தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து பேச்சு தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். . செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணித் திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கவனிக்கப் ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.
தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து பேச்சு தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். . செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணித் திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கவனிக்கப் ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.
- சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபிநாதம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காவலர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சாலை விபத்து தவிர்ப்பது எப்படி, தலைக்கவசம் அணிவதும் வாகனம் ஓட்டும்போது செல்போன் தவிப்பதை அதிவேகமாக செல்வதை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பள்ளி ஆசிரியர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்1
- அன்னசகரம் கோஷ்டி பூசலால் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு பக்தர்கள் வேதனை தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ விநாயகர் சிவசுப்ரயணியம் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், சித்திரை மாதத்தில் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோயில் தேர் திருவிழாவில் பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுக்கும் சிறப்பு பெற்ற இத்திருதத்தில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் தை மதம் 16ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோயில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் வணிகர்கள் கோயில் வளாகத்தில் முருகன் சன்னதி அருகில் இருக்கும் இடும்பன் சன்னதி பழுதடைந்து உள்ளதால் புதிதாக மண்டபத்துடன் கூடிய இடும்பன் சன்னதியை புதுபிக்ககும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் இடும்பன் சன்னதி பழமை மாறாமல் அப்படியே இருக்க வேண்டும் கட்டுமான பணிகள் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் , ஒரு சிலர் மண்பத்துடன் கூடிய வகையில் இடும்பன் சன்னதியை புதுப்பிக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்தும் வந்தனர். கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றிரவு எதிர் தரப்பினர் கோயில் கட்டுமான பணிகளை இடித்து தள்ளினர். கோயில் கட்டுமான பணிகள் இடிக்கப்பட்ட சம்பவம் காற்று தீ போல் பரவி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இரண்டு தரப்பிரனருக்கும், மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது, தகவலறிந்த தருமபுரி நகர காவல்துறையினர் கோயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறில்லாத ஊருக்கு அழகு பால், கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என அவ்வை மூதாட்டியின் கூற்றை பின்பற்றி கோயில் நிர்வாகிகள் பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஒற்றுமையுடன் கோயில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு திருவிழா நடத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.1
- எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- Post by சந்திரசேகர். D1
- பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அறம் இலக்கிய அமைப்பு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராணி வரவேற்று பேசினார். கூட்டுறவு சர்க்கரைஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள்-1001 என்ற வரலாற்று நூலை ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பெற்றுக் கொண்டார். சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில் வெளியிட சமூக ஆர்வலர் ரவிசொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சதிஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்து,கீழடி,பொருநை போன்ற அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்று தடயங்களை பாதுகாத்து வருகிறது. சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்த இரு நூல்களையும் உருவாக்கியுள்ளார், இராஜேந்திர சோழன் பற்றி ஆயிரம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குறியதாகும் வருங்கால மாணவர்கள் இவரது பணிகளை முன்மாதிரியாக கொண்டு வெற்றி பெற வாழ்த்தினார். முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர், இவர் கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், முக்கியமாக இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்,மற்றும் அரிய தகவல்கள் -1001 போன்ற நூல்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படும் வகையில் மகவும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் வரலாற்று களஞ்சியங்களை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பாராட்டினார். கல்லூரி மூத்த ஆசிரியர்கள் ரவி, உத்திரபதி, தீர்த்தலிங்கம், லோகநாதன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வே.சிவக்குமார் வெற்றிஞானசேகரன், சம்பத், சுதாகர்,, சாய்ராம், பாபு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அறம் இலக்கிய அமைப்பு தலைவர் மற்றும் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார், அறம் இலக்கிய அமைப்பு செயலாளர் ராசு நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் பொதுமக்கள், எழுத்தாளர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.1
- தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்ட துவக்க விழா கலெக்டர் சதீஷ் பகைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் "உங்க கனவ சொல்லுங்க " என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நேற்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து 30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.1
- ஆட்டுக்காரம்பட்டி பகுதியில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா தர்மபுரி எம்பி ஆ மணி போட்டியை தொடங்கி வைத்தனர் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகம் தர்மபுரி நகர கழகம் கிழக்கு மேற்கு தருமபுரி மேற்கு ஒன்றியம் சார்பில் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா ஆட்டுக்காரம்பட்டி பகுதியில் கிரிக்கெட் போட்டியினை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர் இந்த போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படுகிறது இந்த போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது இந்த போட்டியில் 15 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணி .நகர செயலாளர். நாட்டான் மாது. கௌதம். தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி. நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன். முல்லைவேந்தன் சுருளிராஜன். இளையராணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன். முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1