காரிமங்கலம்: தும்பலஅள்ளி அணையின் மதகு இரும்பு சங்கிலி திருட்டு - போலீசார் விசாரணை காரிமங்கலம் அருகே தும்பல அள்ளி அணையில் இரும்பு சங்கிலி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பல அள்ளி அணை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தும்பல அள்ளி அணை, சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், தும்பல அள்ளி அணை வறண்ட நிலையில் உள்ளது. அணை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை பொதுப்பணித்துறை வசம் உள்ள நிலையில், மலையில் உள்ள மதகுகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுப்பணித்துறையின் வசம் உள்ள அணையின் மதகுகளில் இரும்பு சங்கிலி மாயமானது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. காணாமல் போன இரும்பு சங்கிலி சுமார் 250 கிலோ எடை உள்ளது. பாதுகாப்பு மிக்க அணையில் இரும்பு சங்கிலி மாயமானது அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்பட்டதே மதகின் இரும்பு சங்கிலி காணாமல் போனதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம்: தும்பலஅள்ளி அணையின் மதகு இரும்பு சங்கிலி திருட்டு - போலீசார் விசாரணை காரிமங்கலம் அருகே தும்பல அள்ளி அணையில் இரும்பு சங்கிலி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பல அள்ளி அணை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தும்பல அள்ளி அணை, சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், தும்பல அள்ளி அணை வறண்ட நிலையில் உள்ளது. அணை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை பொதுப்பணித்துறை வசம் உள்ள நிலையில், மலையில் உள்ள மதகுகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுப்பணித்துறையின் வசம் உள்ள அணையின் மதகுகளில் இரும்பு சங்கிலி மாயமானது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. காணாமல் போன இரும்பு சங்கிலி சுமார் 250 கிலோ எடை உள்ளது. பாதுகாப்பு மிக்க அணையில் இரும்பு சங்கிலி மாயமானது அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்பட்டதே மதகின் இரும்பு சங்கிலி காணாமல் போனதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாள் விழா தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கப்பட்டது தர்மபுரி செப் 15 தமிழகமெங்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இன்று தர்மபுரியில் திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே ராஜகோபால் பூங்கா அருகில் இருந்து ஊர்வலமாக வந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ ஊர்வலமாக வந்து நான்கு ரோட்டில் அமைந்துள்ள பேரரசு அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு சிலைக்கு தர்மபுரி திமுக நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- தமிழக கட்சி கழகம் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா அமைச்சர் ! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தமிழக வெற்றிக்கழக 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சிகள் இணையம் விழா திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் மாற்றுக் கட்சியின் விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்கள்.2
- ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.1
- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.4
- கோபிச்செட்டிப்பாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் உள்ளது, வட இந்தியர்கள் கூட தமிழக முதலமைச்சரை போல ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என கோபிச்செட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகத் தேர்தல் களத்தில் முதலில் 1967, அதற்குப் பிறகு 1977 என்று கூறி, 2026-இல் தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டார்கள். இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேலை நாடுகளுக்குசென்று, 11,000 கோடி அளவுக்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார். தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும்; கூடுதலாக இடம்பெற வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் சட்ட ஒழுங்கு பேணிக் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய முதலமைச்சராக விஜய் விளங்குகிறார். முதலமைச்சரை பொறுத்தவரையில், தூய்மையான ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று சொன்ன ஒரே தலைவர் விஜய் ஆவார். அனைத்து மாநிலங்களும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. பிற மாநில மக்கள் கூட, தமிழக விஜய் அவர்களைப் போல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் என்று பேசுகின்றனர். ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து, 14, கூட்டணி ,17 கூட்டணிக் கட்சிகள் உள்ள சூழ்நிலையிலும், தனித்து நின்று வெற்றிபெறக்கூடிய ஒரு இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. ஒரு இயக்கத்தில் இருப்பவர்கள் கொள்கை ரீதியாக என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ, அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது; அது அவரவர் விருப்பம். எங்களை பொறுத்தவரையில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று; அதே நேரத்தில், வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ,முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை வார்த்தைகள் பேசியது குறித்து , அவர் இதே வேலையைத் தான் செய்து வருகிறார். ஜெயலலிதா இருக்கும் போதும், அவருக்கு பிறகும் ஆ. ராசா இதுபோன்ற வார்த்தைகளை தான் உச்சரித்து வருகிறார். பேரறிஞர் அண்ணாவின் கனவு என்னவென்றால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதுதான். தொடர்ந்து மின் நுகர்வு அதிகரித்து வருவது குறித்து, தமிழகத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த 20 நாட்களாக நம்மைவிட கூடுதலாக மின்வெட்டு அங்கு நிலவுகிறது; மின் பற்றாக்குறை உள்ளது. அதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எங்கெல்லாம் பற்றாக்குறை உள்ளதோ அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத் துணை மின் நிலையங்களை ஆய்வு செய்து வருகிறார். சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அதை இரவு நேரங்களில் சேமித்து வைப்பதற்கான வழிகளை தேர்வு செய்து வருகிறார். அவை செயல்பாட்டிற்கு வரும்போது, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். வருவாய்துறையில் உள்ள காலி பணியிடங்களில் உதவிப் பணியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் போன்ற பணியிடங்கள் தேவையான அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளன. உதவி பணியாளர்கள் பணியிடங்கள், திமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் தேர்வு செய்யப்பட்டபோது விதிகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்பட்டதால், அதன்பிறகு தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இரண்டு மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சூப்பர் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது, சென்னை மாநகரம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர்கள் தலைமைப் பொறுப்பேற்று, 7 அமைச்சர்கள் கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்டனர். 9 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் அறிந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர். வருவாய்த் துறையில் பணியாளர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் மெட்ரிக் முறையில் மாற்றப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். பட்டினப்பாக்கத்தில் சட்டமன்ற அலுவலகம் அமைப்பது போன்ற எந்தத் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அங்கு நான்கு ஏக்கர் நிலம் மட்டும்தான் உள்ளது, அது போதாது என்ற நிலையில், கர்நாடகாவில் இருப்பதைப் போல அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காலம் செல்லசெல்ல முதலமைச்சரே அதை பற்றி முடிவு செய்வார். வறட்சி காலத்தில் கால்நடைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வேண்டிய பராமரிப்புகளை மேற்கொள்வதற்கும், வைக்கோல் வாங்குவதற்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. வறட்சி வரும் காலத்தில் சூழலை ஆராய்ந்து, மனதில்கொண்டு அதற்கான முடிவுகளை எடுக்க 283 கோடி பகிர்ந்து வழங்கப்படும்.1
- அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரியில் அதிமுக சார்பில் பெரியார் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று நான்கு ரோட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் டி ஆர் அன்பழகன் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது கட்சித் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என்று கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில்.. அதிமுக கழக இணை செயலாளர் டி கே ராஜேந்திரன் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல். ஒன்றிய கழக செயலாளர் என் ஜி ஏ சிவ பிரகாசம் பழனி, மதிவாணன் முன்னாள் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி. . தர்மபுரி நகர துணை செயலாளர். அறிவொளி. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அருள்சாமி. நகர மன்ற உறுப்பினர்கள். சத்யா கார்த்திக் தேவா செந்தில். மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- விநாயகர் சதுர்த்தியில் மத நல்லிணக்கம் – விநாயகருக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் கற்பூர ஆரத்தி தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விநாயகர் சிலைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதனிடையே, தருமபுரி ராஜகோபால் கவுண்டர் தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. மோட்டார் மெக்கானிக் சங்கம் மற்றும் விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டு விநாயகர் சிலைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார். மதங்களை கடந்து சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். இதில் ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதேபோல் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.1
- ராசிபுரத்தில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி ...... இராசிபுரம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்வெட்டு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதிலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மழைக்கால சூழல் நிலவி வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சாலைகளிலும் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிந்து, மின்விநியோகத்தை சீராக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1