logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவாடானை பகுதியில் பெய்த கனமழையால் தீவிரமடைந்த விவசாயப் பணிகள் ​ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் திருவாடானை பகுதியில், சுமார் 27 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.​இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வயல்களில் களை பிடுங்குதல், மருந்து தெளித்தல் மற்றும் நாற்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

19 hrs ago
user_அனல் ஆனந்த்
அனல் ஆனந்த்
திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
19 hrs ago

திருவாடானை பகுதியில் பெய்த கனமழையால் தீவிரமடைந்த விவசாயப் பணிகள் ​ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் திருவாடானை பகுதியில், சுமார் 27 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.​இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வயல்களில் களை பிடுங்குதல், மருந்து தெளித்தல் மற்றும் நாற்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருவாடானை அருள்மிகு சினேகவல்லி கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் கோலாகலம் திருவாடனை பெரிய கோவிலில் ​நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான இன்று, விஜயதசமியை முன்னிட்டு அருள்மிகு சினேகவல்லி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள்மிகச் சிறப்பாக நடைபெற்றன. உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ​ஹோமம் மற்றும் வேத பாராயணம்: விழாவின் தொடக்கமாக அன்னை ஸ்னேகவல்லிக்கு சிறப்பு ஹோமமும், வேத மங்கள் முழங்க வேத பாராயணமும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. ​ ஆன்மிகச் சிறப்புமிக்க நவ சுஹாசினி பூஜை முறைப்படி செய்யப்பட்டு, சுமங்கலிப் பெண்களுக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன. ​ ஹோம வழிபாடுகளைத் தொடர்ந்து, மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அன்னை ஸ்னேகவல்லிக்கு பால், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அன்னையின் திருவருள் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ​பிராத்தனை மற்றும் முக்கிய நோக்கம்: ​மண் பயனுறவும், விவசாயம் செழித்தோங்கி நாடு வளம் பெறவும், மக்களின் வாழ்வு நலம் பெறவும் இந்தச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விஜயதசமி திருநாளில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியையும், ஆன்மிகச் புத்துணர்ச்சியையும் அளித்தது.
    1
    திருவாடானை அருள்மிகு சினேகவல்லி கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் கோலாகலம்
திருவாடனை பெரிய கோவிலில் ​நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான இன்று, விஜயதசமியை முன்னிட்டு அருள்மிகு  சினேகவல்லி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள்மிகச் சிறப்பாக நடைபெற்றன. உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
​ஹோமம் மற்றும் வேத பாராயணம்: விழாவின் தொடக்கமாக அன்னை ஸ்னேகவல்லிக்கு சிறப்பு ஹோமமும், வேத மங்கள் முழங்க வேத பாராயணமும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.
​ ஆன்மிகச் சிறப்புமிக்க நவ சுஹாசினி பூஜை முறைப்படி செய்யப்பட்டு, சுமங்கலிப் பெண்களுக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன.
​ ஹோம வழிபாடுகளைத் தொடர்ந்து, மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அன்னை ஸ்னேகவல்லிக்கு பால், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அன்னையின் திருவருள் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
​பிராத்தனை மற்றும் முக்கிய நோக்கம்:
​மண் பயனுறவும், விவசாயம் செழித்தோங்கி நாடு வளம் பெறவும், மக்களின் வாழ்வு நலம் பெறவும் இந்தச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விஜயதசமி திருநாளில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியையும், ஆன்மிகச் புத்துணர்ச்சியையும் அளித்தது.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *! *ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
    1
    திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *!
*ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு*

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • இராமேஸ்வரம் கோவில் வாசலில் பெண்களை ஏற்றமால் சென்ற அரசு பேருந்து - ஆட்டோவில் துரத்தி பிடித்து நியாயம் கேட்ட பெண் இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவில் வாசல் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த உள்ளூர் பெண்களை கண்டும், அரசு இலவச பேருந்து நிறுத்தாமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வார சந்தை என்பதால், அப்பகுதியில் பெண்கள் அதிகமாக வருவார்கள் என தெரிந்தும், போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்கவில்லை என்றும், அவ்வழியே வந்த அரசு இலவச பேருந்து தடம் எண் 1C, ஏற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண், ரூ.100 கொடுத்து ஆட்டோ பிடித்து இராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு வந்து, அந்த பேருந்தை நிறுத்தி தனது ஆதங்கத்தை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. "இலவச பேருந்து என்றால் பெண்களை மதிக்க வேண்டாமா? இதே போல் தான் எப்போதும் நடக்கிறது" என அந்த பேருந்தில் இருந்த மற்ற பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    இராமேஸ்வரம் கோவில் வாசலில் பெண்களை ஏற்றமால் சென்ற அரசு பேருந்து - ஆட்டோவில் துரத்தி பிடித்து நியாயம் கேட்ட பெண் 
இராமநாதபுரம் மாவட்டம்,  ராமேஸ்வரம் கோவில் வாசல் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த உள்ளூர் பெண்களை கண்டும், அரசு இலவச பேருந்து நிறுத்தாமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வார சந்தை என்பதால், அப்பகுதியில் பெண்கள் அதிகமாக வருவார்கள் என தெரிந்தும், போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்கவில்லை என்றும், அவ்வழியே வந்த அரசு இலவச பேருந்து தடம் எண் 1C, ஏற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண், ரூ.100 கொடுத்து ஆட்டோ பிடித்து இராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு வந்து, அந்த பேருந்தை நிறுத்தி தனது ஆதங்கத்தை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. "இலவச பேருந்து என்றால் பெண்களை மதிக்க வேண்டாமா? இதே போல் தான் எப்போதும் நடக்கிறது" என அந்த பேருந்தில் இருந்த மற்ற பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Naveen
    Naveen
    இராமநாதபுரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் ஆகியோர் இன்று 21/10/26 திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா உள்ளார்.
    1
    திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கினை  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  ப. வெங்கடரமணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ்  ஆகியோர் இன்று  21/10/26 திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா உள்ளார்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    1
    சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ராமநாதசாமி திருக்கோயில் ஆய்வு செய்த அமைச்சர், மழைநீர் வடிக்கால், போக்குவரத்து நெரிசலை சரி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்த அமைச்சர். ராமநாதசாமி திருக்கோயில் ஆய்வு செய்த அமைச்சர், மழைநீர் வடிக்கால், போக்குவரத்து நெரிசலை சரி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்த அமைச்சர். ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராமநாதசாமி திருக்கோயில் உள்ளே மழை நீர் புகுந்ததை அடுத்து சாமி தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் இதனை அடுத்து திருக்கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது குறித்து செய்தி வெளியிடப்பட்டதன் எதிரொலியாக இன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் அவர்கள் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்ததோடு இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காதுவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டார் இன்தனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது ராமேஸ்வரம் ஒரு சுற்றுலா தளமாகவும் ஆன்மிகத்தலமாக இருந்து வருவதினால் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்துக்கு வருகை தருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாது மழைக்காலங்களில் மழை நீர் வெளியேற்றுவதற்கு போதிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
    1
    ராமநாதசாமி திருக்கோயில் ஆய்வு செய்த அமைச்சர், மழைநீர் வடிக்கால், போக்குவரத்து நெரிசலை சரி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்த அமைச்சர்.
ராமநாதசாமி திருக்கோயில் ஆய்வு செய்த அமைச்சர், மழைநீர் வடிக்கால், போக்குவரத்து நெரிசலை சரி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்த அமைச்சர்.
ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராமநாதசாமி திருக்கோயில் உள்ளே மழை நீர் புகுந்ததை அடுத்து சாமி தரிசனத்திற்காக  சென்ற பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்
இதனை அடுத்து திருக்கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது குறித்து செய்தி வெளியிடப்பட்டதன் எதிரொலியாக இன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் அவர்கள் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்ததோடு இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காதுவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டார் இன்தனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது ராமேஸ்வரம் ஒரு சுற்றுலா தளமாகவும் ஆன்மிகத்தலமாக இருந்து வருவதினால் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்துக்கு வருகை தருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாது மழைக்காலங்களில் மழை நீர் வெளியேற்றுவதற்கு போதிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
    user_Kaviston
    Kaviston
    இராமேஸ்வரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    20 hrs ago
  • இலுப்பூரில் இடது சாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் இலுப்பூரில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இடது சாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது  இலுப்பூரில் நடந்த போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிபிஐ மாவட்ட பொருளாளர் தர்மராஜன், ஒன்றிய செயலாளர் மீராமொய்தின், சண்முகம், சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்  ஆர்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய், சாகுபடி நடந்து வரும் நிலையில் நிபந்தனை இன்றி புதிய கடன்கள் வழங்கிட வேண்டும். மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சாகுபடி பாதிப்பிற்கு உரிய நிவாரணமும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட நடவடிக்கை எடு டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் தொடர்ந்து திறந்துவிட உரிய கவணம் செலுத்தவும் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி 177.25 டிஎம்சி தண்ணீர் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள 123 டிம்சி தண்ணீரை பெற்றுத்தர மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எல்நினோ பாதிப்பால் ஏற்படுகிற வறட்சி மற்றும் மழை, வெள்ளம் கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னவாசல், விராலிமலை ஒன்றிய விவசாயிகளை பாதுகாத்திட 24 மணிநேரம் மின்சாரம் வழங்க த.வெ.க அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசமிட்டனர். இதில் ரெங்கசாமி,ரகுபதி, பாஸ்கர், அய்யாதுரை, மகாலிங்கம், ஜோஷி, தேவராஜ், மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    1
    இலுப்பூரில்
இடது சாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்
இலுப்பூரில்  பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இடது சாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது 
இலுப்பூரில் நடந்த போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிபிஐ மாவட்ட பொருளாளர் தர்மராஜன், ஒன்றிய செயலாளர் மீராமொய்தின், சண்முகம், சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் 
ஆர்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய், சாகுபடி நடந்து வரும் நிலையில் நிபந்தனை இன்றி புதிய கடன்கள் வழங்கிட வேண்டும். மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சாகுபடி பாதிப்பிற்கு உரிய நிவாரணமும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட நடவடிக்கை எடு டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் தொடர்ந்து திறந்துவிட உரிய கவணம் செலுத்தவும் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி 177.25 டிஎம்சி தண்ணீர் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள 123 டிம்சி தண்ணீரை பெற்றுத்தர மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எல்நினோ பாதிப்பால் ஏற்படுகிற வறட்சி மற்றும் மழை, வெள்ளம் கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னவாசல், விராலிமலை ஒன்றிய விவசாயிகளை பாதுகாத்திட 24 மணிநேரம் மின்சாரம் வழங்க த.வெ.க அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசமிட்டனர்.
இதில் ரெங்கசாமி,ரகுபதி, பாஸ்கர், அய்யாதுரை, மகாலிங்கம், ஜோஷி, தேவராஜ், மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 min ago
  • திருவாடானை பகுதியில் பெய்த கனமழையால் தீவிரமடைந்த விவசாயப் பணிகள் ​ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் திருவாடானை பகுதியில், சுமார் 27 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.​இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வயல்களில் களை பிடுங்குதல், மருந்து தெளித்தல் மற்றும் நாற்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
    1
    திருவாடானை பகுதியில் பெய்த கனமழையால் தீவிரமடைந்த விவசாயப் பணிகள்
​ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் திருவாடானை பகுதியில், சுமார் 27 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.​இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வயல்களில் களை பிடுங்குதல், மருந்து தெளித்தல் மற்றும் நாற்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.