Shuru
Apke Nagar Ki App…
வாளாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தனர்.லால்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெப்பமும் வறச்சியும் நிலவி வந்தது. மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் குருவை சாகுபடி பயிர்களும் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த சில தினங்களுக்கு மழை பெய்தது.இன்று பகலில் வழக்கமான வெப்பம் இருந்த நிலையில் இரவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இந்த மழையால் குருவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Rakesh sharma
வாளாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தனர்.லால்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெப்பமும் வறச்சியும் நிலவி வந்தது. மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் குருவை சாகுபடி பயிர்களும் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த சில தினங்களுக்கு மழை பெய்தது.இன்று பகலில் வழக்கமான வெப்பம் இருந்த நிலையில் இரவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இந்த மழையால் குருவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா.திருஉருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியார் அவர்களின் திரு உருவச்சிலைக்கு நகர கழக செயலாளரும் பேரூராட்சி தலைவருமாகிய பி பால் துரை தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள், வார்டுகிளை நிர்வாகிகள், இளைஞரணியினர், பல்வேறு அணிகளை சார்ந்த தோழர்கள் மற்றும் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.1
- முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார். முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு முசிறி, செப். 17- முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பத்மராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- கரட்டுப்பட்டி பகுதியில் கோடை பட்டம் தாக்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்தது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதி முழுவதும் கோடை வெப்பம் தாங்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பொழுது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பகுதி வெப்பம் தணிந்து திருச்சி உண்டானதால் நாமக்கல் மகிழ்ச்சி அடைந்தனர்1
- ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி.ஏரியை மீட்க அதிரடி உத்தரவு பொதுமக்கள் மகிழ்ச்சி அரியலூர் - ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி. : முற்றிலும் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரியை மீட்க அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவு. அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சன்னாசிநல்லூர் கிராமத்தில் 125 நாள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த 'செரலான் ஏரி' முழுதும் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்ட ஆட்சியர் ந.மிருணாளினி கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர், சர்வேயர் ஆகியோரை அழைத்து செரலான் ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? என்கின்ற விவரத்தை ஆட்சியர் ந.மிருணாளினி கேட்டு கோப்புகளை பார்வையிட்டார். சுமார் 7.30 ஏக்கர் பரப்பளவு உள்ள செரலான் ஏரி, சுமார் 6 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த ஆக்கிரமிப்பை எப்படி அனுமதித்தீர்கள்? இதுவரை ஏன் அகற்றாமல் உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய ஆட்சியர், உடனடியாக ஏரி ஆக்கிரமிப்பை மீட்க உத்தரவிட்டார். அப்போது ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பயிர் சாகுபடி செய்திருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். தரிசாக உள்ள இடங்களை உடனடியாக மீட்கவும், பயிர் செய்த இடங்களை சாகுபடி முடிந்தவுடன் மீட்க ஆட்சியர் ந.மிருணாளினி உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஏரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், உடனடியாக ஏரியை மீட்டு நீராதாணத்தை காக்க உத்தரவிட்டது செந்துறை சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.1
- மணப்பாறையில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் விழா தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் எம்எல்ஏ அவர்கள், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அணி அமைப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- பிரதமர் மோடியின் பிறந்தநாள்: மணப்பாறையில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறை யில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மணப்பாறை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. மணப்பாறை நகரப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கமாக, அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படடு, அவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. தனைத் தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலைய வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினர் இனிப்புகளை வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினர். மணப்பாறை நகரத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் லலிதா அழகப்பன், மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நகரச் செயலாளர்கள் புவனேஸ்வரி, ஜீவானந்தம், ஆரோக்கியசாமி, நகர செயற்குழு உறுப்பினர்கள் தங்கபாண்டியன், பெஸ்ட் ராமசாமி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நகரத் தலைவர் சூரிய பிரகாஷ் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.3
- தந்தை பெரியாரின் 148 பிறந்தநாள் விழா அமைச்சர் பர்வேஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்2
- வாளாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தனர்.லால்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெப்பமும் வறச்சியும் நிலவி வந்தது. மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் குருவை சாகுபடி பயிர்களும் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த சில தினங்களுக்கு மழை பெய்தது.இன்று பகலில் வழக்கமான வெப்பம் இருந்த நிலையில் இரவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இந்த மழையால் குருவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.1