தாஜ்தின்
    ம ஜ க தாஜ்தின்
    Krishnarayapuram, Karur•
    2 hrs ago
  • திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    43 min ago
  • Post by Natarajan Pitchaimani
    1
    Post by Natarajan Pitchaimani
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் ரத்ததான குழுவினர் மாவட்டம் முழுவதும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரத்த தானம், உடல் தானம், கண் தானம் போன்ற விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் அவர்களின் இன்றைய விழிப்புணர்வு வீடியோ.
    1
    திண்டுக்கல் ரத்ததான குழுவினர் மாவட்டம் முழுவதும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரத்த தானம், உடல் தானம், கண் தானம் போன்ற விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் அவர்களின் இன்றைய விழிப்புணர்வு வீடியோ.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 min ago
  • மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    3
    மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல்
மதுரை, மார்ச் 16 –
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி மாநகர் முழுவதும் திமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முசிறி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என திமுக சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருச்சி மாநகர் முழுவதும்  திமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முசிறி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என திமுக சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.