Shuru
Apke Nagar Ki App…
திமுக தேர்தல் அறிக்கையே சூப்பர் ஸ்டார் - பிரேமலதா புகழாரம் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஸ்டார்' போல மக்களைக் கவர்ந்துள்ளதாகவும், 7-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் பாராட்டிப் பேசினார். இந்நிகழ்வின் போது தேமுதிக மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Salem_Updates
திமுக தேர்தல் அறிக்கையே சூப்பர் ஸ்டார் - பிரேமலதா புகழாரம் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஸ்டார்' போல மக்களைக் கவர்ந்துள்ளதாகவும், 7-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் பாராட்டிப் பேசினார். இந்நிகழ்வின் போது தேமுதிக மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Salem_Updates1
- சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவானது இன்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை வழிபட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.2
- ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர், வடகரை, மேல் சான்றோர் குப்பம், உட்பட பல்வேறு கிராமங்களில் (இன்று ஏப்ரல் 29 மாலை 3 மணிக்கு) இடி மின்னல் காற்று மழை பெய்தது கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது இன்று பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர்ந்து பேயும் என வானிலை ஆராய் மையம் நேற்று அறிவிப்பு இந்த நிலையில் இன்று மழை1
- Post by Ashik2
- கோவை துடியலூர் அருகே விபத்து1
- திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. காவிரி குடிநீர் வீணாவதை பார்த்து பொங்கி எழுந்த சமூக ஆர்வலர். பிரதான சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அதில் தேங்கிய சுகாதாரமற்ற நீர் குடிநீரில் குழாய்களில் கலப்பதால் பலவிதமான நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக.சுகாதாரமற்ற குடிநீரை பருகம் அவல நிலைக்கு மணப்பாறை பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இன்று சமூக ஆர்வலர் உலகநாதன் அந்த இடத்தில் கருவேப்பிலையை நடவு செய்து குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைவில் சீர் செய்து பொதுமக்களின் நலனைக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.1