தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

- தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்றைய நிலவரம் மிதமான மழை இதமான காற்று லேசான வெயில் அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீர் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்1
- திருச்செந்தூர் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 1.51 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாம்பரையில் கடம்பா குளம் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு உரிமம் புதுப்பித்தல், மீன் பங்கு வைத்தல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து திருச்செந்தூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரண்டராமன், உதவி ஆய்வாளர் சேந்தராஜன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து விசாரணை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத லஞ்ச பணமா என்று விசாரணை நடத்தினர்.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- புதுக்கோட்டை அருகே வீட்டில் 3½ பவுன் நகை திருட்டு – சிசிடிவி காட்சி வைரல்1
- இருதயத்தில் உள்ள இரத்த அடைப்பை மாற்ற இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்1
- குமரி மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக கொடுத்து எடுத்துரைத்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்த முன்னாள் மீன் கூட்டுறவு சங்க சேர்மன் சகாயம் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக குளங்களில் தாமரை இலை பயிரிடப்பட்டு விற்பனை நடைபெறுவதாக குற்றம் சாட்டி கடந்த ஐந்து வருடங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று நடைபெற்ற விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் வெற்று காகிதத்தை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி சகாயம் அளித்தார். மாவட்ட ஆட்சியரிடம் ஐந்து வருடங்களாக கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அதிருப்தியில் வெற்றுகாகிதத்துடன் மனு கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வெற்று காகிதத்தை மனுவாக கொடுத்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.1
- சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.1
- *தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோலாண்டனூர் 7,வது வார்டு ஊராட்சி அலுவலகத்திற்கு கீழ்புரம் ஒரு வருடத்திற்கு முன் போடப்பட்ட புதிய சிமிண்ட் சாலையில் வாறுகாலில் அமைக்காததால் வீடுகளில் உபயோகப்படுத்தும் கழிவுநீரை பைப்பு மூலம் பொது தெரிவில் விடுவதனால் சாலை பழுதாகுவதோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள், மற்றும் புளுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விசக்காய்சல் பரவி வருவதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்க்கு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1