Shuru
Apke Nagar Ki App…
சேலம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல்..VIDEO
Salem_Updates
சேலம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல்..VIDEO
More news from தமிழ்நாடு and nearby areas
- தாராபுரத்தில் விஜய் மக்களை தெர்மோ மீட்டர் ஆக பயன்படுத்தி சோதித்துப் பார்த்துள்ளார் விஜய்க்கு விழும் வாக்கு நடிகர்களுக்கு விழும் வாக்கு மே 4 ம் தேதி அவருக்கு விழும் வாக்கை வைத்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அடுத்தடுத்து தேர்தல் வரும் யாரு விஜய் தோத்தாள் உயிரை விட வேண்டாம் தி மு க வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் மா கிறிஸ்டோபர் திலக் எம்பி பேட்டி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனது சொந்த ஊர் மணகடவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மணிப்பூர் நாகலாந்து திரிபுரா சிக்கிம் மாநிலங்களின் கமிட்டி செயலாளர் மா கிறிஸ்தோபர் திலக் எம்பி மக்கள் திரள் இயக்கத்தில் இருந்தும் சாமானிய ஒருவர் மக்களவை வரை சென்றதற்கா தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சாவூர் பேராயர்கள் பாராட்டு விழா தாராபுரம் சிஎஸ்ஐ சர்ச் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் ஈரோடு கிழக்கு வேட்பாளர் கோபி பழனியப்பன் தாராபுரம் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி முன்னாள் மாவட்ட தலைவர் தென்னரசு வடக்குமாவட்ட தலைவர்கள் செல்வகுமார் தெற்கு மாவட்ட தலைவர் கிட்டுசாமி காங்கிரஸ் கட்சியின் மாநில கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் கலா ராணி காண பிரியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர் தாராபுரம் மறை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கலைச் செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் மாநிலங்கள் அவை உறுப்பினர் மா கிறிஸ்டோபர் திலக் MP செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திருச்சி திருச்சபை தஞ்சாவூர் திருச்சபை தென்னிந்திய திருச்சபை பேராயர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு விஜய் அரசியல் பிரவேசம் ஒரு சினிமா தோற்றமாகவே உள்ளது புது வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு எழுச்சி இருப்பதாக தோன்றுகிறது அது தேர்தல் பிறகு தெரியும் அவருக்கு வாக்குகள் அனைத்தும் நடிகர் என்ற போர்வையில் விழக்கூடியது அவரால் ஆட்சி அமைக்க முடியாது மீண்டும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட காட்சிகள்உடன் திமுக வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். முன்பு காங்கிரஸ் ஐம்பதுக்கு மேற்பட்ட தொகுதிகள் பெற்று போட்டியிட்டது பாரதிய ஜனதா கட்சி அஞ்சு முதல் 10 சீட்டுகளில் போட்டியிட்டது என்று செய்தியாளர்களின் கேள்விக்கு காங்கிரஸ் 28 ஒன்றிய அரசு 27 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இந்தக் கூட்டணி கொள்கையினால் அடிப்படை கூட்டணி இதுவே வெற்றி பெறும் என்று தெரிவித்தார் சமூக நீதி மையப்படுத்தி மிக முக்கியமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி திமுக காங்கிரஸ் கண்டிப்பா திமுக வெற்றி பெறும் பிஜேபி அதிமுக கூட்டணி மிரட்டி வாங்கப்பட்ட தொகுதிகள் எனவே அவர்கள் கூட்டணிக்கு சம்பந்தமில்லை அதிமுகவை பணிய வைத்து வாங்கப்பட்ட தொகுதிகள் எனவே மதசார்பற்ற கூட்டணி திமுக வே வெல்லும் பிஜேபி கூட்டணி கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகத்திற்கு வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார் அரசியல் ஆதாயத்திற்காக 100 வருஷமா பிஜேபி எடுத்துக்கொண்டிருக்கிற முயற்சி அதனுடைய தொடர்ச்சி தான் திமுக ஆட்சி பேச வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கும் விஜய் வந்ததால் மாற்றம் ஏதும் இருக்காது கருத்துக்கணிப்புகள் பொய்யாகி உள்ளன விஜய் வந்ததால் மாற்றம் இல்லை என்று கூறவில்லை இருக்கும் அவர் திரைப்படத்தில் நடித்தார் என்பதற்காக வாக்குகள் வாங்குவார் அது எந்த காலத்திலும் திமுகவை கட்டுப்படுத்தாது விஜய் வந்து ஒரு தர்மா மீட்டர் போல் அதை எதற்காக பயன்படுத்துவார்கள் நாடி பார்ப்பதற்கும் உடம்பில் உள்ள உஷ்ணத்தை பார்ப்பதற்கும் அதுபோல் மக்களின் உஷ்ணத்தை நம்பி வந்துள்ளார் விஜய் வந்து கட்சித் தலைவர் என்று நாங்கள் பார்க்கவில்லை அவர் ஒரு தர்மம் மேட்டர் ஆகவே பார்க்கிறோம் இளைஞர்கள் எவ்வாறு அவரை சோதிக்கிறார்கள் என்பதை விஜய் நன்கு அறிந்து அதை போல் செயல்படுகிறார் அவர் வெற்றி பெற அவருக்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பும் இல்லை என்றும் தெரிவித்தார் விஜய்க்கு அஞ்சு சதவீதம் பத்து சதவீதம் 15% வாக்குகள் விழுந்தாலும் அது சித்தாந்தத்தை நிலை நிறுத்தி வாங்கப்பட்ட ஓட்டுகள் அல்ல அவர் சினிமா மோகத்தில் வாங்கப்பட்ட வாக்கு என்றும் தெரிவித்தார் அவர்களிடம் இருக்கும் இளைஞர்கள் தேவையில்லாத முடிவுகள் எடுத்து வருவதாக குறுஞ்செய்திகள் வருகிறது அவர்களை வழிநடத்த திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நல்வழிப்படுத்தம் முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார் அவருக்கு முன்பு பாராட்டு விழா நடைபெற்றது அனைத்து பேராயர்களும் வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்தனர் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திமுக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல், திருச்சி ரோடு, என்ஜின் காலனியில் அமைந்துள்ள நாகா மில்லை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- நம்நாட்டில் விந்தையிலும் விந்தையாக வாக்குக்கு பணம் தரவில்லை என்று தாராபுரம் அருகே பஸ் மறியல் (27.4.26) அன்று தருமபுரி அருகே பென்னநகரத்தில் கள்ளமதுகடையை அடித்து நொறுக்கி விற்பனை செய்த நபரை ஒட ஒடவிரட்டிய வீரமங்கையர்களின்இந்த கிளர்ச்சி தன் வீட்டை பாதுகாக்க என்றாலும் பாராட்டப்பட வேண்டிய விசயம் 1996 தேர்தலில் மக்களின் எழுச்சி மந்திரிகள் தனது தொகுதிக்ககே போகமுடியாத சூழல் இன்று வாக்குக்கு பணம் வேண்டும் என்ற சூழல் நாம் பாதிக்கபடும்போது கோபம் கிளர்ச்சியாக மாறும் போது இந்த நிலையும் மாறும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்...1
- ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையை கடக்க முயன்ற வட மாநில இளம் பெண் மீது இருசக்கர வாகன மோதியதில் வடமாநில பெண் சம்பவ இடத்திலேயே பலி. ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல். ________ காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பேட்டரிசார்ஜ் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உத்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா (26) பணிபுரிந்து வந்தார். இவர் தனது வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே சக தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சுனிதா செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து சென்று சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஒரகடத்தை நோக்கி சக்திவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் வேகமாக மோதி சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்து சென்றதில் இடுப்பு பகுதி மற்றும் கால் பகுதி முறிந்து சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கம்பம் பகுதியை சேர்ந்த சக்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சாலையின் நடுவே சடலமாக கிடந்த சுனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது மேலும் இந்த சாலை விபத்து சாலை நடுவே நடைபெற்று சுனிதாவின் சடலம் சாலை நடுவே இருந்ததால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. காவிரி குடிநீர் வீணாவதை பார்த்து பொங்கி எழுந்த சமூக ஆர்வலர். பிரதான சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அதில் தேங்கிய சுகாதாரமற்ற நீர் குடிநீரில் குழாய்களில் கலப்பதால் பலவிதமான நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக.சுகாதாரமற்ற குடிநீரை பருகம் அவல நிலைக்கு மணப்பாறை பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இன்று சமூக ஆர்வலர் உலகநாதன் அந்த இடத்தில் கருவேப்பிலையை நடவு செய்து குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைவில் சீர் செய்து பொதுமக்களின் நலனைக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.1
- திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் மேள தாளங்கள் முழங்க வீதி உலா வரும் திருத்தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. திருத்தேரோட்டம் நிறைவுற்றவுடன் மதுரை புறப்பட்டார் அழகர் கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர் நாளை அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நாளை மறுநாள் அதிகாலையில், கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்1
- Post by Vinayagam Vinayagam1