பெண்களிடையே ஆரம்ப நிலை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த நவீன மார்பக மையம்: ஐஸ்வர்யா மருத்துவமனை திறந்தது ~ வேகமாக மற்றும் துல்லியமாக கண்டறிய அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம் அறிமுகம் 10 ஆகஸ்ட் 2025 இடம் : ஓ.எம்.ஆர். சாலை, தரமணி, காலை 10:30 மணிக்கு பெண்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் விதமாக மார்பக புற்று நோய் குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மார்பக மையத்தை ஐஸ்வர்யா மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. ஐஸ்வர்யா மார்பக மையம், டோமோசிந்தசிசுடன் கூடிய மேம்பட்ட 3D டிஜிட்டல் மேமோகிராபி தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது அடுத்த தலைமுறை இமேஜிங் தொழில்நுட்பமாகும், இதன் மூலம் புற்றுநோய் கட்டிகளை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிந்து சிறப்பான சிகிச்சை அளித்து நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த மையம், வழக்கமான மார்பகப் பரிசோதனைகள், அது சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் குடும்ப பின்னணி அடிப்படையிலான பாதிப்புகள் உள்ளிட்ட, அனைத்திற்கும் தரமான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மார்பக பரிசோதனை செய்வதை பெண்களிடையே வலியுறுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்று இம்மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து சிறப்பு விருந்தினர் சின்மயி ஸ்ரீபாதா கூறுகையில், பெண்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வு பற்றி வெளிப்படையாகப் பேசி வரும் நான், ஆரம்பகால பரிசோதனை எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு அறிவேன். மார்பக ஆரோக்கியம் குறித்த வதந்திகள் முடிவுக்கு வர வேண்டும், மேலும் இது போன்ற மையங்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறேன். அதிகமான பெண்கள் தயக்கமின்றி இங்கு வந்து, அவர்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு சரியான ஆலோசனைகளை பெற்று, தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார். மார்பக மையம் திறக்கப்பட்டு இருப்பது குறித்து, ஐஸ்வர்யா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் புற்றுநோயியல் பிரிவு இயக்குனர், டாக்டர். எஸ். ராஜசுந்தரம் கூறுகையில், இந்தியப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் என்பது மிகவும் பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு மார்பக புற்று நோய் உள்ளது. இதற்கு காரணம், போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தாமதமான பரிசோதனை ஆகியவை ஆகும். மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட 50 சதவீதம் பேர் அது முற்றிய நிலையில் கண்டறியப்படுகிறார்கள். எனவே இதை ஆரம்ப நிலையில் கண்டறியும்போது அதை எளிதாக குணப்படுத்த முடியும். எனவே அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே நாங்கள் மார்பக மையத்தை திறந்துள்ளோம். மேலும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும்போது நோயாளி உயிர் பிழைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இருப்பினும், பயம், களங்கம் அல்லது போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் பல பெண்கள் இன்னும் வழக்கமான பரிசோதனைகளை செய்யத் தயங்குகிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள். இந்த மையத்தில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிநவீன 3D மேமோகிராபியைப் பயன்படுத்தி சரியான நேரத்தில், துல்லியமான மற்றும் வலியற்ற பரிசோதனை செய்யப்படும். தாமதமாக நோயை கண்டறிவதன் மூலம் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் மார்பக பரிசோதனை செய்வது மிகவும் நல்லது என்று தெரிவித்தார். ஐஸ்வர்யா மார்பக மையத்தின் இயக்குனர் டாக்டர் தீபா சேகு கூறுகையில், ஆல்-இன்-ஒன் மார்பக மையம் என்பது காலத்தின் கட்டாயமாகும். மார்பக விழிப்புணர்வு, மார்பக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதே ஐஸ்வர்யா மார்பக மையத்தின் முக்கிய குறிக்கோள் என்று தெரிவித்தார். ஐஸ்வர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் முத்துவேல் கூறுகையில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பார்வையை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு பெண்ணும் தாமதமோ அல்லது தயக்கமோ இல்லாமல் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையைப் பெற தகுதியானவர்கள். இந்த மையம் மருத்துவ சிறப்பையும் நோயாளிக்கான ஆறுதலையும் ஒருங்கே கொண்டுள்ளது. இங்கு வெறும் மருத்துவ பரிசோதனைகள் மட்டும் செய்யப்படாமல் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு சிறப்பான பதில்களுடன் சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்கு தேவையான ஆதரவை இந்த மையம் வழங்கும் என்று தெரிவித்தார். ஐஸ்வர்யா மார்பக மையம் 3D டிஜிட்டல் மேமோகிராபி, மார்பக கட்டிகள் மற்றும் வலிக்கான ஆலோசனைகள், மார்பகப் புற்றுநோயின் குடும்ப பின்னணி கொண்ட பெண்களுக்கான பரிசோதனை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மதிப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட மருத்துவ சேவைகளை வழங்கும்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- சோழவரம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- Post by Vijay Kumar1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1