வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராக்கெட் விறகு அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள் இராசிபுரம் : கேஸ் தட்டுப்பாடு மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில், வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார். ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராக்கெட் விறகு அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள் இராசிபுரம் : கேஸ் தட்டுப்பாடு மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில், வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார். ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.1
- மாற்றுக் கட்சியில் இணையும் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் விரைவில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் பணி செய்ய உள்ளதாகவும், தன்னோடு இது நாள் வரை தோளோடு தோள் கொடுத்து பயணித்த அனைவருக்கும் பதவியை பெற்று தருவேன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், தேர்தலுக்கு இன்னும் பல காலங்கள் உள்ளதால் பொறுமையுடன் தனது அறிவிப்பை அனைவரும் இயக்கத்தக்க வகையில் வெளியிடுவேன் என முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.1
- ஆத்தூரில் தங்க கவசத்தில் அருள் பாலித்த வெள்ளப் பிள்ளையார். சேலம் மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் இன்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னதாக பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றப்பட்டு, பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தங்க கவசத்தில் வெள்ளப் பிள்ளையார் அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகரித்து வருகிறது.2
- கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- 118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை கரூர்: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.1