Shuru
Apke Nagar Ki App…
அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த 71 வயது அடைக்கலம் என்ற முதியவர், தீராத வயிற்று வலியால் கடும் அவதியடைந்து வந்துள்ளார். இந்தநிலையில், குடிபோதையில் இருந்த அவர், வயிற்று வலியை தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அடைக்கலம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Batcha
அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த 71 வயது அடைக்கலம் என்ற முதியவர், தீராத வயிற்று வலியால் கடும் அவதியடைந்து வந்துள்ளார். இந்தநிலையில், குடிபோதையில் இருந்த அவர், வயிற்று வலியை தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அடைக்கலம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜிவ் நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பிரதோஷ விழா நடந்தேறியது. இதில், நத்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் உலா நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- திருச்சி மாவட்டம் பிடாரபட்டியைச் சேர்ந்த ராகினி (26) தனது ஒரு வயது குழந்தை மற்றும் தங்கை கலைமதி ஆகியோருடன் மணப்பாறையிலிருந்து திரும்பி, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறி பிடாரபட்டிக்குச் சென்றுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் கூட்டத்துடன் ஏறியுள்ளனர். அப்போது, இவர்களுக்குப் பின்னால் நின்ற ஒரு மூதாட்டி, ராகினியின் ஒரு வயது மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாயத்தை கட்டிங் பிளேடு மூலம் அறுத்துள்ளார். இந்தச் செயலை பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராகினியின் தங்கை கலைமதி உடனடியாக கூச்சலிட, அருகிலிருந்த பொதுமக்கள் அந்த மூதாட்டியைப் பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மூதாட்டி தஞ்சை கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி செல்வி (65) என்பதும், அவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராகினி அளித்த புகாரின் பேரில் மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 65 வயதான ஒரு மூதாட்டி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த நகைக்காக, நகையின் கயிற்றை அறுத்த மூதாட்டி, நகைக்காக எது வேண்டுமானாலும் செய்வார் என்ற பேச்சு பொதுமக்களிடையே நிலவியது. மேலும், அந்த மூதாட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திருச்சி மாநகரில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்த இளைஞர்கள் சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சி பதிவாகியுள்ளது.1
- Post by Sangili.v1
- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ராமசாமி என்ற நோயாளி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவருடன் வந்தவர் கொடுத்த மதுவை வார்டில் இருந்தபடியே அருந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பணியில் இருந்த மருத்துவர் இதனை அறிந்ததும் மது அருந்திய ராமசாமியையும், அவருடன் வந்தவரையும் எச்சரித்தார். இதற்கு அந்த நபர், தனக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்புவதாக ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து ராமசாமி மீண்டும் வார்டில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்திலேயே அந்த நபர் பெண்கள் வார்டுக்கு அருகில் மது பாட்டில் மற்றும் மிக்சருடன் மீண்டும் மது அருந்தத் தொடங்கினார். இந்த தகவலறிந்து அங்கு வந்த மானாமதுரை போலீசார், மது பாட்டில் மற்றும் மிக்சருடன் இருந்த ராமசாமியை பிடித்து வழக்குப்பதிவு செய்வோம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும், பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.1
- தஞ்சாவூரில் இருந்து கபிஸ்தலம் மற்றும் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி வழியாக அரசு நகரப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பட்டுக்குடி கிராமத்திற்கு காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் என நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே அரசுப் பேருந்துகள் வந்து செல்கின்றன. காலையில் இயக்கப்படும் பேருந்து, கபிஸ்தலம் வழியாக பயணிகளையும் மாணவ மாணவிகளையும் ஏற்றிச் சென்று பட்டுக்குடி வரை வந்து மீண்டும் தஞ்சாவூருக்கே திரும்புகிறது. பட்டுக்குடி பகுதியில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், நோயாளிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எனப் பலரும் இந்தப் பேருந்தையே நம்பிப் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தப் பேருந்து ஏற்கனவே மற்ற பகுதிகளில் இருந்து பயணிகளையும் மாணவ மாணவிகளையும் ஏற்றி வருவதால், பட்டுக்குடி பகுதியில் மாணவ மாணவிகள் ஏறும் போது பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு மிகுந்த கூட்ட நெரிசலுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், பேருந்துகள் கூட்ட நெரிசலுடன் வருவதால், ஏராளமானோர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் பயணிக்க முடியாமல் திரும்பச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தற்போது காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் மட்டும் இயக்கப்படும் பேருந்துகளை பகல் 12 மணி மற்றும் மாலை 4 மணி என நாள் ஒன்றுக்கு நான்கு தடவை இயக்க வேண்டும் என்றும் பட்டுக்குடி கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்குடி வரை தனிப் பேருந்து ஒன்றையும் இயக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே அமைந்துள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமின் முக்கிய நோக்கம், விபத்துகள் ஏற்படும் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் அவசரகால உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஊழியர்களுக்குக் கற்பிப்பதாகும். இந்த முகாம் புராஜெக்ட் மேலாளர் செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்றது.1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி - கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில், முதன்மைக் காவலர் அழகர் ₹500 லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் காரில் இருந்த வெளிமாநில மதுபான பாட்டிலைப் பறிமுதல் செய்த காவலர் அழகர், ₹500 பேரம் பேசி லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, பறிமுதல் செய்த அதே மதுபான பாட்டிலை மீண்டும் பயணிகளிடமே திருப்பிக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். லஞ்சம் வாங்கிய காவலர் அழகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.1