Shuru
Apke Nagar Ki App…
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள குச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்போடும் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இந்த புனித நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
Dhamodharan R
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள குச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்போடும் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இந்த புனித நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் மாநகரம் நான்கு ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில், ஒரு மிகப்பெரிய கண்டெய்னர் லாரி பாலத்தின் தூண் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர், எதிரே வந்த கார் மீது மோதலைத் தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தை வலதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி பாலத்தின் தூண் மீது மோதியதால், அதன் கண்டெய்னர் கீழே சரிந்தது. இந்த விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் இல்லாததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில், சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினத்தை முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நிறைவுற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பலர் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.1
- சிங்கம்புணரி அருகே உள்ள கொடுங்குன்றம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன், சிறுவயது முதல் ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் இந்தியா சார்பில் 80 முதல் 85 வயதிற்கான முதியோர்களுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தங்கம், வெள்ளி, வெண்கலம் என நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்து, சிங்கம்புணரி பகுதிக்குப் பெருமை சேர்த்துள்ளார். முதுமையின் காரணமாக, சிங்கம்புணரிக்கு பெருமை சேர்த்த இந்த ஓட்டப்பந்தய வீரர் இன்று கொடுங்குன்றம்பட்டியில் இயற்கை எய்தினார்.1
- தருமபுரி மாவட்டம், காட்டம்பட்டி கிராமத்தை உலுக்கிய 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி பிரகாஷுக்கு இரண்டு தூக்கு தண்டனைகளையும், மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு உத்தரவிட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு காட்டம்பட்டி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 7 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், பின்னர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைக் கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.1
- தர்மபுரியில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்தநாளை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.பி. சாலைப் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளையொட்டி, தர்மபுரி கிழக்கு நகர 25வது வார்டு சார்பில் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்ட தலைவர் தாபா சிவாவின் ஆணைக்கிணங்க, தர்மபுரி கிழக்கு நகர செயலாளர் விஜயகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விழாவில், அரசு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, விழா சிறப்புடன் நடைபெற்றது.1
- தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலின் மகாகும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கி, இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம் ஆகியன மங்கள இசையுடன் முழங்க, பூர்ணாஹதி நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து, யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது சுமந்து சென்று, கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். திருக்குட நன்னீராட்டு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்ட பின்னர், கலசத்திற்கு ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீ திரெளபதியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ திரெளபதியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த மகாகும்பாபிஷேக விழாவில் மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, குண்டுப்பள்ளம், சந்திராபுரம், காளி கவுண்டர் கொட்டாய், உலகானஅள்ளி, அகரம், வெலாங்காடு, கல்லாகரம், ஆஞ்சநேயபுரம், செவத்தாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதங்களும் வழங்கப்பட்டன.1
- தருமபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தருமபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் பாடி கோவிந்தசாமி தலைமையில் நடந்தது, சேலம் மண்டல துணை செயலாளர் பரணிதரன் வரவேற்புரை ஆற்றினார். இதில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஆர்.அன்பழகன் கலந்துகொண்டு, எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ராணிப்பேட்டை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சமூக ஊடகப் பேரவையின் பொறுப்பாளராக சி. விநாயகம் அவர்கள் உள்ளார்.1
- தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில், எல்லுகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது கூலித் தொழிலாளியான மணிமேகலை என்பவரிடம் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிளேடு மூலம் ₹1.31 லட்சம் பணம் பறிக்கப்பட்டது. மகளிர் சங்கத்தின் மூலம் கடன் பெற்று தனது தங்க நகைகளை மீட்க வங்கிக்கு வந்த மணிமேகலை, பணம் செலுத்தும் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாததால், மற்றொருவரிடம் கொடுத்து அதனை நிரப்பியுள்ளார். பூர்த்தி செய்த படிவம் தவறாக உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது. பணம் பறிபோன அதிர்ச்சியில் மணிமேகலை கூச்சலிட்டதும், அங்கிருந்த காவலர்கள் உடனடியாக வங்கியின் முன் கதவை பூட்டினர். இருப்பினும், பணத்தைத் திருடியவர்கள் அதற்குள்ளாகவே வங்கியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மணிமேகலை, வங்கி மேலாளரிடமும் பாலக்கோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். தனது வாழ்வாதாரத்திற்காக கூலி வேலை செய்வதாகவும், எனவே தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மணிமேகலையின் கையில் இருந்த மஞ்சள் பையிலிருந்து பணம் பறிக்கப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு பாரத ஸ்டேட் வங்கியில் தொடர்ந்து பணம் மற்றும் நகைப் பறிப்புகள், ஏடிஎம் கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடப்பதாகவும், இதற்கு வங்கியின் நிர்வாக மெத்தனப் போக்கே காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.1