logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் இமெயில் முகவரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறுந்தகவல்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு விடுக்கப்படும் ஐந்தாவது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும்.

1 hr ago
user_Periyasamy
Periyasamy
பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
1 hr ago

மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் இமெயில் முகவரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறுந்தகவல்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு விடுக்கப்படும் ஐந்தாவது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போளையம்பள்ளி கிராமத்தில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தெருநாய்கள் கூட்டமாக வந்து ஆடுகளை கடுமையாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுகளின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளைத் திடீரெனத் தாக்கிய நாய்களின் ஆக்ரோஷமான தாக்குதலில் மொத்தம் 5 ஆடுகள் கடுமையாக காயமடைந்தன. இந்தத் தாக்குதலில் 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் 2 ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. ஆடு, மாடு வளர்ப்பையே தங்களது முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு மற்றும் காயமடைந்த ஆடுகளுக்கான சிகிச்சை செலவுகள் உள்ளிட்டவற்றால் சுமார் ₹60 ஆயிரம் முதல் ₹70 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கிராமத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
    1
    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போளையம்பள்ளி கிராமத்தில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தெருநாய்கள் கூட்டமாக வந்து ஆடுகளை கடுமையாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுகளின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளைத் திடீரெனத் தாக்கிய நாய்களின் ஆக்ரோஷமான தாக்குதலில் மொத்தம் 5 ஆடுகள் கடுமையாக காயமடைந்தன.

இந்தத் தாக்குதலில் 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் 2 ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. ஆடு, மாடு வளர்ப்பையே தங்களது முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு மற்றும் காயமடைந்த ஆடுகளுக்கான சிகிச்சை செலவுகள் உள்ளிட்டவற்றால் சுமார் ₹60 ஆயிரம் முதல் ₹70 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தச் சம்பவத்தால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கிராமத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கம் பகுதியில் செயல்படும் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இன்று காலை 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த இந்த தகவலில், இன்று பிற்பகல் 2:15 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வளாகத்தில் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மிரட்டல் தகவலை அடுத்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீதிமன்ற நீதிபதிகள், 2000 ஊழியர்கள் மற்றும் 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உடனடியாக வெளியேற்றினர். பின்னர், 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் அழகன் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பின்னர், இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி எனத் தெரியவந்தது. தொடர்ந்து வரும் இந்த மிரட்டல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 5 முறையும், தலைமை தபால் நிலையத்திற்கு ஒரு முறையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இது ஐந்தாவது முறையாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் நேற்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் இன்று ஐந்தாவது முறையாக மிரட்டல் வந்தது வழக்கறிஞர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிகார மையங்களுக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை கைது செய்ய முடியாத அரசால் பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    1
    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கம் பகுதியில் செயல்படும் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இன்று காலை 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த இந்த தகவலில், இன்று பிற்பகல் 2:15 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வளாகத்தில் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

மிரட்டல் தகவலை அடுத்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீதிமன்ற நீதிபதிகள், 2000 ஊழியர்கள் மற்றும் 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உடனடியாக வெளியேற்றினர். பின்னர், 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் அழகன் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பின்னர், இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி எனத் தெரியவந்தது.

தொடர்ந்து வரும் இந்த மிரட்டல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 5 முறையும், தலைமை தபால் நிலையத்திற்கு ஒரு முறையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இது ஐந்தாவது முறையாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் நேற்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் இன்று ஐந்தாவது முறையாக மிரட்டல் வந்தது வழக்கறிஞர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிகார மையங்களுக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை கைது செய்ய முடியாத அரசால் பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தருமபுரி மாவட்டம், காட்டம்பட்டி கிராமத்தை உலுக்கிய 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி பிரகாஷுக்கு இரண்டு தூக்கு தண்டனைகளையும், மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு உத்தரவிட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு காட்டம்பட்டி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 7 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், பின்னர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைக் கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
    1
    தருமபுரி மாவட்டம், காட்டம்பட்டி கிராமத்தை உலுக்கிய 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி பிரகாஷுக்கு இரண்டு தூக்கு தண்டனைகளையும், மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு உத்தரவிட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு காட்டம்பட்டி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 7 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், பின்னர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைக் கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, இமான் உசேன் நினைவாக இஸ்லாமியர்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களை வருத்திக் கொண்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தங்களது தலை, மார்பு, முதுகுகளில் அடித்துக்கொண்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, இமான் உசேன் நினைவாக இஸ்லாமியர்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களை வருத்திக் கொண்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தங்களது தலை, மார்பு, முதுகுகளில் அடித்துக்கொண்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    30 min ago
  • சேலம் மாநகரம் நான்கு ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில், ஒரு மிகப்பெரிய கண்டெய்னர் லாரி பாலத்தின் தூண் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர், எதிரே வந்த கார் மீது மோதலைத் தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தை வலதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி பாலத்தின் தூண் மீது மோதியதால், அதன் கண்டெய்னர் கீழே சரிந்தது. இந்த விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் இல்லாததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    சேலம் மாநகரம் நான்கு ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில், ஒரு மிகப்பெரிய கண்டெய்னர் லாரி பாலத்தின் தூண் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர், எதிரே வந்த கார் மீது மோதலைத் தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தை வலதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி பாலத்தின் தூண் மீது மோதியதால், அதன் கண்டெய்னர் கீழே சரிந்தது.

இந்த விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் இல்லாததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில், சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினத்தை முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நிறைவுற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பலர் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில், சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினத்தை முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நிறைவுற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பலர் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை முன்னாள் தலைவர் நாஜியா இலாஹி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (24) வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் புகார் அளித்தனர். நாஜியா இலாஹி அண்மையில் ஒரு நேர்காணலில் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதாகக் கூறி, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இப்புகார் அளிக்கப்பட்டது. காவல்நிலையத்திற்கு பதாகைகளை ஏந்தி இஸ்லாமிய பெண்கள் புகார் அளிக்க வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய நாஜியா இலாஹி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
    1
    பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை முன்னாள் தலைவர் நாஜியா இலாஹி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (24) வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் புகார் அளித்தனர். நாஜியா இலாஹி அண்மையில் ஒரு நேர்காணலில் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதாகக் கூறி, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இப்புகார் அளிக்கப்பட்டது.

காவல்நிலையத்திற்கு பதாகைகளை ஏந்தி இஸ்லாமிய பெண்கள் புகார் அளிக்க வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய நாஜியா இலாஹி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    10 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கிய இந்த விழா, இன்று அதிகாலை முதல் பல்வேறு சிறப்புப் பூஜைகளுடன் கோலாகலமாக நடந்தேறியது. விழாவின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலையிலேயே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம் ஆகியன மங்கள இசையுடன் முழங்க பூர்ணாஹதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடத்தை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது சுமந்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குட நன்னீராட்டு செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு, கலசத்திற்கு ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீ திரெளபதியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஸ்ரீ திரெளபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மகாகும்பாபிஷேக விழாவில் மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, குண்டுப்பள்ளம், சந்திராபுரம், காளி கவுண்டர் கொட்டாய், உலகானஅள்ளி, அகரம், வெலாங்காடு, கல்லாகரம், ஆஞ்சநேயபுரம், செவத்தாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கிய இந்த விழா, இன்று அதிகாலை முதல் பல்வேறு சிறப்புப் பூஜைகளுடன் கோலாகலமாக நடந்தேறியது.

விழாவின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலையிலேயே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம் ஆகியன மங்கள இசையுடன் முழங்க பூர்ணாஹதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடத்தை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது சுமந்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குட நன்னீராட்டு செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு, கலசத்திற்கு ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீ திரெளபதியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஸ்ரீ திரெளபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த மகாகும்பாபிஷேக விழாவில் மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, குண்டுப்பள்ளம், சந்திராபுரம், காளி கவுண்டர் கொட்டாய், உலகானஅள்ளி, அகரம், வெலாங்காடு, கல்லாகரம், ஆஞ்சநேயபுரம், செவத்தாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.