தருமபுரி மாவட்டம், காட்டம்பட்டி கிராமத்தை உலுக்கிய 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி பிரகாஷுக்கு இரண்டு தூக்கு தண்டனைகளையும், மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு உத்தரவிட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு காட்டம்பட்டி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 7 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், பின்னர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைக் கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், காட்டம்பட்டி கிராமத்தை உலுக்கிய 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி பிரகாஷுக்கு இரண்டு தூக்கு தண்டனைகளையும், மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு உத்தரவிட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு காட்டம்பட்டி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 7 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், பின்னர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைக் கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இன்று (24) அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.1
- தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் வணக்கம் வாழ்த்துக்கள் சார் வணக்கம் வாழ்த்துக்கள் சார்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ராணிப்பேட்டை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சமூக ஊடகப் பேரவையின் பொறுப்பாளராக சி. விநாயகம் அவர்கள் உள்ளார்.1
- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள குச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்போடும் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இந்த புனித நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள சேது பள்ளி வளாகம் முன்பு, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு குரங்கு காயமடைந்தது. இதை அறிந்த Sky ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடனடியாக அந்த குரங்கை மீட்டு பத்திரமாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு காயமடைந்த குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.2
- தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம், குமாரசாமிபேட்டை மேம்பாலத்தின் அடியில் பல ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் ஸ்ரீ சக்தி முனியப்பன் திருக்கோவிலில், புதிய உற்சவர் மூர்த்தி கண் திறப்பு மற்றும் முகப்பு விமானம் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, ஸ்ரீ விநாயகர் வழிபாடு, கணபதி ஓமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, திபாராதனை, கொடியேற்றுதல், கங்கானம் கட்டுதல் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பம்பை இசை ஒலிக்க, தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் ஸ்ரீ வன்னியர் மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பென்னாகரம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி முனியப்பன் கோவிலை அடைந்தது. பின்னர், மங்கள இசை, கணபதி வழிபாடு, வாஸ்து சாந்தி, கலசம், யாகசாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதல் கால பூஜையில் அக்னி கர்ப்பம், ஸ்ரீ ருத்ரம் பாராயணம், திரவிய ஓமம், பூர்ணாகுதி, உபச்சாரம், தேவாரணைகள் மற்றும் மூப்பு விமான கலசம் வைத்தல் போன்ற சடங்குகள் நிகழ்த்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, மங்கள இசை, கோ பூஜை, உற்சவர் மூர்த்தி இரண்டாம் கால யாக பூஜை, ஸ்ரீ சக்தி முனியப்பனுக்கு மூல மந்திர பூர்ணாகுதி, திபாராதனை நடைபெற்றன. இறுதியாக, கலச புறப்பாடு நிகழ்ந்து, சிம்ம லக்னத்தில் முகப்பு விமானம் மற்றும் உற்சவர் ஸ்ரீ சக்தி முனியப்பன் மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமர்சையாக அரங்கேறியது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ சக்தி முனியப்பனை தரிசித்து அருள்பெற்றனர். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ சக்தி முனியப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கோவில் நிர்வாகக் குழு தலைவர் சிட்டிபாபு, துணைத் தலைவர் சிட்டுபழனி, கோவில் பூசாரி மாது, ஊர் கவுண்டர் மற்றும் பிற விழாக் குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.1
- தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலின் மகாகும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கி, இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம் ஆகியன மங்கள இசையுடன் முழங்க, பூர்ணாஹதி நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து, யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது சுமந்து சென்று, கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். திருக்குட நன்னீராட்டு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்ட பின்னர், கலசத்திற்கு ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீ திரெளபதியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ திரெளபதியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த மகாகும்பாபிஷேக விழாவில் மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, குண்டுப்பள்ளம், சந்திராபுரம், காளி கவுண்டர் கொட்டாய், உலகானஅள்ளி, அகரம், வெலாங்காடு, கல்லாகரம், ஆஞ்சநேயபுரம், செவத்தாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதங்களும் வழங்கப்பட்டன.1
- கும்பகோணம் மூர்த்தி செட்டி தெருவில் அமைந்துள்ள ஆரிய வைசியர்களுக்கு சொந்தமான ஸ்ரீ வாசவ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான முக்கிய ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா கடந்த 21ஆம் தேதி தேவதா அனுக்ஞை, கணபதி பூஜை, எஜமானன் சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்வுகளுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 22 ஆம் தேதி முதல் கால வேள்வி பூஜை, மூல மந்திர ஜபம், அக்னி ஸ்தாபனம், இரண்டாம் கால வேள்வி பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. பின்னர், 23ஆம் தேதி மூன்றாம் கால வேள்வி பூஜை, விசேஷ சந்தி, பிம்பஸ்தாபனம், நான்காம் கால வேள்வி பூஜை, புண்யாஹவாசனம், கலா ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை ஐந்தாம் கால வேள்வி பூஜை, தேவதா ரக்ஷாபந்தனம், மகாபூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நிகழ்வுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மிதுன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம், ராஜகோபுரம் கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மூலமூர்த்தி கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றதுடன், மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.2
- தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில், எல்லுகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது கூலித் தொழிலாளியான மணிமேகலை என்பவரிடம் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிளேடு மூலம் ₹1.31 லட்சம் பணம் பறிக்கப்பட்டது. மகளிர் சங்கத்தின் மூலம் கடன் பெற்று தனது தங்க நகைகளை மீட்க வங்கிக்கு வந்த மணிமேகலை, பணம் செலுத்தும் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாததால், மற்றொருவரிடம் கொடுத்து அதனை நிரப்பியுள்ளார். பூர்த்தி செய்த படிவம் தவறாக உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது. பணம் பறிபோன அதிர்ச்சியில் மணிமேகலை கூச்சலிட்டதும், அங்கிருந்த காவலர்கள் உடனடியாக வங்கியின் முன் கதவை பூட்டினர். இருப்பினும், பணத்தைத் திருடியவர்கள் அதற்குள்ளாகவே வங்கியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மணிமேகலை, வங்கி மேலாளரிடமும் பாலக்கோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். தனது வாழ்வாதாரத்திற்காக கூலி வேலை செய்வதாகவும், எனவே தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மணிமேகலையின் கையில் இருந்த மஞ்சள் பையிலிருந்து பணம் பறிக்கப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு பாரத ஸ்டேட் வங்கியில் தொடர்ந்து பணம் மற்றும் நகைப் பறிப்புகள், ஏடிஎம் கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடப்பதாகவும், இதற்கு வங்கியின் நிர்வாக மெத்தனப் போக்கே காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.1