Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 29ஆம் ஆண்டு பூக்குழித் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் உச்சகட்டமாக, திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
Theni
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 29ஆம் ஆண்டு பூக்குழித் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் உச்சகட்டமாக, திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 29ஆம் ஆண்டு பூக்குழித் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் உச்சகட்டமாக, திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.4
- ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது. ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எட்டு கிலோ கஞ்சா பறிமுதல். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் வடுகபட்டி அருகே உள்ள பெரியகுளம் புறவழிச் சாலைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது தேனி நோக்கிச் சென்ற அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். மேலும் அவர்களை மரித்து சந்தேகிக்கும் படியாக இருந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களின் உடைமைகள் பையை சோதனை செய்த பொழுது அவற்றில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களையும் கைது செய்த தென்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் நான்கு சிறுவர்களை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்று கஞ்சா வாங்கியதாகவும், வாங்கிய எட்டு கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக சென்னை வந்து அதன் பின் சென்னையில் இருந்து தேனி சென்ற அரசு விரைவு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் எட்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்2
- வாழ்வில் நாம் சந்திக்கும் சண்டைகள் பிரிவை நோக்கியவை அல்ல, மாறாக ஒன்றிணைந்து வாழ்வதற்கானவை. இந்தச் சிந்தனை வாழ்க்கையின் சவால்களை புதிய கோணத்தில் அணுக வழிவகுக்கிறது.1
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பாலக்கோம்பை ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வலத்தின்போது, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர் வழங்கி அசத்தினர்.1
- பட்டிவீரன்பட்டி அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய பகீர் சிசிடிவி காட்சி வெளியானது. விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பட்டிவீரன்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.1
- மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் தூத்துக்குடி சாலைக்கு அருகே மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆறு புதிய காற்றாலைகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு கூடுதல் மின்சாரத்தை வழங்க இந்த காற்றாலைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.2
- மதுரை மாவட்டம் பொம்மன்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால், விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் நெல்மணிகளை ஏந்தி, உடனடி நடவடிக்கை கோரி முழக்கமிட்டனர்.1
- தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்புக் குழுவினர் இன்று ஆய்வுப் பணிகளைத் தொடங்கினர். அணை, பேபி டேம், மண் அணை போன்ற பகுதிகளை ஆய்வு செய்த பின், நாளை குமுளியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பேபி அணையை வலுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் சாலை சீரமைப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.1