Shuru
Apke Nagar Ki App…
புதுக்கோட்டையில் பரதநாட்டியத்தில் உலக சாதனை புரிந்த மாணவி சாய் திவ்யா! புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நோபில் உலக சாதனைக்காக தனியார் பள்ளியில் படிக்கும் சிறுமி சாய் திவ்யா ஐஸ் கட்டி மீது நின்று ஐந்து நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை புரிந்தார். அவருக்கு நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நோபில் நிறுவனத்தின் சார்பில் சிறுமி சாய் திவ்யாவிற்கு வெற்றிக்கான பதக்கமும், உலக சாதனை புரிந்த சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த மாணவி படிக்கும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவியின் சக மாணவிகள், அப்பகுதி பெரியவர்களுக்கு ஏராளமான கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Rajesh
புதுக்கோட்டையில் பரதநாட்டியத்தில் உலக சாதனை புரிந்த மாணவி சாய் திவ்யா! புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நோபில் உலக சாதனைக்காக தனியார் பள்ளியில் படிக்கும் சிறுமி சாய் திவ்யா ஐஸ் கட்டி மீது நின்று ஐந்து நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை புரிந்தார். அவருக்கு நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நோபில் நிறுவனத்தின் சார்பில் சிறுமி சாய் திவ்யாவிற்கு வெற்றிக்கான பதக்கமும், உலக சாதனை புரிந்த சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த மாணவி படிக்கும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவியின் சக மாணவிகள், அப்பகுதி பெரியவர்களுக்கு ஏராளமான கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வார சந்தை விலை நிலவரம் வெங்காயம் 2 கி ரூ.140 தக்காளி 1 .500 ரூ.50 உருளைக்கிழங்கு 1.500 ரூ. 50 பீட்ரூட் 1 தட்டு ரூ.20 அவரைக்காய் 1 தட்டு ரூ. 20 முட்டைகோஸ் ரூ. 30-40 இஞ்சி 100 கி ரூ.30 கொத்தமல்லி ரூ.10 வெண்டைக்காய்1/2 கி ரூ.50 முள்ளங்கி 1 தட்டு ரூ 20 கேரட் 1/2 கி ரூ 50 தேங்காய் 1 காய் 20 -50 ரூ கொடை மிளகாய் 3 காய் 20 ரூ முருங்கை காய் 3 காய் 20 ரூ ஆப்பிள் 1 கி 200 ரூ சாத்துக்குடி 1 கி 80 ரூ திராட்சை பழம் 1/2 கி 40 ரூ விநாயகர் சிலை 50 -200 ரூ அகல் விளக்கு 10 விளக்கு 10 ரூ பொரி 20 ரூ கதம்பம் 1 மோலம் 25 ரூ என்ற விலைக்கு விற்கப்பட்டது.1
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர். பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்1
- வைத்தியலிங்க புரம் வெற்றி விநாயகர் பாலமுருகன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூசை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வைத்தியலிங்க புரம் வெற்றி விநாயகர் பாலமுருகன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று (செப் 14) வெற்றி விநாயகருக்கு சிறப்பு பூசை நடைபெற்றது. இன்று காலை மஞ்சல்,பால், தயிர்,திரவிய பொடி,பன்னீர்,அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பின் மோதகம் பிரசாதம் வழங்கப்பட்டது.1