logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து சரிவு தர்மபுரி மவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.10) சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 700 கனஅடியாக குறைந்துள்ளது, என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 day ago
user_Raja
Raja
செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
1 day ago

ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து சரிவு தர்மபுரி மவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.10) சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 700 கனஅடியாக குறைந்துள்ளது, என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நல்லம்பள்ளியில் இடைவிடாமல் பொழியும் சாரல் மழை தர்மபுரி மாவட்டம் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது ஒரு சில இடங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நல்லம்பள்ளி லளிகம், கோவிலூர், பாலக்கோடு புலிக்கரை கடமடை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் மலையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது இதனால் கடும் குளிர் நிலவுகிறது
    1
    நல்லம்பள்ளியில் இடைவிடாமல் பொழியும் சாரல் மழை
தர்மபுரி மாவட்டம் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது ஒரு சில இடங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நல்லம்பள்ளி லளிகம், கோவிலூர், பாலக்கோடு புலிக்கரை  கடமடை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் மலையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது இதனால் கடும் குளிர் நிலவுகிறது
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தருமபுரி நகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் கணக்கு தொடக்கம் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பெற்றோரிடம் வழங்கினார். தருமபுரி நகருக்குட்பட்ட 33வார்டுகளை சேர்ந்த 601 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு கழக மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில் 601 பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் என மொத்தம் 601 பிள்ளைகளுக்கு கணக்கினை தொடங்கினார்.அதனையடுத்து இன்று தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன்,பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரி நகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில்  சேமிப்பு திட்டம் கணக்கு தொடக்கம் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  பெற்றோரிடம் வழங்கினார்.
தருமபுரி நகருக்குட்பட்ட 33வார்டுகளை சேர்ந்த 601 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு கழக மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில்  601 பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு  திட்டம் என மொத்தம் 601 பிள்ளைகளுக்கு கணக்கினை தொடங்கினார்.அதனையடுத்து இன்று தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன்  ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில்  மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன்,பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    13 hrs ago
  • தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய் வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள் போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்
    1
    தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம்  சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய்  வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று  மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள்  போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்
    user_Balaji studio
    Balaji studio
    Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • மணப்பாறை அருகே தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம். வருவாய்துறையினர் நேரில் ஆய்வு திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை அவ்வபோது விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பொன்னக்கோன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆலீஸ் சோபியா ராணி (49) என்பவரின் வீட்டின் ஓட்டு வீட்டில் மேல் புறத்தில் இருந்து ஓடுகள் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் அவரும் அவரது மகனும் அருகில் உள்ள வீட்டில் தூங்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் ஓடுகள் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதே போல் அருகில் ஜான்பால் என்பவரின் வீட்டின் மேல்புறத்தில் இருந்த ஓடுகள் இடிந்து விழுந்தது. இதனால் இரண்டு வீடுகளும் சேதமடைந்ததை அடுத்து வருவாய்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மிகவும் வறுமையில் உள்ள நிலையில் தாங்கள் வீடு இடிந்து விட்டதால் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், அரசு வீடு வழங்கிட வேண்டும் என்று ஆலீஸ் சோபியா ராணி அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    மணப்பாறை அருகே
தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம்.
வருவாய்துறையினர் நேரில் ஆய்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை அவ்வபோது விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பொன்னக்கோன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆலீஸ் சோபியா ராணி (49) என்பவரின் வீட்டின் ஓட்டு வீட்டில் மேல் புறத்தில் இருந்து ஓடுகள் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் அவரும் அவரது மகனும் அருகில் உள்ள வீட்டில் தூங்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் ஓடுகள் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதே போல் அருகில் ஜான்பால் என்பவரின் வீட்டின் மேல்புறத்தில் இருந்த ஓடுகள் இடிந்து விழுந்தது. இதனால் இரண்டு வீடுகளும் சேதமடைந்ததை அடுத்து வருவாய்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மிகவும் வறுமையில் உள்ள நிலையில் தாங்கள் வீடு இடிந்து விட்டதால் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், அரசு வீடு வழங்கிட வேண்டும் என்று ஆலீஸ் சோபியா ராணி அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    56 min ago
  • இது உண்மையா இல்லை AI யா.
    1
    இது உண்மையா இல்லை AI யா.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம். கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி  27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"
    1
    தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்.
கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி  27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    5 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தில் மூன்றாம் திருநாள் இன்று கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத எணெய்க்காப்பு உற்சவம் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவமான எண்ணெய்ககாப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்று பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தார். ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதத்தில் 8 நாட்கள் நடைபெறும் இந்த எட்டு நாட்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே உள்ள எண்ணை காப்பு உற்சவம் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான எண்ணெய் காப்பு உற்சவம் கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் திருநாள் இன்று திருமுக்குளம் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் கண்ணன் திருக்கோளத்தில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளினார். தொடர்ந்து நடைபெற்ற எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஒரு நாட்டின் மகாராணிக்கு எவ்வித உபசாரங்கள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும். அதாவது காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சுத்தம் செய்வது, தலைக்கு எண்ணெய் சாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் பட்டாச்சாரியார் ஸ்ரீ ஆண்டாளுக்கு செய்விப்பார் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் நாள் சிறப்பு திருமஞ்சனத்தில் உற்சவருக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்றைய சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தில் மூன்றாம் திருநாள் இன்று கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத எணெய்க்காப்பு உற்சவம் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவமான எண்ணெய்ககாப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்று பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தார். ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதத்தில் 8 நாட்கள் நடைபெறும் இந்த எட்டு நாட்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே உள்ள எண்ணை காப்பு உற்சவம் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். 
இந்நிலையில் இந்த வருடத்திற்கான எண்ணெய் காப்பு உற்சவம் கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் திருநாள் இன்று திருமுக்குளம் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் கண்ணன் திருக்கோளத்தில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளினார். தொடர்ந்து நடைபெற்ற எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஒரு நாட்டின் மகாராணிக்கு எவ்வித உபசாரங்கள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும். 
அதாவது காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சுத்தம் செய்வது, தலைக்கு எண்ணெய் சாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் பட்டாச்சாரியார் ஸ்ரீ ஆண்டாளுக்கு செய்விப்பார்  
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் நாள் சிறப்பு திருமஞ்சனத்தில் உற்சவருக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்றைய சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சியில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    14 hrs ago
  • கள்ளக்காதல் விவரம் கொழுந்தியாளை கொன்று புதைத்த கட்டிட காண்ட்ராக்டர் கைது தர்மபுரி ஓசஅள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ராஜேஸ்வரி இவர் தீடீரென சில நாட்களுக்கு முன்பு மாயமானார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் கல்லக்கொள்ளை மேடு பகுதியில் ராஜேஸ்வரி அடித்து கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று மாலை காவல் ஆய்வாளர் தமிழரசி காவலர்கள் அங்கு சென்று புதைக்கப்பட்ட இடத்தில் தோன்றியது ராஜேஸ்வரி உடலை மீட்டனர் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் ராஜேஸ்வரியின் அக்கா கணவர் அனுமந்தன் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேஸ்வரியை கொன்று புதைத்ததாக இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
    1
    கள்ளக்காதல் விவரம் கொழுந்தியாளை கொன்று புதைத்த கட்டிட காண்ட்ராக்டர் கைது
தர்மபுரி ஓசஅள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ராஜேஸ்வரி இவர் தீடீரென சில நாட்களுக்கு முன்பு மாயமானார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் கல்லக்கொள்ளை மேடு பகுதியில் ராஜேஸ்வரி அடித்து கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று மாலை காவல் ஆய்வாளர் தமிழரசி காவலர்கள் அங்கு சென்று புதைக்கப்பட்ட இடத்தில் தோன்றியது ராஜேஸ்வரி உடலை மீட்டனர் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் ராஜேஸ்வரியின் அக்கா கணவர் அனுமந்தன் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேஸ்வரியை கொன்று புதைத்ததாக இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.