Shuru
Apke Nagar Ki App…
மணப்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்றவர்கள் கைது மணப்பாறை நகர பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களுக்கு வரப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் மணப்பாறை பகுதியில் சோதனை மேற்கொண்டதில் நொச்சிமேடு பொன்முச்சந்தி ஆகிய பகுதிகளில் மணப்பாறையை அடுத்த செட்டியபட்டியை சேர்ந்த சிவபாலகுமரன் (38), சாம்பட்டியை அடுத்த துரைக்கண்ணு (55), புதுக்கோட்டையை அடுத்த கல்லுக்காட்டுபட்டியை சேர்ந்த சின்னச்சாமி (29) ஆகியோர் 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை கைது செய்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Usha arun News
மணப்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்றவர்கள் கைது மணப்பாறை நகர பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களுக்கு வரப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் மணப்பாறை பகுதியில் சோதனை மேற்கொண்டதில் நொச்சிமேடு பொன்முச்சந்தி ஆகிய பகுதிகளில் மணப்பாறையை அடுத்த செட்டியபட்டியை சேர்ந்த சிவபாலகுமரன் (38), சாம்பட்டியை அடுத்த துரைக்கண்ணு (55), புதுக்கோட்டையை அடுத்த கல்லுக்காட்டுபட்டியை சேர்ந்த சின்னச்சாமி (29) ஆகியோர் 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை கைது செய்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் இன்று வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மக்களோடு மக்களாக தேவராட்டம் ஆடி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மற்றும் வடமதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த மேம்பாட்டு பணிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் வேடசந்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- Post by பெரியசாமி1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர், : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின் தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர், தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, பழைய கோட்டை கிராமம் புறத்தாகுடியை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் ஜாஸ்மின் அந்தோணி பிரியா (40). இவர் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை அந்தோணி கடந்த 2000 ஆம் ஆண்டும், தாயார் ஆரோக்கியமேரி கடந்த 2016 ஆம் ஆண்டும் இறந்துவிட்ட நிலையில், அவரின் பெரியப்பா மகனான ஜான்பால்ராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று 20.04.2026 மதியம் சுமார் 15:30 மணியளவில் தனது வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்லும் போது, சுமார் 2½ அடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார். இதை அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1