logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எடையார் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்தின் 101 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா மிக விமர்சையாக கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன

1 hr ago
user_Dhamodharan R
Dhamodharan R
காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
1 hr ago
29f2e40f-3fc2-4f02-af51-48cc3c54f193

காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எடையார் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்தின் 101 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா மிக விமர்சையாக கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன

More news from Tamil Nadu and nearby areas
  • நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது
    1
    நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    3 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு  கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்  நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர்,  அகிலாண்டேஸ்வரி அம்பாளை,  தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
    1
    குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்  நடந்தது 
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான
அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது.
அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர்,  அகிலாண்டேஸ்வரி அம்பாளை,  தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். 
தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக  தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும்,  அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு  கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்   என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    29 min ago
  • திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான அவர்கள் இன்று நடைப்பயிற்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முக்கிய நிகழ்வுகள்: திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் அவர்கள் காந்திமார்கட் பகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன்: திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு * திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.
    1
    திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான அவர்கள் இன்று  நடைப்பயிற்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
முக்கிய நிகழ்வுகள்:
திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் அவர்கள் காந்திமார்கட் பகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன்:
திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு * திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  மாநகரக் கழகச் செயலாளர் 
மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில்  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • சேலம் அம்மாபேட்டை ராமலிங்க சுவாமி தெருவில், 43 ஆம் ஆண்டு காவிரி திருவிழா இன்று அப்பகுதியில் விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து சுப்பிரமணியர் கோவிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் கோவில் தலைவர் ஜெயமணி, சௌந்தரராஜன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
    1
    சேலம் அம்மாபேட்டை ராமலிங்க சுவாமி தெருவில், 43 ஆம் ஆண்டு காவிரி திருவிழா இன்று அப்பகுதியில் விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து சுப்பிரமணியர் கோவிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் கோவில் தலைவர் ஜெயமணி, சௌந்தரராஜன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • ​2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்  _________ தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    1
    ​2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் 
_________
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார்.
காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    11 min ago
  • விராலிமலை தொகுதியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான மத்திய அரசு வழக்கறிஞர் மீது பா.ஜ.க வினர் தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரபரப்பு பேட்டி
    1
    விராலிமலை தொகுதியில்
சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான மத்திய அரசு வழக்கறிஞர் மீது பா.ஜ.க வினர் தாக்குதலுக்கு உள்ளான 
வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரபரப்பு பேட்டி
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.