Shuru
Apke Nagar Ki App…
டூவீலரில் சென்றவர் அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Usha arun News
டூவீலரில் சென்றவர் அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More news from Karur and nearby areas
- கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது1
- திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பறக்கும் படை மற்றும்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணாமலை (59) இவரது மனைவி விஜயா (57) மற்றும் அண்ணாமலை சகோதரி மீனாட்சி (60) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 6 ம் தேதி சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ,நேபாளம் சுற்றுலா சென்று விட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலி நேபாளம் நாட்டின் சித்வான் மாவட்டத்தில் (Chitwan District) மனோக்காம் பகுதியில் சாலை விபத்தில் பலி மொத்தம் 25 பேர் சுற்றுலா சென்ற நிலையில் 7 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர், காயமடைந்த 9 பேர் சித்வான் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் உயிரிழந்தவர்கள் உடல் சித்வான் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2ஆண்கள் 5 பெண்கள் எனமொத்தம் ஏழு பேர் பலியாகி உள்ளனர் 1)முத்துக்குமார் , 2)அண்ணாமலை 3)மீனாட்சி, 4)சிவகாமி, 5)விஜயா, 6)மீனா, 7)தமிழரசி1
- *சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்* மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது காற்றுக்கு மளமளவென பரவி குடோனில் பற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்த தீ குடோன் முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் SSO கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நான்கிருக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளை வரவைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடவுன் முழுவதும் எரிந்து தீக்கிரையாகி விட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. எரிந்த பொருட்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என குடோன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இஸ்ரத் சார்பு ஆய்வாளர்கள் மணிமாறன் தமிமுன்அன்சாரி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் பாபு வருவாய் ஆய்வாளர் வீரசெழியன் சத்தியமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி தலையாரி துரைராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சுலைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்4
- தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் பணிகள் மிகத் தீவிரமடைந்துள்ளன. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்களை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, அனைத்துப் பறக்கும் படை வாகனங்களிலும் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.1
- கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான பிஜேபி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது1
- திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் தலைமையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடைபெற்றது. காமராசர் சிலையிலிருந்து மாநகராட்சி வரை, அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தியில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன முறையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.1