Shuru
Apke Nagar Ki App…
பழனி ஒட்டசத்திரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல் ஒட்டன்சத்திரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் உயர் அதிகாரிகள் திடீர் நடைபயண ரோந்து மேற்கொண்டனர்.
Sudharsan
பழனி ஒட்டசத்திரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல் ஒட்டன்சத்திரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் உயர் அதிகாரிகள் திடீர் நடைபயண ரோந்து மேற்கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பழனி நகர் பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை தனித்தனியே பிரித்து சேகரித்து வந்தது வரவேற்கத்தக்கது1
- ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.2
- 100 அடி தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவாக 100 அடி உயர தேசியக் கொடி ஏற்ற கோரிக்கை கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவின்படி பெரியகுளத்தில் திரண்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் தியாகராஜன். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தார். அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், எல்லையில் வீரமரணம் அடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், தாமரைக்குளம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் மலைப் பகுதியில் 100 அடி உயர தேசியக் கொடி அமைக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவெடுத்தணர். இதற்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி கேட்கப்பட்டும், தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, தாமரைக்குளம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் தொடக்கமாக, வீரமரணம் அடைந்த தியாகராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டிற்காக உயிர்நீத்த வீரருக்கு மரியாதை செய்யக் கூட 5 ஆண்டுகளாக அனுமதி மறுப்பது மிகுந்த வேதனையளிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைக் கொடுத்த தியாகிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி ஏற்றக் கேட்கிறோம். இதற்கு 5 ஆண்டுகளாக அனுமதி தராமல் அலைக்கழிப்பது வேதனை தருகிறது. அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்." பேட்டி : சரவணன் முன்னால் ராணுவ வீரர்.1
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் தலித் கே. ராமர் திருவுருவபட திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பையா பங்கேற்பு. ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் தலித் கே.ராமர் நினைவேந்தல் திருவுருவ படத்திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பைய்யா பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் தலித்.கே.ராமர் நினைவேந்தல் மற்றும் திருவுருவ படத்திறப்பு விழா தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் அசுரன் என்ற மகுடீஸ்வரன், தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தலித் விடுதலை இயக்க மாநில தலைவர்.ச.கருப்பைய்யா கலந்துகொண்டு தலித் இயக்க மாநில செயலாளர் தலித் கே ராமர் திருவுருவ படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் 28 ந்தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் நிலமீட்பு குறித்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலித் கதிர் காமன், தலித் விடுதலை இயக்கம் மாநில இளைஞரணிச் செயலாளர் பீமா ராவ் தமிழ் புலிகள் கட்சியின் மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் சின்னகருப்பன், பிஎஸ்பி மாவட்ட தலைவர் மனேகரன்,இந்தியதேசிய காங்கிரஸ் கட்சி எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் பிச்சை முத்து, த.தீ.ஒ.மு மாவட்ட தலைவர் முத்துசாமி, தேவேந்திர மறுமலர்ச்சி பேரவை பகத்சிங் பழனிசாமி, ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை தலித் கே. சுப்பிரமணியன், தமிழ் தேச மக்கள் முன்னணி காளிமுத்து, விசிக இளஞ்சிறுத்தைகள் பேரவை மாவட்ட செயலாளர் வடிவேல்,உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் தலித் விடுதலை இயக்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராசேந்திரன் நன்றி தெரிவித்தார்.2
- திண்டுக்கல்லில் வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரின் சிசிடிவி காட்சி1