Shuru
Apke Nagar Ki App…
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது
கருணாநிதி
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாநகர் முழுவதும் திமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முசிறி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என திமுக சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் ரத்ததான குழுவினர் மாவட்டம் முழுவதும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரத்த தானம், உடல் தானம், கண் தானம் போன்ற விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் அவர்களின் இன்றைய விழிப்புணர்வு வீடியோ.1
- Post by Natarajan Pitchaimani1
- சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகளின் மக்களுக்கு 12-லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் தொடர்ந்து 44-ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் முகம்மதுகாசிம், செயலாளர் அன்வர்அலி, பொருளாளர் சபிர்அஹமது, இராஜகிரி ஹனபி பெரியபள்ளிவாசலின் ஜமாஅத் தலைவர் யூசுப்அலி, துணைத் தலைவர் முகம்மதுரபி, செயலாளர் முகம்மது சுல்தான், பொருளாளர் மொல்லா முகம்மது பாரூக் உட்பட ஜமாஅத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் ராஜகிரி மற்றும் பண்டாரவாடை பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு தேவையான ஆடைகள், அரிசி மற்றும் மளிகை பொருள்கள் ரமலான் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..1
- கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான பிஜேபி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது1
- தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் பணிகள் மிகத் தீவிரமடைந்துள்ளன. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்களை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, அனைத்துப் பறக்கும் படை வாகனங்களிலும் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.1
- திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் தலைமையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடைபெற்றது. காமராசர் சிலையிலிருந்து மாநகராட்சி வரை, அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தியில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன முறையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.1