வரலாற்றில் பொன்மகுடம் சூட்டிய பொன்னமராவதி 9 ஆம் வகுப்பு மாணவன் சி.விகேஷ் ராஜ்க்கு பள்ளியில் பாராட்டு விழா வரலாற்றில் பொன்மகுடம் சூட்டிய பொன்னமராவதி 9 ஆம் வகுப்பு மாணவன் சி.விகேஷ் ராஜ். தமிழ்நாடு அரசு,பள்ளிக்கல்வித் துறை நடத்தும் பாரதியார் தின - குடியரசு தின விளையாட்டுப்போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 22 மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள். 1902 ஆண்டு தொடங்கப்பட்டு நூறாண்டு கடந்த திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைபள்ளியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் சி.விகேஷ் ராஜ் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று தமிழ் நாட்டில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக ஜுடோ போட்டியில் தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே மாணவன் என்ற பெருமையைப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவர்கள் *ஷா.பாசில் ரோஷன் 12 ஆம் வகுப்பு. *ரா.சபரிஸ் சண்முகம் 8 ஆம் வகுப்பு 4 வெங்கலப் பதக்கம் வென்ற மாணவர்கள். *செ. இன்பா 9 ஆம் வகுப்பு *க.பிரவீன் குமார் 11 ஆம் வகுப்பு *ம.நித்திஸ் 12 ஆம் வகுப்பு *அ.செந்தமிழ் பேரரசி 10 ஆம் வகுப்பு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவர்கள் வெற்றிக்கு விதை நெல்லாக இருந்த தாளாளர்,முதல்வர் அருட்சகோதரி ச.ம.மரியபுஷ்பம் MA.,M.Ed.,M.Phil. அவர்கள் பயிற்சி அளித்த மாஸ்டர் வீரையா அவர்களையும், மாணவர்களையும்,பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்தினார்கள். உறுதுணையாக இருந்த வீ.பிரகாஷ், முன்னாள் மாணவர்கள் சிவராமன்,தர்ஷினி, உடற்கல்வி ஆசிரியர்கள் கதிரேசன்,தேவகணேஷ்,ரம்யா, ஸ்ரீராம் உள்ளிட்டோர்களையும் பாராட்டி வாழ்த்தினார்கள். இந்தப் பாராட்டு விழாவில் அருட்சகோதரி மதலை மேரி,துணை முதல்வர் இரா.பிரின்ஸ் (எ) இளவரசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர். பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.1
- குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை1
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)1