Shuru
Apke Nagar Ki App…
ஆத்தூரைச் சேர்ந்தவர் சேலம் கிழக்கு மாவட்ட புதிய தலைவராக நியமனம்! சென்னை பல்லாவரத்தில் உள்ள, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கடந்த (செப்டம்பர் 13) அன்று அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் K கினோஷ் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக, ஆத்தூர் முல்லை வாடியைச் சேர்ந்த, சே.கார்த்திகேயன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Kannapiran S
ஆத்தூரைச் சேர்ந்தவர் சேலம் கிழக்கு மாவட்ட புதிய தலைவராக நியமனம்! சென்னை பல்லாவரத்தில் உள்ள, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கடந்த (செப்டம்பர் 13) அன்று அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் K கினோஷ் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக, ஆத்தூர் முல்லை வாடியைச் சேர்ந்த, சே.கார்த்திகேயன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.1
- ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.1
- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- மாற்றுக் கட்சியில் இணையும் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் விரைவில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் பணி செய்ய உள்ளதாகவும், தன்னோடு இது நாள் வரை தோளோடு தோள் கொடுத்து பயணித்த அனைவருக்கும் பதவியை பெற்று தருவேன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், தேர்தலுக்கு இன்னும் பல காலங்கள் உள்ளதால் பொறுமையுடன் தனது அறிவிப்பை அனைவரும் இயக்கத்தக்க வகையில் வெளியிடுவேன் என முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.1
- ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- ராசிபுரத்தில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி ...... இராசிபுரம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்வெட்டு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதிலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மழைக்கால சூழல் நிலவி வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சாலைகளிலும் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிந்து, மின்விநியோகத்தை சீராக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1