குண்டடம் கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் சாலை விபத்து வேனில் இருந்த மாணவர்கள் மீட்பு. கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் விபத்து – 7 மின்கம்பங்கள் சேதம், மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு திருப்பூர் மாவட்டம் கத்தாங்கண்ணி அருகே இன்று காலை தேன்மலர் பள்ளி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. சூரியநல்லூரைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் இயக்கிய வேன், ருத்ராவதி முதல் ஜோதியம்பட்டி வழியாக கந்தகன்னி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது. அந்த நேரத்தில் வேனில் 5 பள்ளி மாணவர்கள், டிரைவர் மற்றும் கிளீனர் இருந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் மொத்தம் 7 மின்கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டடம் கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் சாலை விபத்து வேனில் இருந்த மாணவர்கள் மீட்பு. கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் விபத்து – 7 மின்கம்பங்கள் சேதம், மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு திருப்பூர் மாவட்டம் கத்தாங்கண்ணி அருகே இன்று காலை தேன்மலர் பள்ளி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. சூரியநல்லூரைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் இயக்கிய வேன், ருத்ராவதி முதல் ஜோதியம்பட்டி வழியாக கந்தகன்னி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து
சாலையோர மின்கம்பத்தில் மோதியது. அந்த நேரத்தில் வேனில் 5 பள்ளி மாணவர்கள், டிரைவர் மற்றும் கிளீனர் இருந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் மொத்தம் 7 மின்கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- தேனியில் 13வது நாளாக தொடரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி" அதன் மூலம்தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் * தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் காலவரையற்ற போராட்டத்தின் 13 வது நாளில், தேனி ஆட்சியர் அலுவலகம் முன், சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி " அதன் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த ஃபெப்ரவரி மூன்றாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் இந்த "ஓசை எழுப்பும்" போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாய் அமைந்துள்ளது.1
- Post by Senthilkumarankumaran1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது1
- ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் தீமிதி விழா !! கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கை மாருளாளி வினோதினி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் கரகம் பாலித்து, விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், தீமிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருநங்கைகள் வழிபடும் இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன் மங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் பல்லடத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு , அது தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் பல்லடத்தில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்1