திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார். வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

- கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு -பக்தர்கள் தரிசனம் நாகர்கோவிலில் அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கு பால் பன்னீர் சந்தனம் களபம் தயிர் மூலிகைச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பிரதோஷ விநாயகர் காளை வாகனத்தில் கோவிலை மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.1
- கோவில்பட்டி முத்தானந்தபுரம் மடா அதிபதிக்கு சதய விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெரு பகுதியில் அமைந்துள்ள முத்தானந்தபுரம் மடத்தில் உள்ள மடாதிபதி சொரூபானந்த சுவாமிகளுக்கு சதய விழாவை முன்னிட்டு கணபதி பூஜை மற்றும் ஆயுள் விருத்தி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து மடத்திற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது பின்னர் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்1
- தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தூத்துக்குடி வாசன் கண் மருத்துவமனையும் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து இன்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான இலவச கண் மருத்துவ முகாமினை நடத்தியது வாசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கிட்டப்பார்வை துவரம் பார்வை கண் உரை கண் அழுத்தம் போன்றவைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.1
- குமரியில் மழை காரணமாக ரப்பர் சேகரிப்பு பணி பாதிப்பு- தொழிலாளர்கள் வேலை இழப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது இங்கு பயிரிடப்படும் ரப்பர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் கீரிப்பாறை காளிகேசம் குலசேகரம் திற்பரப்பு சித்திரம் கோடு கடையால் அருமனை செல்லம் துருத்தி பேச்சிப் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பர் பால் சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.மழை பெய்து வருவதால் ரப்பர் பால் தேங்கும் சிரட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.1
- நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் கோவில்பட்டியில் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மற்றும் மாநில சங்கம் அனைத்து மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் நலிவடைந்த காவல்துறை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜூ வரவேற்பு வழங்கினார் தொடர்ந்து நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது1
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.1