அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இந்த போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் மங்களக்குறிச்சி ப.ராமராஜன், பத்து ரூபாய் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் ஸ்ரீவை சி.முத்து செல்வன். வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு : இந்த பூமி பந்தானது நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால் நிறைந்து காணப்படுகிறது இந்த பஞ்ச பூதங்களின் மூலமாகத்தான் ஒவ்வொரு செயல்பாடுகளும் மாறிக் கொண்டிருக்கிறது இதனால் தான் கால நிலைகளும் மாறுகிறது இந்த மாற்றத்தால் தான் மழை கூட பருவத்துக்கு செய்யாமல் போகிறது வெயில் அதிகமாக அடிக்கிறது என்று சொன்னால் ஓசோன் ஓட்டை பெருசாகி கொண்டு இருக்கிறது இது போன்ற பல கருத்துக்களை பஞ்சபூதங்கள் நமக்கு விளக்கி கூறுகிறது இந்த நிலையில் நிலத்தை கூறு போடுகிறார்கள் நிலத்தை அதிகமாக ஆழமாக தோன்றுகிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகுகிறது ஸ்ரீமூலக்கரை,பத்மநாபமங்களம், அணியாபரநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள கல்குவாரிகளை டிரோன்(டிஜிட்டல்) அளவீடு செய்யவேண்டும். ஸ்ரீமூலக்கரை,அணியாபரநல்லூர் ஆகிய ஊராட்சிமன்றங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நீர் தானா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் எத்தனை போர்வெல்கள் அமைந்துள்ளன.எத்தனை இஞ்ச் போர்வெல்கள், அதற்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தகவல் வேண்டும். மேற்கண்ட கிராமங்களில் உள்ள கல்குவாரிகள் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை இயங்க அனுமதி உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் மட்டுமே இயங்க வேண்டும். அதிக பாரம் ஏற்றி தார்ப்பாய் போடாமல் வரும் லாரிகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கனிமங்கள் ஏற்றிச்செல்லும் சரள் மண் தடங்களில் டிராக்டர் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(22-09-2026) முதல் எனது ஊர் வீரன் சுந்தரலிங்கம் நகரில் தனிமனித தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இந்த போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் மங்களக்குறிச்சி ப.ராமராஜன், பத்து ரூபாய் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் ஸ்ரீவை சி.முத்து செல்வன். வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு : இந்த பூமி பந்தானது நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால் நிறைந்து காணப்படுகிறது இந்த பஞ்ச பூதங்களின் மூலமாகத்தான் ஒவ்வொரு செயல்பாடுகளும் மாறிக் கொண்டிருக்கிறது இதனால் தான் கால நிலைகளும் மாறுகிறது இந்த மாற்றத்தால் தான் மழை கூட பருவத்துக்கு செய்யாமல் போகிறது வெயில் அதிகமாக அடிக்கிறது என்று சொன்னால் ஓசோன் ஓட்டை பெருசாகி கொண்டு இருக்கிறது இது போன்ற பல கருத்துக்களை பஞ்சபூதங்கள் நமக்கு விளக்கி கூறுகிறது
இந்த நிலையில் நிலத்தை கூறு போடுகிறார்கள் நிலத்தை அதிகமாக ஆழமாக தோன்றுகிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகுகிறது ஸ்ரீமூலக்கரை,பத்மநாபமங்களம், அணியாபரநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள கல்குவாரிகளை டிரோன்(டிஜிட்டல்) அளவீடு செய்யவேண்டும். ஸ்ரீமூலக்கரை,அணியாபரநல்லூர் ஆகிய ஊராட்சிமன்றங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நீர் தானா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் எத்தனை போர்வெல்கள் அமைந்துள்ளன.எத்தனை இஞ்ச் போர்வெல்கள், அதற்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தகவல் வேண்டும். மேற்கண்ட கிராமங்களில் உள்ள கல்குவாரிகள் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை இயங்க அனுமதி உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் மட்டுமே இயங்க வேண்டும். அதிக பாரம் ஏற்றி தார்ப்பாய் போடாமல் வரும் லாரிகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கனிமங்கள் ஏற்றிச்செல்லும் சரள் மண் தடங்களில் டிராக்டர் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(22-09-2026) முதல் எனது ஊர் வீரன் சுந்தரலிங்கம் நகரில் தனிமனித தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி வ உ சி துறைமுகம் உள்ளிட்ட தமிழகத்தில் ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் கடல் பகுதியில் சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை காற்று வீசு கூடும் என்பதால் கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் மீன் பிடிக்க மீன்வளத் துறை அறிவுறுத்தல் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இதனை அடுத்து காற்றலுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக மாறும் நிலையில் இதற்கு அர்ணாப் என பெயரிடப்பட்டுள்ளது வங்க கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இதே போன்று தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் காற்றானது சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை டீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க மீன்வளத்துறை அறிவித்துள்ளது கடல் பகுதியில் நிலவிவரும் பலத்த காற்று காரணமாக தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற தோனிகள் சரக்குகளை இறக்காமல் மீண்டும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு திரும்பி உள்ளது1
- தூத்துக்குடியில் பிரபல வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் புகாரில், பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் இசக்கி ராஜா (46) தென்பாகம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது1
- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு காமராஜர் காலை உணவு திட்டம் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு புதியதாக உருவாக்கிய 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள 37 மாணவ மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.இதனை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் வீரலட்சுமி ஊராட்சி செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை கொடுத்து தொடங்கி வைத்தார்கள். காலை உணவு திட்ட சரண்யா, உதவி சமையலர் சசிகலா ஆகியோர் இவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.4
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வாஞ்சிநாதன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது இவ்விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நூலகர் ராமசாமி, மற்றும் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.1
- ஆரல்வாய்மொழி சந்திப்பில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் டோக்கன் பெற்று பத்திர பதிவுக்கு காத்திருந்த திமுக ஒன்றிய குழு தலைவரை தாக்கி, சார் பதிவாளரை மிரட்டி சென்ற அதிமுக பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து ஆரல்வாய்மொழியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன் ஒன்றிய செயலாளர் செல்வம், பிராங்கிளின் பேரூர் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.1
- 62 ஆவது நாள்... (800ல் இருந்து இன்று (22.09.26) 61 ஆவது நாள்...) வ உ சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த மண்ணில் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை வேண்டி நடக்கும் போராட்டம்! 62 ஆவது நாள்... (800ல் இருந்து இன்று (22.09.26) 61 ஆவது நாள்...) வ உ சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த மண்ணில் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை வேண்டி நடக்கும் போராட்டம்! கடந்த 7 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் ஜெனிபா இண்டியா, மார்க்ஸ்மென், என்.பி.எம் ஆகிய துர்நாற்றம் வீசும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டம்! பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி இயங்கி வரும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் அதிமுக., திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியும் பல வழக்குகளைப் பெற்றும் விடை கிடைக்காமல் போராடி வருகிறோம். இந்த நிறுவனங்களால் காற்று மட்டுமல்ல, நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் பாதிப்படைகின்றன. சில நேரங்களில் இந்த நிறுவனங்களில் இருந்து வரும் துர்நாற்றம் மூச்சு அடைபடும் நிலைக்கு ஆகிறது. எனவே புதிதாக அமைந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தவெக அரசு, நாங்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவி செய்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் வகையில் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூட உத்தரவிடவேண்டும் என்றும், சுதந்திர நாட்டில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்றும் எங்கள் கடந்த 800 நாள் போராட்டத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்கி காத்திருக்கிறோம்...2
- தூத்துக்குடி காலை உணவு திட்டம் துவக்கி வைத்த அமைச்சர் ஸ்ரீநாத் தூத்துக்குடி விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் துவக்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதலில் உணவை ஊட்டி விட்டு பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார் அதுதான் எங்கள் தலைவர் சொன்னதை செய்வார் என அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி காலை உணவு திட்டம் தமிழக வெற்றிக்கழக அரசு பதவி ஏற்ற பின்பு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இதுவரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவருக்கு மட்டும் காலை உணவு வழங்கப்பட்ட நிலையில் தற்போது எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்த திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் விஜய் துவக்கி வைத்தார் இதைத்தொடர்ந்து தூத்துக்குடி குரூஸ்பரம் பகுதியில் அமைந்துள்ள சாமுவேல் புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆகியோர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை துவக்கி வைத்தனர் மாணவர்களுக்கு பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை பரிமாறிய அமைச்சர் பின்னர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார் அப்போது முதலில் இரண்டு மாணவ மாணவிகளுக்கு சர்க்கரைப் பொங்கலை ஊட்டி விட்டு பின்னர் தனது உணவை அருந்தினார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் பெருந்தலைவர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட இந்த காலை உணவு திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது நம்முடைய தலைவர் தளபதி ஆறாம் கிளாஸ் முதல் எட்டாம் கிளாஸ் வரை விரிவாக்கம் பண்ணியிருக்கிறார் இதற்காக பல கோடிகள் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடும் போதுதான் சுவையும் தரம் தெரிகிறது மேலும் நல்ல நலத் திட்டங்களை தலைவர் அறிவிப்பார்கள் என நம்புகிறோம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தமிழக முதல்வர் செயல்படுகிறார் அதுதான் எங்கள் தலைவர் சொன்னதை செய்வார என்றார்.1
- நாகர்கோவில் மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் நிலத்தில் விஷ ஜந்துக்களில் கூடாரமாக மாறி வருகிறது இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு அவ்வப்போது விஷ ஜந்துக்களின் இடையூறு ஏற்பட்டுள்ளது நாகர்கோவில் மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான சிஎஸ்ஐ சர்ச் தெருவில் பிரபல ஜெப கூடாரம் அருகில் சிஎஸ்ஐ சர்ச்சுக்கு சொந்தமான நிலத்தில் பராமரிப்பின்றி கிடப்பதால் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி உள்ளது அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது விஷ ஜந்துக்கள் நடமாடி வருகிறது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்ச உணர்வோடு இருக்கின்றனர் மேலும் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் சூழலில் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பின்றி புல்லும் புதருமாக கிடக்கும் இடத்தை நிலத்துக்கு சொந்தமான உரிமையாளரிடம் கூறி கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்பு கொண்டு புல் புதர்களை அகற்றி பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தும்படி அப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.1