*குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை* தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை* தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.1
- நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.1
- சேர்மன் இல்ல திருமண விழா மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக உள்ள ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழா கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமண விழாவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மணமக்களை வாழ்த்தினார்.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.1
- ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்1
- தூத்துக்குடி மிலாது நபி சிறப்பு துவா மற்றும் அன்னதானம் தூத்துக்குடியில் உள்ள பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மீலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை; ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு- பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களின் பிறந்தநாளை மீலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 12 நாட்கள் மவ்லிது ஓதப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், தலைமையில் விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மதரஷா முதல்வர் இம்தாதுல்லா, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலீம், சதக்கத்துல்லா, மதரசா துணை முதல்வர் முதல்வர் அகமது ஆகியோர் சிறப்பு துவா ஓதினார்கள் இதைத்தொடர்ந்து பத்தாயிரம் பேருக்கு ஒரு டன் அளவிற்கு உணவு சமைக்கப்பட்டு அனைத்து ஜமாத்தை சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என அனைவரும் உணவு வழங்கப்பட்டது.1
- *குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை* தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1