Shuru
Apke Nagar Ki App…
தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
DPI EXPRESS NEWS
தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!! 000 கன்னிவாடி அருகே மழை வேண்டி மக்கள் நோய்நொடி இன்றி வாழ வினோத திருவிழா!! உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!!1
- குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த எல்லைப்பிடாரியம்மன்! சேலம் அருள்மிகு ஸ்ரீ எல்லை பிடாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிகப்பு நிறப்பட்டாடை அணிவித்து வண்ணமலர் மாலைகளுடன், குங்குமக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.1
- பழைய வாணியம்பாடியில் திருடு போன மூன்று மாடுகள் பெரியகம்மியம்பட்டு கிராமத்தில் கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பத்மநாபன் தனது விவசாய நிலத்தில் நேற்று சுமார் 10மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகளை நேற்று காலை சுமார் 9 மணியளவில் மூன்று மாடுகள் மட்டும் காணவில்லை என வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் மூன்று மாடுகள் பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் பத்மநாபன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று மாடுகளை கண்டுபிடித்துள்ளார். மேலும் காவல் நிலையத்திற்கு தனக்கு சொந்தமான மாடுகள் இருப்பதை தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடப்பட்ட நபர்கள் சூர்யா விநாயகம் செல்வராசன் மற்றும் வீட்டின் உரிமையாளர் நாகராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.2
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் நவகிரக கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் நாக தேவி அவர்கள், நவகிரக கோவிலில் (இன்று ஜூலை 30 )ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..! தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..! தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம், 2006-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 169 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 7,095 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் சமூக வன உரிமைப் பட்டா பெறுவதற்காக பழங்குடியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி மனுக்களை தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை (Gram Sabha), வன உரிமைக் குழு (FRC), துணை மாவட்ட அளவிலான குழு (SDLC) உள்ளிட்ட அமைப்புகள் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியான அனைவருக்கும் வன உரிமைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரவில்லை என்றால் குடும்பத்தை காலி செய்து விடுவேன்" – தருமபுரியில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுக்காவிட்டால் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன் " என மிரட்டியதாகக் கூறி, மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அருண் பெர்னாண்டஸ், தருமபுரி–சேலம் சாலையில் இந்தியன் வங்கி அருகே "மாதா மெடிக்கல் ஷாப்" என்ற பெயரில் ஆங்கில மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் அருண் பெர்னாண்டஸின் தந்தை, தாய் மற்றும் சகோதரி உயிரிழந்த நிலையில், தனது மனைவியின் குடும்பத்தினரே தற்போது உறவினர்களாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மருந்துக் கடைக்கு அடிக்கடி வந்து பழகியதால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், பொறியியல், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை ஏற்பாடு செய்து தருவதாக கூறி செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அருண் பெர்னாண்டஸின் மருந்துக் கடைக்கு மருத்துவர்கள் வருவதைக் காரணம் காட்டி, அவரின் மூலம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருமாறு ராஜ்குமார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு, தனக்கு அதுபோன்ற தொடர்போ அல்லது அதிகாரமோ இல்லை என அருண் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். ஆனால், "நீ எப்படியும் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையெனில் உன் குடும்பத்தை காலி செய்து விடுவேன். மேலும், நீயும் உன் மனைவியும் பணம் வாங்கி ஏமாற்றியதாக பல இடங்களில் அவதூறு பரப்புவேன்" என ராஜ்குமார் மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலால் அச்சமடைந்த அருண் பெர்னாண்டஸ், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி, இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.1
- பல வண்ண பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்த அஸ்தம்பட்டி மாரியம்மன்! சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு பல வண்ண பட்டாடைகள் அணிவித்து, சந்தன காப்பு அலங்காரம் செய்து வண்ணம் மலர் மாலைகளுடன் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.1
- சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.1