மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அனைத்து வார்டு பகுதிகளிலும் வீடுகளுக்கு குடிநீர் செல்லும் பைப் லைன் மற்றும் வாழ்வு அமைக்கும் பணி சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு செய்யப்பட்டது. ஆனால், இந்த பைப் லைன்களில் தண்ணீர் வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று ஒரு கவுன்சிலர் தெரிவித்துள்ளார். வாடிப்பட்டி சந்தை பாலத்திலிருந்து போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் வாழ்வு அமைத்து, அதற்கு மூடி போடாமல் ஒப்பந்ததாரர் பணியை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. குறிப்பாக, கோவிந்தன் விறகுகடை அருகே உள்ள மூடி இல்லாத குழிக்குள் விழுந்து வாகனங்களில் வருபவர்களும் நடந்து செல்பவர்களும் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். விதிமுறைப்படி குழிகளுக்கு மூடி போடுவது ஒப்பந்ததாரரின் பணி என்ற நிலையில், இதனை செய்யாமல் போனதை பேரூராட்சி நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சிய போக்கினால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதோடு, உயிர்பலி ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உயிர்பலி ஏற்படும் முன்பாக உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அனைத்து வார்டு பகுதிகளிலும் வீடுகளுக்கு குடிநீர் செல்லும் பைப் லைன் மற்றும் வாழ்வு அமைக்கும் பணி சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு செய்யப்பட்டது. ஆனால், இந்த பைப் லைன்களில் தண்ணீர் வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று ஒரு கவுன்சிலர் தெரிவித்துள்ளார். வாடிப்பட்டி சந்தை பாலத்திலிருந்து போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் வாழ்வு அமைத்து, அதற்கு மூடி போடாமல் ஒப்பந்ததாரர் பணியை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. குறிப்பாக, கோவிந்தன்
விறகுகடை அருகே உள்ள மூடி இல்லாத குழிக்குள் விழுந்து வாகனங்களில் வருபவர்களும் நடந்து செல்பவர்களும் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். விதிமுறைப்படி குழிகளுக்கு மூடி போடுவது ஒப்பந்ததாரரின் பணி என்ற நிலையில், இதனை செய்யாமல் போனதை பேரூராட்சி நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சிய போக்கினால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதோடு, உயிர்பலி ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உயிர்பலி ஏற்படும் முன்பாக உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், தமிழக முதல்வர் விஜய்க்குப் பல காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் விஜய் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்திருந்தால், அவர்கள் உருப்படியான யோசனைகளை வழங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் நம்பிக்கையை இவ்வாறு சிதைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் உதயகுமார், வேலை தேடி வரும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைத் தெருக் கோடியில் நிற்க வைக்கலாமா என்றும் முதல்வர் விஜய்யை நோக்கிக் கடுமையாக வினவியுள்ளார்.1
- தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கடந்த ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் குடோன் வைக்கப்பட்டிருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், குப்பைகளுடனும் சுகாதாரமற்று இருந்ததைக் கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா? உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அங்கிருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார். இதனைத் தொடர்ந்து, வளாகத்தில் உள்ள இரண்டு கிட்டங்கிகளிலும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு, எடை, சுகாதாரம் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றைச் சரிபார்த்தார். மேலும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் உணவுப் பொருள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து, அவர்கள் வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பருப்பு, சீனி மற்றும் மைதா ஆகியவற்றை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்குகள் மிகவும் தரமற்றதாகவும், சேதமடைந்தும், பழையதாகவும் இருந்ததைக் கண்ட அமைச்சர், அவற்றை உடனடியாக மாற்றி, தரமான பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருள் பைகள் மிகவும் தரமற்று இருப்பதாக ஊழியர்கள் தனக்கு அனுப்பிய ஆடியோ புகாரை, அங்கிருந்த பணியாளர்களிடமே அமைச்சர் நேரடியாகப் போட்டுக் காட்டினார். இதனால் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட தவெக செயலாளர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.2
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்கள் அனைத்தும் வேகமாக பட்டா நிலங்களாக மாறி வருவதால், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வழியின்றி ஆடு வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறுகள் மற்றும் கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததும் இந்தத் தொழில் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் உள்ள தங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கென தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நல வாரியம் மூலம் தேவையான உதவிகளை வழங்கி, ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேய்ச்சலுக்கு செல்ல வழி இல்லாததால் ஆடு வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேல்ராஜ் என்பவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.1
- திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை முழுவதும் பள்ளங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், மழை பெய்தால் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு அரசு அதிகாரிகள் செய்துள்ள 'நற்பணிகள்' இந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் கடுமையான நையாண்டியுடனும் ஆத்திரத்துடனும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறையினர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி நிர்வாகிகள் என பலரும் தினசரி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் மனு கொடுத்தால் மட்டும்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும், இதுவரை கொடுத்த மனுக்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அவலத்தால் நடக்கும் விபத்துகளுக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.1
- விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.1
- 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.4
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் இரண்டு பாம்புகள் விளையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிட்னி விளையாட்டு மைதானத்திற்கு பொதுமக்கள் பலர் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் விளையாடுவதற்கும் வந்திருந்தனர். அப்போது மைதானத்தின் புதர் பகுதியில் சலசலப்பு சத்தம் கேட்டதை அடுத்து, அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், இரண்டு சாரைப்பாம்புகள் தங்களை மறந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போடிநாயக்கனூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்புகள் விளையாடுவதை இடையூறு செய்யாமல் சிறிது நேரம் காத்திருந்தனர். அதன்பின்னர், அந்த இரு சாரைப்பாம்புகளையும் பத்திரமாக உயிரோடு பிடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.1