திருவெறும்பூர் அருகே டீசல் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த மற்றொரு லாரி மோதிய விபத்தில் சிக்கிக்கொண்ட டிரைவரை திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் அருகே டீசல் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த மற்றொரு லாரி மோதிய விபத்தில் சிக்கிக்கொண்ட டிரைவரை திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது.
இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக
பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் அருகே பொன் முச்சந்தியில் அருள்மிகு திருமுக்தீஸவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முக்தீஸ்வரர் அருளை பெற்று சென்றனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் ஊராட்சியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து ஏற்பாட்டில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து தர்பூசணி நீர்மோர் பானக்கம் மற்றும் பல வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பொதுக்குழு உறுப்பினர் மோகன் திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் சதீஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.1
- இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அருகே பனந்தோப்பில் திருநங்கைகள் நேற்று மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் நாகமுத்து மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார சித்ரா பௌர்ணமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருநங்கைகள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று பிரசாதம் வாங்கி சென்றனர்.1
- *திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 3006 விளக்குகள் இயற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.*1
- Post by Natarajan Pitchaimani1
- சிபிஐ (எம்எல்) கட்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இன்று (01-05-26) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கே.அப்பாஸ் தலைமையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி பெரியார் சிலையில் தொடங்கி ராஜவீதி, காமராஜர் சிலை வரை வந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது. இப்பேரணியை CPI(ML) நகர செயலாளர் P. பாலு பேரணியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில துணை தலைவர் P.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜர் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில செயலாளர் ஞானதேசிகன் ஏற்றினார். இதில் CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் AlCCTU நிர்வாகிகள் CPI(ML) நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.1
- வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரவு நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.பின்பு அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் சோமஸ்கந்தர் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள மகாதீபாரதனை காண்பிக்கபட்டது.இரவு நடைபெற்ற தெப்ப உற்சவம் விழாவில் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு துறை, காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.1