கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட கோரி நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராமப் பணியாளர்கள் சங்கம் பெருந்திறல் முறையீடு ஆர்ப்பாட்டம்: கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் கல்வித் தகுதியின் பெயரில் வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு பதவியேற்பு ஐந்தாண்டு கால கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராமப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திறல் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய் கிராம பணியாளர்கள் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆலோசகர் பி கே சிவக்குமார் தலைமையிலும், தமிழ் மாநில வருவாய் துறை மாவட்ட செயலாளர் சுந்தரவளவன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கண்டனம் முழக்கமிட்டனர்.
கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட கோரி நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராமப் பணியாளர்கள் சங்கம் பெருந்திறல் முறையீடு ஆர்ப்பாட்டம்: கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் கல்வித் தகுதியின் பெயரில் வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு பதவியேற்பு ஐந்தாண்டு கால கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராமப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திறல் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய் கிராம பணியாளர்கள் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆலோசகர் பி கே சிவக்குமார் தலைமையிலும், தமிழ் மாநில வருவாய் துறை மாவட்ட செயலாளர் சுந்தரவளவன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கண்டனம் முழக்கமிட்டனர்.
- நாகப்பட்டினம் அடுத்துள்ள ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரதிபா. இவருடைய கணவர் கார்த்திக் தனக்கு நண்பர் உதவியுடன் ஈரான் நாட்டிற்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு போர் பதற்றம் நிலவுவதால், கடந்த ஒரு வாரகாலமாக தொடர்பு இழந்துள்ளதாகக் கூறி நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாக்ஷிடம் மனு அளித்தார். அங்கு சென்ற பிறகு அவருடன் எந்தவித தொலைபேசி தொடர்பும் கொள்ள முடியாமல் இருப்பதாகவும், அவர் இருக்கும் இடம் குறித்த தகவலும் தெரியாத நிலையில் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளதாகவும் பிரதீபா தெரிவித்துள்ளார். எனவே தனது கணவரை பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்1
- 10.03.2026 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியில் ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்: சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாட்டியகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிடங்களூர் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள தரைமட்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூர் – திருக்குவளை – கச்சனம் இணைப்பு பிரதான சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை விரைவில் சீரமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். இதனால் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் உலக மகளிர் தின கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியில் மகளிர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மகளிர் பாதுகாப்பு, மகளிரை காத்திடுங்கள், பூக்கோலம், ரங்கோலி கோலம், பூக்கோலம், சிக்கு கோலம், கிளி கோலம் என கோலமிட்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர். விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர் தங்க கண்ணதாசன், தலைவர் தேவராஜன் ஆகியோர்கள் கோலங்களை பார்வையிட்டு கோலமிட்ட மகளிர்களிடம் அதற்கான பொருள் விளக்கங்களை கேட்டு மதிப்பெண் வழங்கி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம், ஆறுதல் பரிசுகளுக்கானவர்களை தேர்வு செய்தனர்.1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by Kuppusamy4
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் கல்வித் தகுதியின் பெயரில் வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு பதவியேற்பு ஐந்தாண்டு கால கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராமப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திறல் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய் கிராம பணியாளர்கள் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆலோசகர் பி கே சிவக்குமார் தலைமையிலும், தமிழ் மாநில வருவாய் துறை மாவட்ட செயலாளர் சுந்தரவளவன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கண்டனம் முழக்கமிட்டனர்.1