Shuru
Apke Nagar Ki App…
கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
R. Suresh
கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை, மோளப்பாறை,பனங்காடு, கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க கூலி, போக்குவரத்து அடக்கம். விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும், இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர். பேட்டி : 1. பழனிச்சாமி... கரும்பு விவசாயி... 2. கோபால்... கரும்பு விவசாயி...1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.7
- மகனை படுகொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனையும் தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன் மனைவி ராஜா மணி தம்பதியருக்கு அஜித்குமார் (வயது 27) என்ற மகன் இருந்து வந்துள்ளார். அஜித் குமார் எந்த வேலைக்கும் போகாத நிலையில் நாள்தோறும் வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தந்தை இல்லாத நேரத்தில் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தாய், தந்தை இருவரும் சேர்ந்து மகன் அஜித்குமாரை கயிற்றால் கழுத்தை இருக்கியதோடு அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தாய், தந்தை இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்று மகனை கொலை செய்த குற்றத்திற்காக தாய், தந்தை இருவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான தந்தை அபிமன்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனையும், இரண்டாவது குற்றவாளியான தாய் ராஜாமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் விதித்ததோடு, தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.1
- இலுப்பூர் பணம் வைத்த சூதாடிய ஐந்து பேர் கைது இருந்திராபட்டி கருப்பசாமி கோயில் அருகே தர்மலிங்கம் (43), சுப்பிரமணியன் (59), குமார் (50), மகேஸ்வரன் (43), முத்துக்கருப்பன் (50) ஆகிய ஐந்து பேர் பணம் வைத்து சூதாடினர். இதையடுத்து இவர்களை இலுப்பூர் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 300 மற்றும் ஒரு சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.1
- பழனி: திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளியில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னாள் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் சந்திப்பு பழனியில் திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1965 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவ மாணவியரும் இந்நாள் தாத்தா பாட்டிகளும் தங்களின் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.1