logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.

18 hrs ago
user_REPORTER RAHMAN
REPORTER RAHMAN
Journalist Attur, Salem•
18 hrs ago
3d1b7745-3b6b-4f9b-a02a-3c2627c8b2a9
9a75a01b-50dd-4e08-b8c0-160303293822
c78ef544-48b6-4342-ade2-1e2d030af0f4
7ade13eb-3da4-43cc-9b86-a10f26fc63cb

ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.

More news from Tamil Nadu and nearby areas
  • அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காள பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேஸ் பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுசந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர்தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
    1
    அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி 
அதிகாலை  பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு சந்தனகாப்பு   அலங்காரம்: 
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காள பைரவர் அருள்பெற்றனர்
தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது
இங்கு மாதம்தோறும் தேஸ் பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்
இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுசந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார்
காலபைரவர்தேய்பிறை அஸ்டமி  விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர்
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    12 hrs ago
  • கொட்டும் மலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இன்று சனிக்கிழமை காலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர் இந்த பேரணி அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி அரூர் பைபாஸ் ரோடு வழியாக சென்று மீண்டும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது கொட்டும் மழை சாரலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து இந்த பேரணியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    1
    கொட்டும் மலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இன்று சனிக்கிழமை காலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர் இந்த பேரணி அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி அரூர் பைபாஸ் ரோடு வழியாக சென்று மீண்டும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது கொட்டும் மழை சாரலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து இந்த பேரணியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி , சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
    1
    தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,
சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் #TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur
    1
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்
#TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur
    user_Agarva manickam
    Agarva manickam
    தண்டராம்பேட்டை, திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 
தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கிருஷ்ணகிரி,  எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.
    1
    கிருஷ்ணகிரி, 
எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    17 hrs ago
  • பாலக்கோடு சார் பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ வைரல் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில்  சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது,  சக்திவேல் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். தேமுதிகவை சேர்ந்த தருமபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, பத்திர எழுத்தராக  உள்ளார்.  இவர்  கடந்த வாரம் பத்திர பதிவு செய்ய பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார். இவரது ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர்,  ராஜதுரை  சமர்ப்பித்த ஆவணத்தில் வாரிசு சான்றிழதல் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால்,  வருவாய்த்துறை இணையதளத்தில் சரி பார்த்ததில் ராஜதுரை சமர்பித்த  வாரிசு சான்றிதழ்  போலியானது என்பது தெரியவந்தது, இதனால்  இவரது பத்திர பதிவை நிராகரித்தார், ஆனால் ராஜதுரை சார்பதிவாளரை ஆவணத்தை  பதிவு செய்யுமாறு மிரட்டி உள்ளார். பத்திரம் பதிவு செய்ய மறுத்ததால்,  கோபமடைந்த ராஜதுரை பத்திரப்பதிவாளர் சக்திவேல்,  ஆவணம்  பதிவு செய்ய தன்னிடம் பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் பொய்யாக தன் மீது அவதூறு பரப்பி, தவறாக விமர்சனம் செய்து வருவதாகவும், தனது பெயருக்கும், பணிக்கும் குந்தகம் ஏற்படுத்தி வரும் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி  ராஜதுரை மிரட்டும்  வீடியோ ஆதாரத்துடன்  பாலக்கோடு காவல் நிலையத்தில் சார்பதிவாளர் சக்திவேல்  புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சார்பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலிபத்திர பதிவுகளை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட  வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
    1
    பாலக்கோடு சார் பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ வைரல்
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில்  சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது,  சக்திவேல் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.
தேமுதிகவை சேர்ந்த தருமபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, பத்திர எழுத்தராக  உள்ளார். 
இவர்  கடந்த வாரம் பத்திர பதிவு செய்ய பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார்.
இவரது ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர்,  ராஜதுரை  சமர்ப்பித்த ஆவணத்தில் வாரிசு சான்றிழதல் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால்,  வருவாய்த்துறை இணையதளத்தில் சரி பார்த்ததில் ராஜதுரை சமர்பித்த  வாரிசு சான்றிதழ்  போலியானது என்பது தெரியவந்தது, இதனால்  இவரது பத்திர பதிவை நிராகரித்தார், ஆனால் ராஜதுரை சார்பதிவாளரை ஆவணத்தை  பதிவு செய்யுமாறு மிரட்டி உள்ளார். பத்திரம் பதிவு செய்ய மறுத்ததால்,  கோபமடைந்த ராஜதுரை பத்திரப்பதிவாளர் சக்திவேல், 
ஆவணம்  பதிவு செய்ய தன்னிடம் பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் பொய்யாக தன் மீது அவதூறு பரப்பி, தவறாக விமர்சனம் செய்து வருவதாகவும், தனது பெயருக்கும், பணிக்கும் குந்தகம் ஏற்படுத்தி வரும் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி  ராஜதுரை மிரட்டும்  வீடியோ ஆதாரத்துடன்  பாலக்கோடு காவல் நிலையத்தில் சார்பதிவாளர் சக்திவேல்  புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சார்பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போலிபத்திர பதிவுகளை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட  வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    7 hrs ago
  • சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில், ரஸ்க் கம்பெனியில் பணிக்கு இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    1
    சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம்
காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில்,  ரஸ்க் கம்பெனியில் பணிக்கு  இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    17 hrs ago
  • முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.