logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK

4 hrs ago
user_RR AARI WORK
RR AARI WORK
Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
4 hrs ago

RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK

More news from Tamil Nadu and nearby areas
  • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
    1
    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் 
மதுரை  பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 
(25.08.2026) செவ்வாய்க்கிழமை  அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    15 hrs ago
  • 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    1
    2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் 

தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட  108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்
அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது
வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது
இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்
தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில்  வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது
இந்நிலையில்  இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்
தங்களது கிராமத்தில் உள்ள அரசு  சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள்
இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில்  வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும்
தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது
மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து 
தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உருவப் படத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிக கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் . மறைந்த தேமுதிக நிர்வாகிகளான ஒன்றிய துணை செயலாளர் பிச்சைமணி, துப்பாஸ்பட்டி கிளை செயலாளர் மாரி ராஜா, மணியாச்சி கிளை செயலாளர் பெருமாள்சாமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்களும் வழங்கப்பட்டது மேலும் மேலமடம் தேமுதிக நிர்வாகி மாடசாமி என்பவருக்கு ரூபாய் பதினோராயிரம் மதிப்பிலான இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், , மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் வல்லரசு துரை, முருகன், ஒன்றிய அவை தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் ,ஜெகன், முத்துவேல், கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஜெயகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் பழனி முருகன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    1
    ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் பொதுமக்களுக்கு  இனிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று  ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உருவப்  படத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம்  தலைமையில் தேமுதிக கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி  பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் .  
மறைந்த தேமுதிக நிர்வாகிகளான  ஒன்றிய துணை செயலாளர் பிச்சைமணி, துப்பாஸ்பட்டி கிளை செயலாளர் மாரி ராஜா, மணியாச்சி கிளை செயலாளர் பெருமாள்சாமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்களும் வழங்கப்பட்டது மேலும் மேலமடம் தேமுதிக நிர்வாகி  மாடசாமி என்பவருக்கு ரூபாய் பதினோராயிரம் மதிப்பிலான இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்,  , மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் வல்லரசு துரை, முருகன், ஒன்றிய அவை தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் ,ஜெகன், முத்துவேல், கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஜெயகிருஷ்ணன்,  ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் பழனி முருகன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தேனி மாவட்டம் போடி நகரில் தேமுதிக சார்பில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடி நகர தேமுதிக சார்பில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுமக்கள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
    1
    தேனி மாவட்டம் போடி நகரில் தேமுதிக சார்பில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் 
தேனி மாவட்டம் போடி நகர தேமுதிக சார்பில்  மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுமக்கள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
    user_பொன் மாரிமுத்து
    பொன் மாரிமுத்து
    Chef போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    17 min ago
  • மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு ​ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் ​நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் ​ ​தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது. ​இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ​மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    1
    மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு
தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு
​ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம்
​நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
​
​தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது.
​இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
​மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    1
    தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 hr ago
  • அருப்புக்கோட்டை காந்திநகரில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி மற்றும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் சிக்கன் பிரியாணியுடன் அன்னதானமும் புதிய ஆடைகள் வழங்கியதோடு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கார், வேன் மெக்கானிக்குகளாக வேலை செய்து வரும் அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கினர். முன்னதாக காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களாக முன்வந்து விஜயகாந்த் திருவுருவப்படத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் ஒன்று கூடி அனைவருக்கும் முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கியதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள பொன்னுச்சாமி - விஜயலட்சுமி தனியார் குடும்பத்தினரும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு புதிய ஆடைகளும் வழங்கினர் முதியோர்கள் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்
    1
    அருப்புக்கோட்டை காந்திநகரில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி  மற்றும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் சிக்கன் பிரியாணியுடன் அன்னதானமும் புதிய ஆடைகள்  வழங்கியதோடு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்
தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கார், வேன் மெக்கானிக்குகளாக வேலை செய்து வரும் அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கினர். முன்னதாக காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களாக முன்வந்து விஜயகாந்த் திருவுருவப்படத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கும், பேருந்து  பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் ஒன்று கூடி அனைவருக்கும் முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கியதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள பொன்னுச்சாமி - விஜயலட்சுமி தனியார் குடும்பத்தினரும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு புதிய ஆடைகளும் வழங்கினர்  
முதியோர்கள் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    20 hrs ago
  • 700 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 700 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை ​தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதைக்காகப் பயன்படுத்தப்படும் 700 மாத்திரைகளை வைத்திருந்த வாலிபரைத் தென்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ​ தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் எல்லைக்குட்பட்ட காலேஜ் விளக்கு பகுதியில், மருத்துவர் பரிந்துரையின்றி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த விசாரணையில், அவர் தெ.கள்ளிப்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த தங்கப்பாண்டி (19) என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பார்சலை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில், மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி, போதைக்காகப் பயன்படுத்த வைத்திருந்த (டாபென்டாடோல் 100 mg) என்ற700 மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தங்கப்பாண்டியை கைது செய்த காவல்துறையினர் தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகள் மருந்தகங்களில் வாங்கப்பட்டதா அல்லது ஆன்லைன் மூலம் வரவழைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ​மேலும் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடும், மருந்தகங்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    1
    700 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு 
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 700 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை
​தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதைக்காகப் பயன்படுத்தப்படும் 700 மாத்திரைகளை வைத்திருந்த வாலிபரைத் தென்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
​
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் எல்லைக்குட்பட்ட காலேஜ் விளக்கு பகுதியில், மருத்துவர் பரிந்துரையின்றி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த விசாரணையில், அவர் தெ.கள்ளிப்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த தங்கப்பாண்டி (19) என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பார்சலை காவல்துறையினர் சோதனை செய்தனர். 
அந்த சோதனையில், மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி, போதைக்காகப் பயன்படுத்த வைத்திருந்த (டாபென்டாடோல் 100 mg) என்ற700 மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தங்கப்பாண்டியை கைது செய்த காவல்துறையினர் தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த மாத்திரைகள் மருந்தகங்களில் வாங்கப்பட்டதா அல்லது ஆன்லைன் மூலம் வரவழைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
​மேலும் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடும், மருந்தகங்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • *குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை* தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    *குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை*
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. 
வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் 
விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.