மாப்பிள்ளையூரனியில் ஒரு குடம் தண்ணீர் 13 ரூபாய்க்கு பொதுமக்கள் வாங்கும் அவலநிலஅமைச்சர் மதன்ராஜா தொகுதியில் இப்படி ஒரு நிலைமை. கொந்தளிக்கும் பெண்கள். தீர்வு தான் எப்போது. ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தில் மொத்தம் 81 கிராமங்கள் உள்ளது. 69 கிராமம் அனுமதி பெற்றது இந்த கிராமத்தில் மொத்த மக்கள் தொகை ஒரு லட்சத்து ஐயாயிரம் பேர் இந்த பஞ்சாயத்தில் குடியிருக்கின்றனர் இதில் வாக்காளர்கள் மட்டும் 35500 பேர் உள்ளனர். இந்தக் கிராமத்தில் தான் குடிநீர் பிரச்சனை தலை தூக்கி உள்ளது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க வேண்டும் என்றால் 95 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. மாப்பிள்ளையூரனி உள்ளாட்சி பதவிகளில் இருந்த வரை இந்த பஞ்சாயத்துக்கு 28 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருந்தது இந்த கிராமத்திற்கு மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது இந்த பஞ்சாயத்தில் 55 குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது இதன் மூலம் தான் இந்த பஞ்சாயத்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் தற்போது 8 லட்சம் லிட்டர் குடிநீர் தான் இந்த பஞ்சாயத்துக்கு வருகிறது இதனால் தான் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளையூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன்ராஜா அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனி பஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன்ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது ஒரு ட்ரம் தண்ணீர் 150 ரூபாய்க்கு வாங்க வேண்டியது உள்ளது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் பஞ்சாயத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது அதுவும் 2 குடம் தண்ணீர் தான் கிடைக்கிறது இரண்டு குடம் தண்ணீர் வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும் வாரத்துக்கு 500 ரூபாய் கொடுத்து ஒரு குடும்பத்திற்கு தண்ணீர் விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது மாதம் 3000 ரூபாய் செலவாகிறது ஆனால் இதற்குத் தீர்வு கிடைக்காமல் நாங்கள் தவிர்த்து வருகிறோம் இந்த பஞ்சாயத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தினசாி கூலி வேலைக்கு கடல் தொழிலுக்கும் செல்லக்கூடிய மக்கள் தான் உள்ளனர் இதுவரை எங்கள் பஞ்சாயத்தில் வந்து மக்களிடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சருமான மதன் ராஜா எந்த குறைகளும் வந்து கேட்கவில்லை. அதுபோல இந்த பஞ்சாயத்தில் வாழ்வு ஆபரேட்டர் ஆள் பற்றாக்குறை உள்ளது அதுபோல ஏற்கனவே பணியாற்றக் கூடியவர் பாதி நேரம் குடிபோதையில் தான் இருக்கிறார் இங்கு உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வீணாக குடிநீர் செல்கிறது என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து மக்கள் 15 ரூபாய் கொடுத்து ஒரு குடம் தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது ஆனால் இதனை கண்டு கொள்ளாமலேயே தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன்ராஜா செயல் பட்டு வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது மாற்றம் வேண்டும் மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாக்களித்தோம் ஆனால் எங்கள் நம்பிக்கை எல்லாமே தற்போது சிதைந்து விட்டது என்று பெண்கள் வெளிப்படையாகவே தமிழக அரசு மீது குற்றம் சுமத்தும் சூழ்நிலையும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீது கடும் அதிருப்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- தூத்துக்குடி ஆவணி அவிட்டம் ஏராளமானோர் பூணூல் மாற்றிக் கொண்டனர் தூத்துக்குடி ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று ஏராளமானோர் பூணூல் மாற்றி வழிபாடு செய்தனர். இன்று ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு பூணூல் போடுபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஆவணி அவிட்ட தினத்தில் தங்கள் பூணூலை மாற்றி வழிபாடு நடத்துவர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தட்டார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் ஆலயத்தில் காலை முதல் ஏராளமானோர் புதிய பூணூலை மந்திரங்களை ஓதி பூஜைக்கு பின் அணிந்து கொண்டு வழிபாடு நடத்தினர் இதைத்தொடர்ந்து காமாட்சியம்மன் மற்றும் விஸ்வகர்மாவிற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.1
- ஓட்டப்பிடாரம் அருகே நான்கு வழி சாலையில் தவறான திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு -புதியம்புத்தூர் போலீசார் விசாரணை ஓட்டப்பிடாரம் அருகே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சுதாகர் (40)என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தூத்துக்குடி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியபுரம் பாலத்தில் சுதாகர் தவறான திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த மாருதி ஆல்ட்டோ கார் அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயர்ந்தார். சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (40 )என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்1
- திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார். வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.1
- கயத்தாறு தாலுகா தலையால் நடந்தால் குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்து புதிய வழித்தடத்தில் தொடக்கம் கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு திருநெல்வேலி சங்கர் நகர் கங்கைகொண்டான் பார்த்திங்களா ராஜா பெருங்குடி வழியாக தலையால் நடந்தால் கிராமத்திற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பஸ்களில் இந்த 9 எல் என்ற வழித்தடத்தில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், தலையால் நடந்தால் குளம் கிளைச் செயலாளர் பால்பண்ணைமுத்து, ஏ.சி.பால்முருகன்,கவிதா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பேச்சியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் வள்ளிவேல், முத்துமாலை, பலவேசமுத்து, இமானுவேல், முத்துக்குமார், ஊர் நாட்டாண்மைகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.4
- குற்றால அருவிகளில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்த வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களை கட்டி வரும் நிலையில் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.3
- சேர்மன் இல்ல திருமண விழா மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக உள்ள ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழா கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமண விழாவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மணமக்களை வாழ்த்தினார்.1
- தூத்துக்குடி மழைக்கால நிவாரணம் உயர்வு தொழிலாளர்கள் கொண்டாட்டம் தூத்துக்குடி உப்பளதொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 7000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உட்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது மேலும் இந்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உட்பட தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூபாய் 5000 இலிருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத்தை ரூபாய் 5000 லிருந்து 7000 ஆக உயர்த்தி வழங்கபடும் என சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதைத்தொடர்ந்து மழைக்கால நிவாரணத் தொகையை 7000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி முடுக்கு காடு பகுதியில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உப்பள தொழிலாளர் ராமலட்சுமி தலைமையில் பெண் உட்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் மழைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உடன் உட்பள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மழைக்கால நிவாரணத்தை அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு தான் என்று இருக்கும் அரசாணையை ரத்து செய்து குடும்பத்தில் கணவன் மனைவி உட்பள தொழிலாளர்களாக இருந்தால் அவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் முடங்கி கிடக்கும் உப்பள தொழிலாளர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்தி உப்பள தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் மேலும் உப்பளங்களில் உப்பள தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் உட்பள தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் உபகரணங்கள் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மேலும் மழைக்கால நிவாரணத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.1
- குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.1