logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

15 hrs ago
user_Subramanian
Subramanian
திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
15 hrs ago

நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையையான கலைத் திருவிழா போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகள் இன்று நடந்தது
    1
    தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையையான கலைத் திருவிழா போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகள் இன்று நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • குமரியில் மழை காரணமாக ரப்பர் சேகரிப்பு பணி பாதிப்பு- தொழிலாளர்கள் வேலை இழப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது இங்கு பயிரிடப்படும் ரப்பர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் கீரிப்பாறை காளிகேசம் குலசேகரம் திற்பரப்பு சித்திரம் கோடு கடையால் அருமனை செல்லம் துருத்தி பேச்சிப் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பர் பால் சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.மழை பெய்து வருவதால் ரப்பர் பால் தேங்கும் சிரட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    1
    குமரியில் மழை காரணமாக ரப்பர் சேகரிப்பு பணி பாதிப்பு- தொழிலாளர்கள் வேலை இழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது இங்கு பயிரிடப்படும் ரப்பர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் கீரிப்பாறை காளிகேசம் குலசேகரம் திற்பரப்பு சித்திரம் கோடு கடையால் அருமனை செல்லம் துருத்தி பேச்சிப் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பர் பால் சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.மழை பெய்து வருவதால் ரப்பர் பால் தேங்கும் சிரட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்
    1
    ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்
    user_M.Maria Ronickam
    M.Maria Ronickam
    கல்குளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
    1
    RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse,
RR AARI WORK
    user_RR AARI WORK
    RR AARI WORK
    Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
    34 min ago
  • வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு  வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்  சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு 
வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு  நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்  சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • அருப்புக்கோட்டை காந்திநகரில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி மற்றும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் சிக்கன் பிரியாணியுடன் அன்னதானமும் புதிய ஆடைகள் வழங்கியதோடு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கார், வேன் மெக்கானிக்குகளாக வேலை செய்து வரும் அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கினர். முன்னதாக காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களாக முன்வந்து விஜயகாந்த் திருவுருவப்படத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் ஒன்று கூடி அனைவருக்கும் முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கியதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள பொன்னுச்சாமி - விஜயலட்சுமி தனியார் குடும்பத்தினரும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு புதிய ஆடைகளும் வழங்கினர் முதியோர்கள் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்
    1
    அருப்புக்கோட்டை காந்திநகரில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி  மற்றும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் சிக்கன் பிரியாணியுடன் அன்னதானமும் புதிய ஆடைகள்  வழங்கியதோடு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்
தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கார், வேன் மெக்கானிக்குகளாக வேலை செய்து வரும் அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கினர். முன்னதாக காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களாக முன்வந்து விஜயகாந்த் திருவுருவப்படத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கும், பேருந்து  பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் ஒன்று கூடி அனைவருக்கும் முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கியதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள பொன்னுச்சாமி - விஜயலட்சுமி தனியார் குடும்பத்தினரும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு புதிய ஆடைகளும் வழங்கினர்  
முதியோர்கள் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    16 hrs ago
  • முருகன் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை நடத்த வைக்கப்பட்ட கோரிக்கை தென்காசி மாவட்டம் திருவிலஞ்சியில் முருக பெருமானின் குமாரசாமி திருக்கோவில் உள்ளது இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆலயத்தின் பெயரை சுப்பிரமணிய சுவாமி என மாற்ற முயற்சி செய்து பின்னர் தற்போது வரதராஜ பெருமான் என பெருமாள் ஆலயம் போன்று மாற்றி அங்கு ஆலயம் முகப்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இன்று காமராஜர் தேசிய காங்கிரஸ் துணைச் செயலாளர் ராம பாண்டியன் தலைமையில் தூத்துக்குடியில் அமைந்துள்ள தூத்துக்குடி தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து காமராஜர் தேசிய காங்கிரஸ் மாநில துணைச் செயலாளர் ராம பாண்டி கூறுகையில் தென்காசி மாவட்டம் திருவிலஞ்சி குமாரசாமி திருக்கோவில் பெயர் வரதராஜ பெருமான் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது இந்த பெயரை உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு ஏற்கனவே இருந்தது போன்று குமாரசாமி என தமிழில் பெயர் இருக்க வேண்டும் மேலும் தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் தமிழ் அர்ச்சர்கள் நியமனம் செய்து தமிழில் அர்ச்சனை செய்ய இந்து சமய அறநிலைத்துறை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தென்காசி மாவட்டத்தில் பெயர் மாற்றம் செய்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் முருக பக்தர்களை திரட்டி தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
    1
    முருகன் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை நடத்த வைக்கப்பட்ட கோரிக்கை
தென்காசி மாவட்டம் திருவிலஞ்சியில் முருக பெருமானின் குமாரசாமி திருக்கோவில் உள்ளது இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆலயத்தின் பெயரை சுப்பிரமணிய சுவாமி என மாற்ற முயற்சி செய்து பின்னர் தற்போது வரதராஜ பெருமான் என பெருமாள் ஆலயம் போன்று மாற்றி அங்கு ஆலயம் முகப்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது 
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இன்று காமராஜர் தேசிய காங்கிரஸ் துணைச் செயலாளர் ராம பாண்டியன் தலைமையில் தூத்துக்குடியில் அமைந்துள்ள தூத்துக்குடி தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது 
இதைத்தொடர்ந்து காமராஜர் தேசிய காங்கிரஸ் மாநில துணைச் செயலாளர் ராம பாண்டி  கூறுகையில் 
தென்காசி மாவட்டம் திருவிலஞ்சி குமாரசாமி திருக்கோவில் பெயர் வரதராஜ பெருமான் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது இந்த பெயரை உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு ஏற்கனவே இருந்தது போன்று குமாரசாமி என தமிழில் பெயர் இருக்க வேண்டும் 
மேலும்  தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் தமிழ் அர்ச்சர்கள் நியமனம் செய்து தமிழில் அர்ச்சனை செய்ய இந்து சமய அறநிலைத்துறை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 
மேலும் தென்காசி மாவட்டத்தில் பெயர் மாற்றம் செய்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் 
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் முருக பக்தர்களை திரட்டி தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை -பொதுமக்கள் மகிழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தில் நாகர்கோவில் தக்கலை குளச்சல் குழித்துறை பூதப்பாண்டி தடிகாரன் கோணம் மணக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது மழை காரணமாக மாவட்டத்தில் குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை -பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தில் நாகர்கோவில் தக்கலை குளச்சல் குழித்துறை பூதப்பாண்டி தடிகாரன் கோணம்  மணக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது மழை காரணமாக மாவட்டத்தில் குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஆரோக்கியமாக வாழபழங்கள் கீரைகள் நோயிலிருந்து காக்க மேலும் பார்க்க
    1
    ஆரோக்கியமாக வாழபழங்கள் கீரைகள் நோயிலிருந்து காக்க மேலும் பார்க்க
    user_M.Maria Ronickam
    M.Maria Ronickam
    கல்குளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.