logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! “கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழ்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், தனது விவசாய நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று கரும்பு வயலில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கரும்பு பயிர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுமுகம், அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதால், விவசாயிகள் மேற்கொண்ட தீயணைப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசனூரிலிருந்து தமிழ்புரம் கிராமத்திற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்ற நிலையில், அது சம்பவ இடத்தை அடைவதற்குள் தீ வேகமாக பரவி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின. பல மாதங்களாக கடுமையாக உழைத்து, அறுவடையை எதிர்பார்த்து வளர்த்து வந்த கரும்பு பயிர்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதை கண்டு விவசாயி ஆறுமுகம் பெரும் வேதனை அடைந்தார். இந்த தீ விபத்தால் அவருக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அவசியம்! தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஆறுமுகத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தாளவாடி பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 hrs ago
user_Sathees kumar
Sathees kumar
Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
9 hrs ago

கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! “கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழ்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், தனது விவசாய நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று கரும்பு வயலில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கரும்பு பயிர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுமுகம், அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதால், விவசாயிகள் மேற்கொண்ட தீயணைப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசனூரிலிருந்து தமிழ்புரம் கிராமத்திற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்ற நிலையில், அது சம்பவ இடத்தை அடைவதற்குள் தீ வேகமாக பரவி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின. பல மாதங்களாக கடுமையாக உழைத்து, அறுவடையை எதிர்பார்த்து வளர்த்து வந்த கரும்பு பயிர்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதை கண்டு விவசாயி ஆறுமுகம் பெரும் வேதனை அடைந்தார். இந்த தீ விபத்தால் அவருக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அவசியம்! தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஆறுமுகத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தாளவாடி பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from Dindigul and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    9 hrs ago
  • மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    1
    மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    21 hrs ago
  • காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! ஜூலை..31,  தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமையை   முன்னிட்டு  சிறப்பு ஹோமம் மற்றும்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம்,  பூஜைகள்,மகா தீபாராதனை ஆகியவை  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் மந்தை வீதி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோயில், பெரியாம்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரகபட்டி தலை கொண்ட அம்மன் கோயில், பூலாப்பட்டி பச்சையம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத 3ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது .
    1
    காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! பக்தர்கள் பங்கேற்பு!
காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை !
ஜூலை..31, 
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமையை   முன்னிட்டு  சிறப்பு ஹோமம் மற்றும்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம்,  பூஜைகள்,மகா தீபாராதனை ஆகியவை  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் மந்தை வீதி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோயில், பெரியாம்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரகபட்டி தலை கொண்ட அம்மன் கோயில், பூலாப்பட்டி பச்சையம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத 3ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது .
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க
    1
    அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு 
அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க
    user_Mohanraj
    Mohanraj
    Home help முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கிருஷ்ணகிரியில்மாநில அளவிலான இறகுபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியதுஇப்போட்டியில் கருஷ்ணகிரி, தர்மபுரி,என தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து சுமார் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர் வீரங்கனைகள் கலந்துக் கொண்டனர்.இந்த விளையாட்டுப்போட்டியில் வீரர்வீராங்கனைகள ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
    1
    கிருஷ்ணகிரியில்மாநில அளவிலான இறகுபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது
கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியதுஇப்போட்டியில் கருஷ்ணகிரி, தர்மபுரி,என தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து சுமார் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர் வீரங்கனைகள் கலந்துக் கொண்டனர்.இந்த விளையாட்டுப்போட்டியில் வீரர்வீராங்கனைகள
ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ​ ​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ​ தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். ​ இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது. ​ மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ​ மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    1
    இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;
6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
​
​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
​
தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
​
இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
​
மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
​
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
​
மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
    1
    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    9 hrs ago
  • தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி  பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    22 hrs ago
  • சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு சுருளி அருவிக்கு தண்ணீர் இன்றி வெறும் பாறையாக காட்சியளித்து வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    1
    சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில்  வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை 
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு சுருளி அருவிக்கு தண்ணீர் இன்றி வெறும் பாறையாக காட்சியளித்து வந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான 
அரிசி பாறை, ஈத்தக்காடு,
தூவானம் அணை,
மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர்.
மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர்.
சுருளி அருவிப்பகுதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.