Shuru
Apke Nagar Ki App…
அழகான பாடல். அற்புதமான காட்சி அமைப்புகள்.
Senthilkumarankumaran
அழகான பாடல். அற்புதமான காட்சி அமைப்புகள்.
More news from Coimbatore and nearby areas
- இரவு வணக்கம்1
- தேனியில் நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. மேலும் தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு கோல போட்டி,பானை உடைத்தால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவருக்கும் பொங்கல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் சேர்மன் ரேணு ப்ரியா பாலமுருகன் ,துணை சேர்மன் செல்வம், கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் ,மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ,பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்1
- *முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்* முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் காலை முதலே வருகை தந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் மலர்மாலை, சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்1
- வேடசந்தூர் நாகம்பட்டி ஊராட்சி லகுனம்பட்டியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு ஆழப்படுத்தி கரைகளை உயறபடுத்தி மண் கொட்டப்பட்டு சீரமைப்பு செய்து வருகின்றனர்.1
- எடப்பாடியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது... தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டியானது காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது... மேலும் இந்த ஓவியப் போட்டியில் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது,ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்,அதிக வேகமாக செல்ல கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகள் ஓவியத்தை வரைந்தனர்... மேலும் சாலை விபத்து குறித்து பள்ளி மாணவிகளிடம் காவல் ஆய்வாளர் எடுத்துக் கோரி பேசினார். அதன் பின்னர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.இதில் காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம், தலைமை ஆசிரியர் செந்தில் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்...1
- திருந்தாத கம்பம் ஊராட்சி ஒன்றியம் ஊழியர்கள். பணியை சரி செய்யாமல் காலத்தை கடத்தும் கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம். போட்ட பாதையை பரிசீலனை செய்து சரி செய்யவும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திர்க்கு வேண்டுகோள் தேனி மாவட்டம்1
- பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கோலப்பொட்டிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போகிப் பண்டிகையை வரவேற்கும் வகையிலும், இந்த ஆண்டை வரவேற்கும் வகையிலும் வண்ண வண்ண கோலம் இட்டு அசத்திய பெண்கள்- பாரம்பரிய முறைப்படி குலவை இட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கும்மி அடித்து கொண்டாட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதற்காக பெண்களுக்கு கோல போட்டிகள் நடைபெற்ற நிலையில் வண்ண வண்ண நிறங்களில் பொங்கலை வரவேற்கும் விதமாகவும் இந்த ஆண்டை வரவேற்கும் விதமாகவும் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடும் விதமாகவும் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு கோலங்களை பெண்கள் வரைந்தனர்.தொடர்ந்து பேரூராட்சி சேர்மன் சந்திரகலா தலைமையில் தூய்மை பணியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் சேர்ந்து பாரம்பரிய முறைப்படி குலவை இட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கும்மி அடித்து மகிழ்ந்தனர்.சிறந்த கோலங்களை வரைந்த பெண்களுக்கு பேரூராட்சி தலைவர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.1
- பாரம்பரிய கலைகளைக் கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவ மாணவிகள்...நடனமாடி உறியடித்து உற்சாக கொண்டாட்டம்... தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய கலைகளை கொண்டு தை பொங்கல் பண்டிகையை மாணவ மாணவி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்... இதில் மாணவ மாணவிகள் வேட்டி சட்டை அணிந்தும்,பட்டுப் புடவை என பாரம்பரிய உடை அணிந்து நூற்றுக்கணக்கான பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்... தொடர்ந்து மாணவ மாணவிகள் பங்கேற்ற ஊழியடிக்கும் போட்டி நடைபெற்றது.இதில் மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைக்கும் விளையாட்டு நடைபெற்றது. தொடர்ந்து தப்பாட்டம் என பல்வேறு வகையான பாரம்பரிய கிராமிய பாடல்களுக்கு நடனமாடி குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை மாணவ மாணவிகள் கோலாகலமாக கொண்டாடினர்..1
- லஞ்சம் வாங்கிய கம்பம் ஊராட்சி ஒன்றியம். அடித்த கொள்ளை ஹரிஜினத் தெருவில் சாலை போடுவதில். லஞ்சம் கொடுத்து தொடங்கிய வேலை காண்ட்ராக்டர் மணிகண்டன் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி தேனி மாவட்டம்1