Shuru
Apke Nagar Ki App…
தெரிந்து கொள்வோம்.
Senthilkumarankumaran
தெரிந்து கொள்வோம்.
- Talaqajஉத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு🙏18 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- விஜய் நடித்து வெளியாகி உள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பெரியகுளம் பவளம் தியேட்டர் முன்பு விஜய் கட் அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளனர்1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமையான மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அதோபோல் இந்த ஆண்டும் திருவிழாவின் முதல் கொடி பவனி நேற்று இரவு தொடங்கியது இந்நிகழ்வில் ஊர் பெரியதனகாரர்கள், கிராம மக்கள், பங்கு தந்தையர்கள், அமலவை கன்னியர்கள், குருக்கள், பிரதர்கள், இருபால் துறவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து 30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.1
- தருமபுரி பத்திரிக்கையாளர்கள் ஒன்றினைந்து சமத்துவ பொங்கல் விழா: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு தருமபுரி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒன்றினைத்து இன்று சமத்துவ பொங்களை கொண்டாடினர் தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து சமத்துவ பொங்களை கொண்டாடினர் வன்ன கோலமிட்டு புதிய பானையில் பொங்கலிட்டு செங்கரும்பு, மஞ்சல் வைத்து சூரியபகவானை வணங்கி சமந்துவ பொங்களை கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு, ரெ.சதிஷ்,தருமபுரி மாவட்ட காவல்கண்கானிப்பாளர் SS மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் KP அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட SP அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்க நிர ஒரே உடையணிந்து, ஒன்றுசேர்ந்து சமத்துவ பொங்களை கொண்டாடினர் பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது மாலை பத்திரிக்கையாளர்களுக்கு பானை உடைத்தல், மியூசிகள் சேர், போட்டிகளும் நடன கலைநிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழா ஏற்பாடுகளை அனைத்து பத்திரிக்கையாளர்கள் மிகச்சிறப்பாக செய்தனர்1
- *தேனி பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 8 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து ஆட்டோக்கள் பறிமுதல்* *கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாத ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது* தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றனர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு ஆட்டோ நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அப்பகுதியில் ஆட்டோ நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என கூறி ஆட்டோ நிறுத்தத்தை அகற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரிக்காடுகளை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனால் தேனி போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 8 நபர்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர் மேலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து தேனி காவல் நிலையத்தில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு சுமார் 61 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில் தாங்கள் 13 வருடங்களாக முறையாக பதிவு பெற்று ஆட்டோ நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி வருகிறோம் இந்த நிலையில் ஆட்டோ நிறுத்தத்தில் பிரச்சினை ஏற்படுத்திய மற்றொரு தரப்பினரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு தங்கள் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிந்தனர் இதனால் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்ட முடியாமல் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட தங்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்1
- அன்னசகரம் கோஷ்டி பூசலால் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு பக்தர்கள் வேதனை தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ விநாயகர் சிவசுப்ரயணியம் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், சித்திரை மாதத்தில் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோயில் தேர் திருவிழாவில் பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுக்கும் சிறப்பு பெற்ற இத்திருதத்தில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் தை மதம் 16ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோயில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் வணிகர்கள் கோயில் வளாகத்தில் முருகன் சன்னதி அருகில் இருக்கும் இடும்பன் சன்னதி பழுதடைந்து உள்ளதால் புதிதாக மண்டபத்துடன் கூடிய இடும்பன் சன்னதியை புதுபிக்ககும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் இடும்பன் சன்னதி பழமை மாறாமல் அப்படியே இருக்க வேண்டும் கட்டுமான பணிகள் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் , ஒரு சிலர் மண்பத்துடன் கூடிய வகையில் இடும்பன் சன்னதியை புதுப்பிக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்தும் வந்தனர். கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றிரவு எதிர் தரப்பினர் கோயில் கட்டுமான பணிகளை இடித்து தள்ளினர். கோயில் கட்டுமான பணிகள் இடிக்கப்பட்ட சம்பவம் காற்று தீ போல் பரவி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இரண்டு தரப்பிரனருக்கும், மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது, தகவலறிந்த தருமபுரி நகர காவல்துறையினர் கோயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறில்லாத ஊருக்கு அழகு பால், கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என அவ்வை மூதாட்டியின் கூற்றை பின்பற்றி கோயில் நிர்வாகிகள் பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஒற்றுமையுடன் கோயில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு திருவிழா நடத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து பேச்சு தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். . செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணித் திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கவனிக்கப் ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.1