ரூ, 5.19 கோடி மதிப்பில் தோழி பணிபுரியும் மகளீர் விடுதி கட்டிடம் திறப்பு சமூக நலன் மகளீர் உரிமை துறை சார்பில் ரு, 5.19 கோடி மதிப்பில் தோழி பணிபுரியும் மகளீர் விடுதி கட்டிடம் திறப்பு தருமபுரி அருகே நல்லம்பள்ளியில் ரூபாய் 5.19 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய 'தோழி. மகளிர் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது இதனை கானொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்துவைத்தார் இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் குத்து விளக்கேற்றி தோழி மகளீர் விடுதி கட்டிடத்தை பார்வையிட்டார் இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்திரி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.கலாவதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரூ, 5.19 கோடி மதிப்பில் தோழி பணிபுரியும் மகளீர் விடுதி கட்டிடம் திறப்பு சமூக நலன் மகளீர் உரிமை துறை சார்பில் ரு, 5.19 கோடி மதிப்பில் தோழி பணிபுரியும் மகளீர் விடுதி கட்டிடம் திறப்பு தருமபுரி அருகே நல்லம்பள்ளியில் ரூபாய் 5.19 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய 'தோழி. மகளிர் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது இதனை கானொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்துவைத்தார் இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் குத்து விளக்கேற்றி தோழி மகளீர் விடுதி கட்டிடத்தை பார்வையிட்டார் இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்திரி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.கலாவதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- .ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறுந்தககளால் பரபரப்பு நீதிபதிகள் உட்பட- நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கும் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிலா நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறும் தகவலில் இன்று 12:020 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை காவல் துறையினர் விரைந்து வந்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 2000 ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வெளியேற்றி 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் லூபி உதவியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது இந்த சம்பவத்தால் நீதிமன்றம் வாழாகும் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19. 12. 2025 தேதியும், தருமபுரி பழைய கோர்ட் வாலாகத்திற்கு கடந்த 9ம் தேதியும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.1
- குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை பெருவிழா: மேளதாளத்துடன் அந்தரங்கத்தில் தொங்கியபடி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை நிகழ்ச்சி பெருவிழா இன்று காலை மேளதாளத்துடன் பக்தர்கள் அலகு குத்தியும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் அலங்கரிகப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலமாக மயானம் வரை சென்றது கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் 5ம் நாளான இன்று மயானக்கொள்ள திருவிழா ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் அலகு குத்தி அந்தரங்கத்தில் தொங்கியபடியும் பென் பக்தர்கள் வாயில் அலகு குத்தியும் அம்மன், காளி வேடங்களுடன் மேளதாளத்துடன் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக மயானம் வரை சென்றனர் பின்னர் நன்பகல் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது1
- நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் செவ்வாய் தோறும் நாட்களில் வாரச்சந்தை நடைபெறும் வழக்கம். இன்று (பிப்.17) காலை கூடிய வார சந்தையில் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஆடுகள் தரம் மற்றும் ரகத்தை பொறுத்து 3,000ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை என, இன்று 45 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் தீமிதி விழா !! கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கை மாருளாளி வினோதினி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் கரகம் பாலித்து, விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், தீமிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருநங்கைகள் வழிபடும் இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- நம்பியூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி இயக்கம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நம்பியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நம்பியூர் பேரூர் கழக பொறுப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினர்.1
- அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம். தருமபுரி குமாரசாமி பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயியில் மயான கொள்ளை பெருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடந்த 12 ம் தேதி சக்தி கரகம் அழைத்து கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைதொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி, சுப்ரமணியர், அம்மாளுக்கு சிறப்பு யாகங்கள் நடைந்தேறியது. அதனைதொடர்ந்து கடந்த 14 ம் தேதி ஏராளமான பெண்கள், ஆண் பக்தர்கள் தீக்குண்டத்தல் இறங்கி சுவாமி தரிசனம் சேய்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். நேற்று பால் குடம் ஊர்வலமும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து இன்று மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயான கொள்ளை புறப்பாடு நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் அலகு குத்தியும், நூதன முறையில் அழகு குத்தி கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். குழுவாக சேர்ந்து கோலட்டம் ஆடியும், காளி வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்து மயான கொள்ளை நடைபெரும் மயானத்திற்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தங்களது வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு, உப்பு உள்ளிட்ட நவதானியங்களை அம்மன் மீது வீசினர். பின்னர் மயானத்தில் நவதானியங்கள் படையலிட்டு பண்டைய கால வழக்கபடி மயானத்தில் உள்ள எலும்புகளை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. அதே போல் தருமபுரி எஸ்.வி.ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தங்களது நேரத்தி கடனை செலுத்தினர்.1