logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராஜகிரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு ரமலான் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகளின் மக்களுக்கு 12-லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..  முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் தொடர்ந்து 44-ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் முகம்மதுகாசிம், செயலாளர் அன்வர்அலி, பொருளாளர் சபிர்அஹமது, இராஜகிரி ஹனபி பெரியபள்ளிவாசலின் ஜமாஅத் தலைவர் யூசுப்அலி, துணைத் தலைவர் முகம்மதுரபி, செயலாளர் முகம்மது சுல்தான், பொருளாளர் மொல்லா முகம்மது பாரூக் உட்பட ஜமாஅத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில்  ராஜகிரி மற்றும்  பண்டாரவாடை பகுதியை சேர்ந்த  ஏழை, எளிய குடும்பங்களுக்கு தேவையான ஆடைகள், அரிசி மற்றும் மளிகை பொருள்கள் ரமலான் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..

7 hrs ago
user_சிவகுமார்.மு
சிவகுமார்.மு
பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
7 hrs ago

ராஜகிரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு ரமலான் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகளின் மக்களுக்கு 12-லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..  முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் தொடர்ந்து 44-ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் முகம்மதுகாசிம், செயலாளர் அன்வர்அலி, பொருளாளர் சபிர்அஹமது, இராஜகிரி ஹனபி பெரியபள்ளிவாசலின் ஜமாஅத் தலைவர் யூசுப்அலி, துணைத் தலைவர் முகம்மதுரபி, செயலாளர் முகம்மது சுல்தான், பொருளாளர் மொல்லா முகம்மது பாரூக் உட்பட ஜமாஅத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில்  ராஜகிரி மற்றும்  பண்டாரவாடை பகுதியை சேர்ந்த  ஏழை, எளிய குடும்பங்களுக்கு தேவையான ஆடைகள், அரிசி மற்றும் மளிகை பொருள்கள் ரமலான் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..

More news from Karur and nearby areas
  • கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    16 hrs ago
  • திருச்சி மாநகர் முழுவதும் திமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முசிறி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என திமுக சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருச்சி மாநகர் முழுவதும்  திமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முசிறி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என திமுக சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
    1
    சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    40 min ago
  • Post by Natarajan Pitchaimani
    1
    Post by Natarajan Pitchaimani
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    3
    மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல்
மதுரை, மார்ச் 16 –
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான பிஜேபி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான பிஜேபி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    17 hrs ago
  • தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் பணிகள் மிகத் தீவிரமடைந்துள்ளன. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்களை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, அனைத்துப் பறக்கும் படை வாகனங்களிலும் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
    1
    தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் பணிகள் மிகத் தீவிரமடைந்துள்ளன. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்களை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, அனைத்துப் பறக்கும் படை வாகனங்களிலும் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளதை தொடர்ந்து, சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் மற்றும் அரசு சார்ந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் கருணாநிதி புகைப்படங்களும் அரசு அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதனால் இன்று மாலையில் இருந்தே சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் அரசியல் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் புகைப்படங்களை அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
    1
    தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளதை தொடர்ந்து, சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் மற்றும் அரசு சார்ந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் கருணாநிதி புகைப்படங்களும் அரசு அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதனால் இன்று மாலையில் இருந்தே சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் அரசியல் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் புகைப்படங்களை அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.