logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதியிலுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களால் "100% VOTE" என்று நெய்யப்பட்ட புடவைகள் வாயிலாகவும், ”நமது வாக்கு, நமது உரிமை" என்ற பெயரிலான தேவாங்கு இலட்ச்சினையின் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை இன்று (21.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். அருகில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.

3 hrs ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
3 hrs ago
ae77156c-0faa-48d0-9a9a-d0787eff54aa

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதியிலுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களால் "100% VOTE" என்று நெய்யப்பட்ட புடவைகள் வாயிலாகவும், ”நமது வாக்கு, நமது உரிமை" என்ற பெயரிலான தேவாங்கு இலட்ச்சினையின் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை இன்று (21.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். அருகில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு 
ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன்  தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு  
ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    1
    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ‌மதுரை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் பூமிநாதன் அவர்கள் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை இன்று (ஏப்.21) மாலை முனிச்சாலை பகுதியில் நிறைவு செய்தார் . இக்கூட்டத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் மற்றும் மதிமுக எம்.பி துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    ‌மதுரை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் பூமிநாதன் அவர்கள் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை இன்று (ஏப்.21) மாலை முனிச்சாலை பகுதியில் நிறைவு செய்தார் . இக்கூட்டத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் மற்றும் மதிமுக எம்.பி துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    2 hrs ago
  • *நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தவன் இல்லை. இந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானமும் வேதனையும் எல்லோருக்குமே நன்றி தெரியும். அவையெல்லாம் கடந்து வந்து இன்று மீண்டும் நான்காவது முறையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் என்று கூறி சமுதாய மக்களிடையே வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார் பேரவை சங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவர் தான் போடிநாயக்கனூருக்கு 15 ஆண்டுகளாக செய்த பணிகளை கூறி வாக்கு சேகரித்தார். நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததில்லை மேலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானங்களும் வேதனைகளும் எல்லோரும் அறிவார்கள். அனைத்தையும் கடந்து வந்து இன்று திமுக ஸ்டாலின் அவர்களின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் தாங்கள் எனக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் போடிநாயக்கனூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலையை உருவாக்கி தந்த வருமான சுப்புராஜிற்கு மதுரை மையப்பகுதியில் சிலையை அமைத்து தரவும் நம் தேச பிதா உத்தமர் மகாத்மா காந்திக்கு போடிநாயக்கனூரில் சிலை இல்லாத நிலையில் அவருக்கும் சிலை அமைத்து தரவும் உரிய ஏற்பாடுகள் செய்வேன் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    1
    *நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தவன் இல்லை.
இந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானமும் வேதனையும் எல்லோருக்குமே நன்றி தெரியும்.
அவையெல்லாம் கடந்து வந்து இன்று மீண்டும் நான்காவது முறையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் 
என்று கூறி சமுதாய மக்களிடையே வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார் பேரவை சங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவர் தான் போடிநாயக்கனூருக்கு 15 ஆண்டுகளாக செய்த பணிகளை கூறி வாக்கு சேகரித்தார்.
நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததில்லை 
மேலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானங்களும் வேதனைகளும் எல்லோரும் அறிவார்கள்.
அனைத்தையும் கடந்து வந்து இன்று திமுக ஸ்டாலின் அவர்களின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் தாங்கள் எனக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் போடிநாயக்கனூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலையை உருவாக்கி தந்த வருமான சுப்புராஜிற்கு மதுரை மையப்பகுதியில் சிலையை அமைத்து தரவும் நம் தேச பிதா உத்தமர் மகாத்மா காந்திக்கு போடிநாயக்கனூரில் சிலை இல்லாத நிலையில் அவருக்கும் சிலை அமைத்து தரவும் உரிய ஏற்பாடுகள் செய்வேன் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    11 hrs ago
  • தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
    1
    தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய ரோடு ஷோ திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை சென்றனர். வழி நெடுகிலும் உள்ளூர் வியாபாரிகள், மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தியாகிகள் பூங்கா அருகில் டிடிவி தினகரன் தனது மக்களுடனான சந்திப்பில் உரையின் போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஊழல் அதிகரித்து அடிப்படை வசதிகள் கூட சரியாக வழங்கப்படவில்லை, வெள்ளநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் தாமதமாகின்றன, நிதி பயன்பாடு தெளிவாக இல்லை என்பது குறித்தும் நீர் மேலாண்மை தொடர்பாக மேகதாது அணை மற்றும் கேரளாவில் புதிய அணை போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படவில்லை என்ற கவலை குறித்தும் , இது விவசாயத்திற்கும் குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது போன்ற அம்சங்களை வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்து கொண்டார். தங்களது அங்கீகரிக்கப்பட்ட "குக்கர்" சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர் .
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய ரோடு ஷோ திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை சென்றனர்.
வழி நெடுகிலும் உள்ளூர் வியாபாரிகள், மற்றும் பொது மக்களை  சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தியாகிகள் பூங்கா அருகில் 
டிடிவி தினகரன் தனது  மக்களுடனான சந்திப்பில் உரையின் போது 
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஊழல் அதிகரித்து அடிப்படை வசதிகள் கூட சரியாக வழங்கப்படவில்லை, 
வெள்ளநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் தாமதமாகின்றன,
நிதி பயன்பாடு தெளிவாக இல்லை என்பது குறித்தும் நீர் மேலாண்மை தொடர்பாக மேகதாது அணை மற்றும் கேரளாவில் புதிய அணை போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படவில்லை என்ற கவலை குறித்தும் ,
இது விவசாயத்திற்கும் குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளை  பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது போன்ற
அம்சங்களை வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்து கொண்டார். 
தங்களது அங்கீகரிக்கப்பட்ட "குக்கர்" சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர் .
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அய்யலூரில் இன்று அதிமுக வேட்பாளர் பரமசிவத்திற்கு பொதுமக்கள் பேராதரவு கொடுத்து அவரை வரவேற்று மாலை அணிவித்து மலர்கள் தூவி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் டிசி ராஜமோகன் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அய்யலூரில் இன்று அதிமுக வேட்பாளர் பரமசிவத்திற்கு பொதுமக்கள் பேராதரவு கொடுத்து அவரை வரவேற்று மாலை அணிவித்து மலர்கள் தூவி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் டிசி ராஜமோகன் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.