logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராசிபுரத்தில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி ...... இராசிபுரம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்வெட்டு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதிலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மழைக்கால சூழல் நிலவி வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சாலைகளிலும் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிந்து, மின்விநியோகத்தை சீராக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 hr ago
user_Aravinth
Aravinth
ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
1 hr ago

ராசிபுரத்தில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி ...... இராசிபுரம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்வெட்டு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதிலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மழைக்கால சூழல் நிலவி வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சாலைகளிலும் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிந்து, மின்விநியோகத்தை சீராக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
    1
    மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
    1
    முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர்.

முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர்  அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்
    1
    தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள்  நடைபெற்று  சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    1
    தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    6 hrs ago
  • தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..! தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..! தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் நேஷனல் லோக் அதாலத் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச அடிப்படையிலும் தீர்த்து வைப்பதற்காக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகளில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 1,979 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,870 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 91 லட்சத்து 89 ஆயிரத்து 214 மதிப்பிலான சமரசத் தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கி வாராக்கடன் தொடர்பான 265 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 101 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 148 மதிப்பிலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம், மொத்தம் 2,244 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 1,971 வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதற்கான மொத்த சமரசத் தொகை ரூ.17 கோடியே 58 லட்சத்து 99 ஆயிரத்து 362 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலம், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், வழக்கில் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனடியாக வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது என்பதுடன், இதில் வெற்றி பெற்றவர், தோல்வியடைந்தவர் என்ற நிலை இல்லாமல் இரு தரப்பினரின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால், அவற்றையும் விசாரித்து நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், நீதித்துறை ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..!
தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..!
தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் நேஷனல் லோக் அதாலத் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச அடிப்படையிலும் தீர்த்து வைப்பதற்காக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகளில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 1,979 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,870 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 91 லட்சத்து 89 ஆயிரத்து 214 மதிப்பிலான சமரசத் தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கி வாராக்கடன் தொடர்பான 265 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 101 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 148 மதிப்பிலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம், மொத்தம் 2,244 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 1,971 வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதற்கான மொத்த சமரசத் தொகை ரூ.17 கோடியே 58 லட்சத்து 99 ஆயிரத்து 362 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலம், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், வழக்கில் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனடியாக வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது என்பதுடன், இதில் வெற்றி பெற்றவர், தோல்வியடைந்தவர் என்ற நிலை இல்லாமல் இரு தரப்பினரின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது.
மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால், அவற்றையும் விசாரித்து நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், நீதித்துறை ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    7 hrs ago
  • தனியார் கல்லூரி வாகனம் லாரியின் மீது மோதி விபத்து 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்
    1
    தனியார் கல்லூரி வாகனம் லாரியின் மீது மோதி விபத்து 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • வணிக சிலிண்டர் விலை  உயர்வால் ராக்கெட் விறகு  அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள் இராசிபுரம் : கேஸ்  தட்டுப்பாடு மற்றும்  வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு  மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும்  வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில்,  வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார். ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    1
    வணிக சிலிண்டர் விலை  உயர்வால் ராக்கெட் விறகு  அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள்
இராசிபுரம் :
கேஸ்  தட்டுப்பாடு மற்றும்  வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு  மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும்  வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில், 
வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார்.
ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: 300-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கல்... ராசிபுரம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் நகரம் 23-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா. கார்த்திக் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவுவழங்கப்பட்டது.
    1
    பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: 300-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கல்...

ராசிபுரம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் நகரம் 23-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா. கார்த்திக் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவுவழங்கப்பட்டது.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர் ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    1
    முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர்  ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.