திமுக வேட்பாளர் செந்தில்குமார் பேட்டி பாலக்கோடு திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் பேட்டி. பாலக்கோடு தொகுதியில் 25 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.அன்பழகன், விவசாயம், வளர்ச்சி சார்ந்த திட்டங்களையும், நீர்ப்பாசன திட்டங்களையும், இதுவரை செய்யவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு, ஒவ்வொரு இடத்திலும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. பழங்குடியினர், இஸ்லாமியர், ஆதிதிராவிடர் வாழக்கூடிய பகுதிகளில் கூட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. இதுவரை 6 கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. 25 ஆண்டு காலமாக அமைச்சராகவும் நிறைவேற்றவில்லை. இரண்டு தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால், கூட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கும் போது கேபி அன்பழகன் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது நினைத்திருந்தால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். விவசாயத்தை நம்பி இருக்கின்ற பாலக்கோடு பகுதிகளுக்கு நீர் பாசன திட்டங்கள் இல்லை. இங்கு இருக்கின்ற சர்க்கரை ஆலை சிறந்த சர்க்கரை ஆலை ஆக விருது பெற்றது. ஆனால் கரும்பு உற்பத்தி இல்லை என்பதால், மூடும் நிலைமையில் இருந்து வருகிறது. ஒரு அமைச்சராக இருப்பவர் நினைத்திருந்தால், இதை செய்வதற்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் எதையும் செய்யாமல் 25 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதனால் சர்க்கரை ஆலை மூடும் நிலையில் இருந்து வருகிறது. இவரைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு பயமான நிலை தான் இருந்து வருகிறது. இவரை கேள்வி கேட்ட ஒருவரை தாக்கியுள்ளனர். தற்போது அவரை எதிர்த்து நாம் போட்டியிடும் போது மக்கள் ஓரணியில் திரண்டு நம் பின்னாடி இருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றியை தர தயாராகி இருக்கிறார்கள். அப்பப்ப தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் எல்லோருக்கும் வீடுகளுக்கு சேலை கொடுக்கிறார்கள். எங்களுக்கு வேலை தான் முக்கியம் என சொல்கிறார்கள். வேலை இருந்தால் சேலையை நாங்களே வாங்கிக் கொள்வோம். இப்படித்தான் எங்களை ஏமாற்றி வருகிறார். இப்பொழுது நான் கொடுத்திருக்கின்ற வாக்குறுதி உங்கள் பேரக் குழந்தைகள், அடுத்த தலைமுறை வரும்போது நம்பிக்கை கூறிய வகையில் ஒரு வேலையை கொடுப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். இந்த பகுதியில் இருந்து தக்காளி, மாம்பழம், தென்னை உள்ளிட்ட விவசாய பொருட்கள் மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரித்து அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கின்ற வகையில் மதிப்பு கூட்டு தொழிற்சாலையை கொண்டு வருவேன். பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தக்காளி கூழ் பேக்டரி கொண்டு வருவேன். காய்கறிகள் இந்த பகுதியில் அதிகமாக உற்பத்தி ஆகிறது. ஆனால் ராயக்கோட்டை சென்று அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பெரிய சந்தை உருவாக்கி, ஒரு வளர்ச்சிக்கான பாலக்கோடு மக்களிடம் ஒப்படைப்பேன் அது மே நான்காம் தேதிக்கு பிறகு நடைபெறும். எனக்கு எண்ணேகோல் புதூர் திட்டத்தை நிறைவேற்ற 8 மாதங்கள் போதும். தண்ணீர் கொண்டு வரப்பட்டதற்கு ஒரு வருடத்திற்கு செய்து கொடுப்பேன். இந்த மாவட்டமே மாறப் போகிறது. பாலக்கோடு மிக செழிப்பான விவசாயம் சார்ந்த பகுதியாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே இது மாதிரியான வளர்ச்சி எங்கும் இல்லாத அளவிற்கு செய்யப் போகிறோம். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது சாலையில்லாத மலை கிராமங்களுக்கு சாலை உள்ளிட்ட 12000 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்டத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன். இதைப் பற்றி எங்கும் நான் பேசவில்லை. வளர்ச்சிக்கான திட்டத்தை மட்டும் பேசி இருக்கேன். அதேபோல் கே.பி.அன்பழகனை தனிப்பட்ட முறையில் எங்கு விமர்சனம் அடையவில்லை. வளர்ச்சி வேண்டும் அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சிகரமான பாலகோடு ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லா திட்டங்களையும் செய்து தருமபுரி மாவட்டம் விவசாய மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்க போகிறேன் என தெரிவித்தார்.

- வீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வந்ததையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு உள்ளிட்ட பலர் பங்கேற்பு1
- சேலம் கோரிமேட்டில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு பாமக தலைவர் அன்புமணி, சேலம் வடக்கு தொகுதியில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரன் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளார், கொள்ளையடிப்பவர்களுடன் கூட்டி வைத்துக் கொண்டு கமிஷன் வாங்கி அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டுக் கொண்டு உள்ளார். இந்தத் தொகுதி முன்னேற்றத்திற்காக இதுவரை எந்த நன்மையும் செய்யாத அவர், மறுபடியும் தேர்தலில் நிற்பதற்கு உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் அவரை துரத்தி அடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- தமிழ்நாட்டில் இன்று மாலையோடு ஓய்கிறது சட்டமன்ற தேர்தல் பரப்புரை.* கல்வராயன் மலைப்பகுதியில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.* ஏப்.23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கும். இடைப்பட்ட நேரத்தில் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது.திரைப்படம், டி.வி., ரேடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் தேர்தல் பரப்புரை கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்னை தொடர்பு அதிமுக கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள் நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்1
- திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக தங்கராஜ் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரம்மாண்ட பேரணி நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- மேட்டூர் அருகே மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தபோது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி அங்கு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முன்கூட்டியே அனுமதி பெற்றும் போலீசார் தடுத்ததால், உரிமையோடு அன்புமணி ராமதாஸிடம் முறையிடச் சென்றதாக வித்யா ராணி கூறினார். ஆனால், அனுமதியின்றி பேரணி நடத்தியதாலும், மாற்றுக் கட்சி பிரச்சாரத்தில் நுழைந்ததாலும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் கைது செய்யப்பட்ட வித்தியா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.1
- கிருஷ்ணகிரி தனியார் மஹால் இன்றுவீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்து கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்லகுமார்க்குஆதரவு கைசின்னத்திற்கு வாக்குகேட்டு பேட்டி அளித்தார் மேலும்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தன.1
- சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ராஜேஷ் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இதனை அறிந்த கல்வராயன் மலை பகுதி கட்சி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இருசக்கர வாகனத்தில் வாக்கு சேகரிக்க செல்லும் காட்சி1