logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருவாடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான ஆத்மநாதர் சுவாமி திருக்கோயிலில், ஆனித் திருமஞ்சன தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மாணிக்கவாசகரால் பாடப்பட்டுப் புகழ்பெற்ற இக்கோயிலில், ஆண்டுக்கு இருமுறை மாணிக்கவாசகருக்காக ஆனித் திருமஞ்சன தேரோட்டம் மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா தேரோட்டம் என இரண்டு தேரோட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் ஆனித் திருமஞ்சன திருவிழா ஒன்பது நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகளும், சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இன்று நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில், அழகாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் வீற்றிருக்க, சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமந்திரங்களைப் பாட, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் அமைந்துள்ள நான்கு வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து பவனி வந்தபோது, பக்தர்கள் சிவசிவா கரகோஷங்களை எழுப்பினர். இந்த தேரோட்டத் திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். ஆவுடையார்கோவில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

17 hrs ago
user_P.Senthilvelan
P.Senthilvelan
Insurance Agent அறந்தாங்கி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
17 hrs ago
8af21f76-d2f6-4823-a420-8756c961b8ec

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருவாடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான ஆத்மநாதர் சுவாமி திருக்கோயிலில், ஆனித் திருமஞ்சன தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மாணிக்கவாசகரால் பாடப்பட்டுப் புகழ்பெற்ற இக்கோயிலில், ஆண்டுக்கு இருமுறை மாணிக்கவாசகருக்காக ஆனித் திருமஞ்சன தேரோட்டம் மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா தேரோட்டம் என இரண்டு தேரோட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் ஆனித் திருமஞ்சன திருவிழா ஒன்பது நாட்களுக்கு முன்பு

a7925b3d-a25a-4e00-950e-828643c7a4c8

கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகளும், சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இன்று நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில், அழகாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் வீற்றிருக்க, சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமந்திரங்களைப் பாட, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் அமைந்துள்ள நான்கு வீதிகளிலும்

ab7d7074-4c91-4d24-807f-5455862ed4c1

தேர் ஆடி அசைந்து பவனி வந்தபோது, பக்தர்கள் சிவசிவா கரகோஷங்களை எழுப்பினர். இந்த தேரோட்டத் திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். ஆவுடையார்கோவில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், மாநகராட்சிக்கு அருகிலுள்ள பொதுப்பாதைகளில் கட்-அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, மல்டர் பாலம் அருகில் மற்றும் மாநகராட்சி குடிநீர் வசதிக்கு அருகிலுள்ள பொதுப் பாதைகளில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்களின் நடமாட்டத்திற்கு சிரமத்தை உண்டாக்குகிறது. மாநகராட்சித் துறை மிக அருகிலேயே இருக்கும் நிலையிலும், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றன. எனவே, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    3
    திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், மாநகராட்சிக்கு அருகிலுள்ள பொதுப்பாதைகளில் கட்-அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, மல்டர் பாலம் அருகில் மற்றும் மாநகராட்சி குடிநீர் வசதிக்கு அருகிலுள்ள பொதுப் பாதைகளில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்களின் நடமாட்டத்திற்கு சிரமத்தை உண்டாக்குகிறது. மாநகராட்சித் துறை மிக அருகிலேயே இருக்கும் நிலையிலும், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றன.

எனவே, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_Devan
    Devan
    ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. புதிதாக ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த புகைப்பட பதாகையை மர்ம நபர்கள் கிழித்தெறிந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக என்.டி. இடிமுரசு கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் அறிவழகன், மாவட்ட செயலாளர்கள் நாக.அருட்செல்வன், சு.ம.செல்வராசு, மாநில வர்த்தக அணி செயலாளர் ஜவகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பூவை.மனோகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சிவராமன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் புரட்சிவளவன், வேளாங்கண்ணி நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய பொருளாளர் பிரபு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை வளவன் குட்டியப்பா, சசி இளையராஜா ஒன்றிய குழு, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மேகலா வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. புதிதாக ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த புகைப்பட பதாகையை மர்ம நபர்கள் கிழித்தெறிந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக என்.டி. இடிமுரசு கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் அறிவழகன், மாவட்ட செயலாளர்கள் நாக.அருட்செல்வன், சு.ம.செல்வராசு, மாநில வர்த்தக அணி செயலாளர் ஜவகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பூவை.மனோகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சிவராமன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் புரட்சிவளவன், வேளாங்கண்ணி நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய பொருளாளர் பிரபு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை வளவன் குட்டியப்பா, சசி இளையராஜா ஒன்றிய குழு, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மேகலா வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    10 hrs ago
  • மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த மாநில அளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    1
    மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த மாநில அளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    20 hrs ago
  • தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
    1
    தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    23 hrs ago
  • கீழ்வேளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பாவேந்தன் மற்றும் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். மேலும், கீழ்வேளூரில் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளின் கூட்டமும் நடத்தப்பட்டது.
    1
    கீழ்வேளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பாவேந்தன் மற்றும் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். மேலும், கீழ்வேளூரில் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளின் கூட்டமும் நடத்தப்பட்டது.
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஐ. பெரியசாமி ஆகியோர் இந்த நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    1
    திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஐ. பெரியசாமி ஆகியோர் இந்த நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு கடைவீதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கம், மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உடனடியாகக் கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம், ஒன்றிய செயலாளர் வீ.ராஜகுரு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், நூற்றாண்டுகளாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக இருந்து வந்த 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைக்கும் 'விபி ஜி ராம்ஜி' என்ற புதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரினர். மேலும், 100 நாள் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தி, தினக்கூலியை ₹700 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் கண்டன உரைகளில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.சசிரேகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.அலெக்சாண்டர், டி.செல்லையன், எம்.ஞானசேகரன், எல்.தமிழ்மாறன், ஆர்.தங்கதுரை, கிளை செயலாளர்கள் எஸ்.கே.ஸ்டாலின், ஜி.ரகுபதி, டி.சௌந்தரராஜன், மற்றும் கட்சி பொறுப்பாளர் எஸ்.ஜேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு கடைவீதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கம், மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உடனடியாகக் கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம், ஒன்றிய செயலாளர் வீ.ராஜகுரு தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், நூற்றாண்டுகளாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக இருந்து வந்த 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைக்கும் 'விபி ஜி ராம்ஜி' என்ற புதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரினர். மேலும், 100 நாள் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தி, தினக்கூலியை ₹700 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் கண்டன உரைகளில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.சசிரேகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.அலெக்சாண்டர், டி.செல்லையன், எம்.ஞானசேகரன், எல்.தமிழ்மாறன், ஆர்.தங்கதுரை, கிளை செயலாளர்கள் எஸ்.கே.ஸ்டாலின், ஜி.ரகுபதி, டி.சௌந்தரராஜன், மற்றும் கட்சி பொறுப்பாளர் எஸ்.ஜேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    20 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், அய்யலூர் வேங்கனூர் முதல் வடுகபட்டி வரை எரியோடு செல்லும் தார் சாலை புதுப்பிக்கும் பணி, கடந்த சட்டசபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டு அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலைப்பணியை உடனடியாக மீண்டும் துவங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், அய்யலூர் வேங்கனூர் முதல் வடுகபட்டி வரை எரியோடு செல்லும் தார் சாலை புதுப்பிக்கும் பணி, கடந்த சட்டசபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டு அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலைப்பணியை உடனடியாக மீண்டும் துவங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Sangili.v
    Sangili.v
    Architect வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஒரு யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை C.M விஜய் உற்று கவனித்தார்.
    1
    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஒரு யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை C.M விஜய் உற்று கவனித்தார்.
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.