தவறானா வழங்கு பதிவை ரத்து செய்யக்கோரி மேல ஈரால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் . நாங்கள் மேல ஈரால் கிராம மக்கள் எங்கள் ஊரில் 24.06.2026 அன்று நாங்கள் கட்டிய நான்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதற்க்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மழை வெள்ள பாதிப்பால் உடைந்த கணமாய் மற்றும் குடிதண்ணீர் கிணறுசேதமடைந்து இருந்தது அரசாங்கத்திடம் பல முறை முறையிட்டு நடவடிக்கை இல்லை ஆகையால் ஊர்மக்கள் அனைவரும் கோவில் கும்பாபிஷேகம் வருவதால் கோவிலுக்கு எதிரே கிணறும் கண்மாய் உள்ளதால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடது என்று முடிவு செய்து ஊர்மக்களே தங்கள் சொந்தபணத்தில் இந்த மராமத்து பணிகளை செய்ய முடிவு செய்தோம். மராமத்து பணிகளுக்காக எங்கள் ஊரைச்சேர்ந்த சி.கேசவபெருமாள்சாமி மற்றும் பா.சங்கரநாராயணன் தோட்டத்தில் கிணறு வெட்டிய சரள்மண்னை கண்மாய், கோவிலுக்கு எடுத்துவந்தோம் அப்போது எங்களுது ஊருக்கு வந்த எட்டையபுரம் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் சரள்மண் கடத்துவதாக புகார் வந்துள்ளது மண் வாகனத்தை(டிராக்டர்) காவல்நிலையம் கொண்டுவரசொன்னார். நாங்கள் ஐயா எங்கள் ஊரைச் சேர்ந்தவர் கிணற்றுமண் என்று எடுத்து கூறினோம் உடன் உதவி ஆய்வாளர் அவர்கள் எனக்கு புரிகிறது மேல் இடத்தின் வழியாக வந்த புகார் என்பதால் நீங்கள் காவல்நிலையம் வந்து காவல் ஆய்வாளர் இடத்தில் மனுவாக எழுதி கொடுத்துவிட்டு வாகனத்தையும் ஓட்டுனரையும் அழைத்து செல்லுங்கள் என்றார். நாங்களும் அவருடன் காவல்நிலையம் சென்றோம்.அங்கு சென்றவுடன் வாகனத்தையும் ஓட்டுனரையும் நீதிமன்றம் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். செய்வதறியாத நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் எங்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது உங்கள் தோட்ட கிணற்று மண்ணாகயிருந்தாலும் அனுமதி இல்லாமல் அள்ளக்கூடாது இந்த முறை கோவில் வேலை என்பதால் மன்னித்து வழக்கு பதியாமல் வாகனத்தையும் ஓட்டுனரையும் விடுவிக்கிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்றார். மேலும் எங்களது ஊர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளார் இருவரும் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இனி எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என உறுதி கூறியதால் நாங்களும் அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.ஆனால் 21.07.2026 அன்று எங்கள் ஊரை சேர்ந்த எட்டு நபர்களுக்கு எட்டையபுரம் காவல்நிலைய காவலர்கள் 22.07.2026 அன்று நீங்கள் எட்டு பேரும் காவல் நிலையத்தில் விசாரனைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர். அதில்12.06.2026 அன்றே 240/2026 ,2 நபர்கள் மீதும் ,241/2026,6 நபர்கள் மீதும் ஏற்கனவே வழக்குபதிவு செய்துள்ளனர். எனபதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். ஆகையால் ஆட்ச்சியராகிய தாங்கள் தீர விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

- அயோத்தி நன்கொடை விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; நடித்துக் காட்டி ராகுல் காந்தி எதிர்ப்பு! அயோத்தி ராமர் கோவிலில் பெறப்பட்ட நன்கொடை கணக்குகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தற்பொழுது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இவ்விவகாரத்தைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்பி-க்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பக்தர்களின் நன்கொடைப் பணம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும் அதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் திருட்டு முறைகேடுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடக பாணியில் நடித்துக் காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். பக்தர்கள் செலுத்தும் நன்கொடை உண்மையில் சரியான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டமும், ராகுல் காந்தியின் விசித்திரமான போராட்ட வடிவமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2
- கயத்தாறில் தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் மூவிஸ் சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன்,வருகை புரிந்த அனைவரையும் மாநில துணைத் செயலாளர் சீனிவாச ராகவன்,வரவேற்புரையாற்றினார், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கயத்தாறு டு தேவர்குளம் சாலையை சீரமைக்க கோரியும், அய்யனார்ஊத்து கிராமத்தில் செயல் பட்டு வரும் கல்கோரியால் அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் அழிவும் பாதையில் உள்ளது.இதனால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இப்பகுதியில் அமையப்பட்டுள்ள கல்கோரியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கல்கோரியை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும்அதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், கடந்த 25 -26ஆண்டு பயிர் காப்பீடு திட்டம், வழங்க வேண்டும் எனவும்,முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காட்டுப்பன்றி அழிவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், இப்பகுதியில் உள்ள வேலிக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தவேண்டுமமாவட்ட செயலாளர் மாரீஸ்வரன் மாவட்ட தலைவர் பெரியசாமி ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் நெல்லை மாவட்ட அவை தலைவர் கிருஷ்ணசாமி பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்3
- தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் தலைமை வகித்து மாணவர்களையும் விவசாயிகளையும் பாராட்டி, கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும், கிராமப்புற மதீப்பீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மூத்த விவசாயி முருகன் முன்னிலை வகித்தார். டாக்டர் நிவேதிதா தற்போதைய யுகத்தில் வேளாண்மையில் நவீன யுக்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, காலவரிசை, மேட்ரிக்ஸ், வள வரைபடம், வென் வரைபடம் மற்றும் சமூக வரைபடம் ஆகிய கருவிகளில் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், . இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து நடைமுறை அனுபவத்தை வழங்கியது. குறிப்பிடத்தக்கது2
- பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்1
- கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார் பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.1